பாபு அருங்காட்சியகம், விஜயவாடா
பாபு அருங்காட்சியகம் (முன்னர்‘ விக்டோரியா ஜூபிலி மியூசியம் ) என்று அழைக்கப்பட்டது. இது ஒரு தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சிகம் இந்தியாவில் ஆந்திரப்பிரதேசத்தில் விஜயவாடாவில் எம்ஜி சாலையில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர், இல்லஸ்ட்ரேட்டர், கார்ட்டூனிஸ்ட் மற்றும் எழுத்தாளரான பாபு (திரைப்பட இயக்குனர்) அவர்களின் நினைவாக இந்த அருங்காட்சியகத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த அருங்காட்சியகம் தொல்பொருள் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது இந்த அருங்காட்சியகத்தில் அதிக எண்ணிக்கையிலான புத்த மற்றும் இந்து மதம் சார்ந்த சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் கலைப்பொருள்கள் காணப்படுகின்றன. இந்த கலைப்பொருள்களில் சில கி.பி.2 ஆவது மற்றும் 3ஆவது நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. இந்த அருங்காட்சியகக் கட்டிடத்தின் கட்டமைப்பு இந்தோ-ஐரோப்பிய கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது. நூறு ஆண்டுகளுக்கும் மேலான பெருமையையுடைய கட்டட அமைப்பாக அது உள்ளது. .[3]
பாபு அருங்காட்சியகம் | |
---|---|
அமைவிடம் | விஜயவாடா, ஆந்திரப்பிரதேசம், இந்தியா |
உருவாக்கப்பட்டது | 1887 |
Operated by | தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகங்கள் துறை[1] |
நிலை | தற்போது கட்டுமானம் நடைபெற்றுவருகிறது[2] |
வரலாறு
தொகு1887 ஆம் ஆண்டின்போது நடைபெற்ற விக்டோரியா மகாராணியின் பொன்விழாவின் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்திற்கான அடிக்கல்1887 ஜூன் 27 அன்று கிருஷ்ணா மாவட்ட மாவட்ட ஆட்சியர் ராபர்ட் செவெல் அடிக்கல் நாட்டப்பட்டது.[4] ஸ்ரீ பிங்காலி வெங்கய்யா 1921 இல் இந்த கட்டடம் அமைந்துள்ள இடத்தில் மகாத்மா காந்திக்கு மூன்று வண்ணக் கொடியை வழங்கினார். இந்த கட்டிடம் ஆரம்பத்தில் தொழில்துறை கண்காட்சிகளை நடத்திவைப்பதற்காகப் பயன்பட்டது. இந்த அருங்காட்சியகம் 1962 ஆம் ஆண்டில் ஆந்திர அரசு தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகங்களின் நிர்வாகத்தின்கீழ் ஒரு தொல்பொருள் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.
சிறப்புகள்
தொகுமூன்று வண்ணக்கொடி வழங்கப்பட்ட நிகழ்வின்போது தேசியத் தலைவர்களான மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், லாலா லஜ்பத்ராய், பாபு ராஜேந்திர பிரசாத், தங்குருட்டி பிரகாசம் பந்துலு உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த மூன்று வண்ணக்கொடியில் தான் மகாத்மகா காந்தி சக்கரத்தை இணைத்து அதனை இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பின் கொடியாக அறிவித்தார். அது பின்னர் 22 சூலை 1947இல் இந்திய தேசியக்கொடியாக அறிவிக்கப்பட்ட பெருமையைப் பெற்றது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள அனைத்து காட்சிப்பொருள்கள் பாரம்பரியக் கட்டடத்தில் இரண்டு தளங்களிலும், பின்னர் கட்டப்பட்ட இணைப்புக்கட்டடத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள காட்சிக்கூடங்களில் சிற்பத் தோட்டமும் ஒன்றாகும். அதில் 93 கல் சிற்பங்களும், பிற சிற்பங்களும் உள்ளன. அவை சாதவாகனர் காலம் (கி.பி.2ஆம் நூற்றாண்டு) தொடங்கி பிற்கால விஜயநகர் காலம் (கி.பி.17ஆம் நூற்றாண்டு)வரையிலானவையாக உள்ளன. அவை பலவகையான கற்களால் செதுக்கப்பட்டவையாகும். தரை தளத்தில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் உலோகங்களால் ஆனவை உள்ளிட்ட பல அடங்கும். முதல் தளத்தில் ஐரோப்பிய மற்றும் இந்திய ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆயுதங்கள் மற்றும் போர் கருவிகளுக்காக ஒரு தனி காட்சிக்கூடம் செயல்பட்டுவருகிறது.[5]
ஓவியங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள்
தொகுஇந்த அருங்காட்சியகத்தில் வரலாற்று காட்சியகங்கள், கல்வெட்டு எழுத்துக்கள், நாணயங்கள், வாள், உடல் கவசங்கள், பாதுகாப்பு கவசங்கள், ஆயுதங்கள், அலங்காரப் பொருள்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்ட வகையில் உள்ளன. ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள அல்லூரு என்னுமிடத்தைச் சேர்ந்த, வெள்ளை சுண்ணாம்புக்கல்லால் ஆன நின்ற கோலத்தில் உள்ள (கி.பி.3 ஆம் 4 ஆம் நூற்றாண்டு), புத்தர் சிலை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளவற்றில் ஒன்றாகும்.[6] இறைவன் சிவன் மற்றும் தேவி துர்கா வதம், மகிஷாசுரன் (கி.பி.2 ஆவது நூற்றாண்டு) உள்ளிட்ட பல சிற்பங்களை இந்த அருங்காட்சியகத்தில் காணலாம்.[7]
இவற்றையும் பார்க்கவும்
தொகு- சலார் ஜங் அருங்காட்சியகம், ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம்
- தொல்லியல் அருங்காட்சியகம், சந்திரகிரி, ஆந்திரப் பிரதேசம்
- தொல்லியல் அருங்காட்சியகம், அமராவதி, ஆந்திரப் பிரதேசம்
- தொல்லியல் அருங்காட்சியகம், கொண்டாப்பூர், ஆந்திரப் பிரதேசம்
- தொல்லியல் அருங்காட்சியகம், நாகார்சுனகொண்டா, ஆந்திரப் பிரதேசம்
- தொல்லியல் அருங்காட்சியகம், தெலுங்காணா, ஆந்திரப் பிரதேசம்
- இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்
- இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்களின் பட்டியல்
குறிப்புகள்
தொகு- ↑ "Department of Archaeology & Museums". இந்தியா: Government of Andhra Pradesh. பார்க்கப்பட்ட நாள் 14 June 2017.
- ↑ "etymology of museum". myvijayawada. பார்க்கப்பட்ட நாள் 12 June 2014.
- ↑ "Museum info". myvijayawada.org. பார்க்கப்பட்ட நாள் 12 June 2014.
- ↑ Bapu Museum, Vijayawada
- ↑ Tourist Guide to Andhra Pradesh. Sura Books. பார்க்கப்பட்ட நாள் 24 January 2016.
- ↑ "Museum features". discoveredindia.com. பார்க்கப்பட்ட நாள் 12 June 2014.