பாம்புப் பண்ணை

பாம்புப் பண்ணை (snake farm) என்பது பலவிதமான பாம்புகளை ஓரிடத்தில் வளர்த்து இனப்பெருக்கம் செய்யும் இடமாகும். இது பெரும்பாலும் ஆராய்ச்சி நோக்கத்திற்காகவும், பாம்பின் நச்சிற்கு எதிரான நச்சு உருவாக்கப் பாம்பின் நச்சினைச் சேகரிப்பதற்காகவும் தோற்றுவிக்கப்பட்டதாகும். பாம்புப் பண்ணைகள் சுற்றுலாத் தலங்களாக உள்ளன. அமெரிக்கா, தாய்லாந்து மற்றும் சீனாவில் பாம்புப் பண்ணைகள் அதிக அளவில் உள்ளன.

பாம்பிலிருந்து நச்சு சேகரிப்பு

அமெரிக்காவில்

தொகு
  • விலங்கு உலகம் மற்றும் பாம்புப் பண்ணை - நியூ பிரவுன்ஃபெல்ஸ், டெக்சாஸ்

சீனாவில்

தொகு
 
சீன உணவகங்களுக்கு பாம்புகள் உயிருடன் வழங்கப்படுகின்றன
  • ஜிசிகியோ (子思 桥) ஜின்ஷி நகரம், டெக்கிங் கவுண்டி, ஜெஜியாங், ஜெஜியாங்கில் உள்ள கிராமம். இவை "பாம்பு கிராமம்" என்று அழைக்கப்படுகிறது. ஜிசிகியாவோ சீனாவின் பாம்பு வளர்ப்பின் முதன்மை மையமாகப் புகழ்பெற்ற இடமாகும். இந்த இடத்தில் உள்ளூர் வாசிகள் 1980லிருந்து பாம்புகளை வளர்த்து வருகின்றனர். தற்போது, சிசிகியாவோவில் சுமார் 800 பேர் பாம்பு வளர்க்கும் தொழில் செய்கிறார்கள். இங்கு ஆண்டுக்கு 3 மில்லியன் பாம்புகள் வளர்க்கப்படுகின்றன. உணவகங்களுக்கு நேரடியாகப் பாம்புகள் வழங்கப்படுகின்றன. இவை உலர்ந்த அல்லது எத்தனாலில் பாதுகாக்கப்படுகின்றன. இவை பாரம்பரிய சீன மருந்துகளின் உற்பத்தியாளர்களுக்கு விற்கப்படுகின்றன. பாம்பினுள் உட்செலுத்தப்பட்ட மதுவும் இங்குத் தயாரிக்கப்படுகிறது. [1] [2]
  • டெக்கிங் பாம்புக் கலாச்சார அருங்காட்சியகம் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. [3]

மேலும் காண்க

தொகு
  • ராணி சாவோபா நினைவு நிறுவனம் (தாய்லாந்து)
  • சைபீரியன் பாம்பு

மேற்கோள்கள்

தொகு
  1. China's 'Snake Village' seeks New Year riches, AFP, 2013-02-10
  2. 世界第一蛇村:800人与300万条蛇的神奇生活 ("World's No. 1 Snake Village: mysterious life of 800 people and over 3 million snakes"), travel.sina.com.cn, 2010-10-21
  3. 蛇文化博物馆可以让你看得“头皮发麻”[தொடர்பிழந்த இணைப்பு] (Snake Culture Museum will make your hair stand on end), 2012-05-07

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்புப்_பண்ணை&oldid=3220448" இலிருந்து மீள்விக்கப்பட்டது