பாம்பே லெட்சுமி இராஜகோபாலன்
பாம்பே லெட்சுமி இராஜகோபாலன் (பிறப்பு 12 மார்ச் 1959) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத் தலைநகரான மும்பையில் பிறந்த முன்னணி கர்நாடக குரலிசைப் பாடகி ஆவார்.
லெட்சுமி இராஜகோபாலன் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | மதுங்கா, மும்பை, இந்தியா | 12 மார்ச்சு 1959
இசை வடிவங்கள் | கர்நாடக இசை |
தொழில்(கள்) | கர்நாடகக் குரலிசைக் கலைஞர் |
இசைத்துறையில் | 1970 முதல் தற்போது வரை |
இணையதளம் | http://www.bombaylakshmi.tripod.com/ |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி
தொகுலெட்சுமி மும்பையின் புறநகர்ப் பகுதியான மதுங்காவில் திருமதி. ராதா மற்றும் திரு டி.வி.பஞ்சாபகேசன் ஆகியோருக்கு மகளாகப் பிறந்த அவருக்கு நான்கு உடன் பிறந்த சகோதரிகள் உள்ளனர்.அவர்கள் இசையிலும் கௌரவிக்கப்பட்டனர். அவர் தனது தாயிடம் இருந்து தனது மூன்று வயதில் கர்நாடக இசை பயிலத் தொடங்கினார். மேலும் தாயைப் போலவே அவரது தந்தையாலும் இசைக்கற்றலை சமமாக ஆதரித்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் வர்த்தகம் மற்றும் வங்கியியல் படிப்பான சி.ஏ.ஐ.ஐ.பி (CAIIB) பாடங்களில் பட்டம் பெற்றார். மும்பையில் உள்ள பாரதிய இசை மற்றும் நுண்கலை நிறுவனத்தில் ஐந்து ஆண்டு இசைப் படிப்பை முடித்தார். பின்னர் அவர் இசையின் உட்கூறுகளான ராகம், தாளம் மற்றும் பல்லவி தொடர்கான 2 வருட மேம்பட்ட மற்றும் கடுமையான பயிற்சியை திருமதி டி.ஆர். பாலாமணி என்பவரிடம் மேற்கொண்டார்.
லெட்சுமி தனது இளம் வயதிலேயே ஒரு பெரிய போட்டியில் வென்றார் மேலும் தனது எட்டு வயதில் பாரத் ரத்னா எம்.எஸ். சுபுலட்சுமியிடமிருந்து பரிசு வாங்கியுள்ளார்.
பரோடா வங்கியில் நிர்வாக பணியாளராக பணிபுரிந்த அவா் கர்நாடக இசையில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடர பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
பாடும் நடை
தொகுஇசைக் கச்சேரிகளின் போது லெட்சுமி எந்த விதமான குறிப்புகளையும் வைத்திருக்க மாட்டார். இது அவரது கர்நாடக இசை ஆழ்ந்த அறிவினை வெளிப்படுத்துவதாக உள்ளது. குரல் வளம் கம்பீரமாகவும் இனிமையாகவும் இருக்கும் அவருடைய பாடும் பாணி புகழ்பெற்ற கர்நாடக பாடகர்களான செம்மங்குடி மாமா, ம.ச. சுப்புலெட்சுமி., தா.கி. பட்டம்மாள் ஆகியோர்களின் இசை மரபுகளைப் பின்பற்றி அமைந்ததாக இருக்கும்.
நிகழ்ச்சிகள்
தொகுதிருமதி. லெட்சுமி இராஜகோபாலன் பல்வேறு புகழ்பெற்ற மேடைகள் உட்பட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளார் ஜெயா தொலைக்காட்சி, அம்ரிதா தொலைக்காட்சி, ஸ்ரீ சங்கரா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சி (SVBC) , டிடி பொதிகை தொலைக்கபாட்சி மற்றும் ஏசியாநெட் . அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் கேந்திராவில் போன்ற ஊடகஙடகளில் முதல் தர( ' ஏ ' கிரேடு) கலைஞராக இருந்துள்ளார். [நவி மும்பையில்] வசிப்பதால், மும்பை மற்றும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து பிரபலமான சபைகளிலும் தவறாமல் பாடி வருகிறார். மும்பையில் சிவாலி கலாச்சார சங்கம், கலாமஞ்சரி மற்றும் நவராசா மியூசிக் அகாடமியில் சொற்பொழிவு மற்றும் செயல் விளக்க பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தியுள்ளார்.
லெட்சுமியின் குரல் இந்திய கர்நாடக பாரம்ரிய பாடல்களுக்கு நன்றாக ஒத்துப் போகிறது. அவர் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட ஏழு மொழிகளில் பாடியுள்ளார். மிருதங்கம், கங்கிரா, மற்றும் தவில் ஆகிய இசைக் கருவிகளை இசைக்க துணை கலைஞர்களாக தன்னுடன் அடிக்கடி வரும் பல இளம் மற்றும் வளரும் மாணவர்களை அவர் ஊக்குவித்து வருகிறார்.
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
தொகுமியூசிக் அகாதெமி, இந்தியன் நுண்கலை மன்றம் , சென்னை, ஸ்ரீ சண்முகானந்தா நுண்கலை சபை மும்பை மற்றும் பிற சபாக்கள் நடத்திய பல்வேறு போட்டிகளில் லெட்சுமி பல தங்கப் பதக்கங்களையும், மதிப்புமிக்க தம்புரா பரிசையும் வென்றுள்ளார்.
சில குறிப்பிடத்தக்க விருதுகள்,
சென்னை மகாராஜாபுரத்தில் தபேலா தத்தாச்சாரி விருது, ஒரு மூத்த இசைக்கலைஞருக்கான விஸ்வநாத ஐயர் விருது. மற்றும் துபாயிலிருந்து டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சர்வதேச சிறப்பு விருது.
பட்டங்கள்
தொகுஅவருக்கு " ஆஸ்தனா விதுஷி " என்ற பட்டமும், பதரி சகாதபுரம் ஸ்ரீவித்யா பீட்டத்தின் ஜகத்குரு சங்கராச்சாரியாரால் " சங்கீதா விசாரத " என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சி காமகோட்டி பீட்டத்தின் ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதியால் " சங்கீதா சேவமணி" விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாகனேரி, ஸ்ரீ ஸ்ரீ வனமாமலை ஜீயர் ஸ்வாகல் அவா்கள் "அஸ்தானா விதுஷி" என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கியுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் அவருக்கு "சங்கீதா கோவிதா" என்ற பட்டமும் வழங்கி பெருமைப்படுத்தழயுள்ளது.
ஆடியோ வெளியீடுகள்
தொகுஅவரது வரவுக்காக, அவர் பின்வரும் பல இசை்தொகுப்பு குறுந்தகட்டை வெளியிட்டுள்ளார்.
1. பக்தி மஞ்சரி மூன்று தொகுதிகள் 1,2,3.
2. காஞ்சி சங்கரா
3. தேவி சரணம்
4. கர்நாடக பாரம்பரிய இசை
செய்தி வெளியீடுகள்
தொகுஅவரது இசை நிகழ்ச்சிகள் மிகவும் மதிப்பிடப்பட்டுள்ளன மற்றும் பல நேர்மறையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் சில இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. டி.என்.ஏ-நவி மும்பை : 20 நவம்பர் 2007 கீர்த்தனஞ்சலியின் கர்நாடக உபசரிப்பு பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறது
2. புதிய பாம்பே −23. 11.2007 லட்சுமி ராஜகோபாலனின் தீபாவளி இசை பட்டாசு
3. தி ஹிந்து 12 ஜனவரி 2007 ஒரு மந்திர எழுத்துப்பிழை
மேற்கோள்கள்
தொகு- Syed Muthahar, Saqaf (12 January 2007). "Casting a magic spell". தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105025510/http://www.hindu.com/fr/2007/01/12/stories/2007011200030300.htm. பார்த்த நாள்: 10 July 2009.
- B.R.C, Iyengar (30 May 2008). "Music that marks a puritan". தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105033504/http://www.hindu.com/fr/2008/05/30/stories/2008053050170300.htm. பார்த்த நாள்: 10 July 2009.
- WMC News Dept. (20 September 2008). "The Navratri Music Festival in Mayur Vihar – Delhi (India) 2008" இம் மூலத்தில் இருந்து 5 டிசம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081205033058/http://worldmusiccentral.org/article.php/navratri_music_festival_2008. பார்த்த நாள்: 10 July 2009.