பாரத் காப்பீட்டு கட்டடம்
பாரத் காப்பீட்டு கட்டடம் (Bharat Insurance building) இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள ஒரு பாரம்பரிய கட்டடம் ஆகும். இந்தக் கட்டடம் 1897 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. முதலில் கார்டில் பில்டிங் என்று இந்தக் கட்டடம் அழைக்கப்பட்டது. இது இந்தோ சரசனிக் கட்டடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இது இந்திய பொருட்களைக் கொண்டு முஸ்லீம் வடிவமைப்பினைக் கொண்டு இது அமைக்கப்பட்டதாகும்.[1]
பாரம்பரிய ஆர்வலர்களின் மனுவைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் இந்தக் கட்டடம் இடிக்கப்படுவதை நிறுத்தியுள்ளது.
வரலாறு
தொகுகண்ணாடி பேனல்கள், குவிமாடங்கள், கூரான சிகரத்தைக் கொண்ட அமைப்புகள், வளைவுகள், வராண்டாக்கள் மற்றும் 100 அடி உயரம் கொண்ட தூபி போன்ற அமைப்புகள் ஆகிய அமைப்புகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு அமைந்த இந்தக் கட்டடம் 1897 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. ஒரு முறை மிகவும் சிறப்பான வணிக மையமாக விறுவிறுப்பாக செயல்பட்டு வந்தது. நாளடைவில் மோசமான பராமரிப்பு காரணமாக மோசமடையத் தொடங்கியது. 1956 ஆம் ஆண்டில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்.ஐ.சி) வசம் வருவதற்கு முன்பு இந்த உரிமை பலரிடம் மாற்றம் பெற்று வந்தது. 1998 ஆம் ஆண்டில், கட்டமைப்பின் பலவீனம் காரணமாக அதில் இருப்போர் அந்த வளாகத்தை காலி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர், மேலும் ஆயுள் காப்பீட்டுக் கழகம் 2006 ஆம் ஆண்டில் இந்தக் கட்டடத்தை இடிக்க திட்டமிட்டது.[2] கட்டடக்கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை (இன்டாக்) பொது நலன் வழக்கைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் அது இடிக்கப் படுவதைத் தடுத்து நிறுத்தியது. கட்டடக்கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை, கட்டடத்தை பாதுகாக்க ஓர் இடைக்கால உத்தரவைப் பெற்றது. தொடர்ந்து ஆயுள் காப்பீட்டுக் கழகம், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதனை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு திருப்பி அனுப்பியது. உயர்நீதிமன்றம் 2009 ஆம் ஆண்டில் ஒரு விரிவான உத்தரவை பிறப்பித்தது, அதன்படி இந்த கட்டடம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாநில அரசிடம் கேட்டுக் கொண்டதுடன், பிற பாரம்பரிய கட்டமைப்புகளின் பாதுகாப்பைக் கையாள ஒரு பாதுகாப்புக் குழுவையும் அமைக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. பாரம்பரியக் குழு உயர்நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில், அதன் பாரம்பரிய மதிப்பை மீண்டும் வலியுறுத்தி, கட்டடம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியது. இதற்கிடையில், ஆயுள் காப்பீட்டுக் கழகம் 2010 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் கட்டடத்தின் கட்டமைப்பு தொழில்நுட்பரீதியாக சரியாக இல்லை என்று அதில் குறிப்பிட்டிருந்தது. ஆகவே அந்தக் கட்டடத்தை சொத்தை மறுவடிவமைக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அவ்வாறு மறுவடிவம் பெறும் நிலையில் இது பழைய கட்டடத்தை வடிவமைப்பில் ஒத்திருக்கும் என்றும் கூறியது. மேலும் எந்த ஒரு இடத்திலும் இந்த கட்டடம் ஒரு பாரம்பரிய கட்டமைப்பு என்று பட்டியலிடப்படவில்லை என்றும் எடுத்துக் கூறியது. மேலும் அந்த இடத்தில் எட்டு மாடியைக் கொண்ட ஒரு வளாகத்தைக் கட்டும் யோசனையை முன்மொழிந்தது. பாரம்பரிய மசோதாவை இறுதி செய்வது குறித்து அரசாங்கம் அக்டோபர் 2010 இல் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.[3]
2010 ஆம் ஆண்டில்சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்றுசிறப்பு முக்கிய தீர்ப்பினை வழங்கியது. அதன்படி அந்தக் கட்டடம் 400-க்கும் மேற்பட்ட பாரம்பரிய கட்டமைப்புகளின் தொகுப்பில் உள்ளடங்கியது என்று கூறியது. மேலும் அதற்கு வழங்கப்பட்ட 'ஏ' தரச் சான்றிதழும் உறுதி செய்யப்பட்டது.[4]
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "Chidambaram's bid to save Chennai's heritage". NDTV Travels Beta (Indo-Asian News Service). 25 August 2008. http://www.ndtv.com/ndtvtravels/Story.aspx?pageheader=news&sub_category=&ID=161. பார்த்த நாள்: 3 Dec 2011.
- ↑ Sridhar, Asha (29 August 2012). "Will Bharat Insurance Building survive the coming monsoon?". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/news/cities/chennai/article3832901.ece. பார்த்த நாள்: 30 Aug 2012.
- ↑ Soman, Sandhya (19 April 2011). "Rain or shine, Bharat Insurance building weathers it all". The Times of India (Chennai: The Times Group) இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103215109/http://articles.timesofindia.indiatimes.com/2011-04-19/chennai/29446934_1_heritage-buildings-heritage-structures-heritage-value. பார்த்த நாள்: 30 Aug 2012.
- ↑ "Will Union Finance Minister keep his promise?". Madras Musings XXII (9). 16–31 August 2012. http://www.madrasmusings.com/will-union-finance-minister-keep-his-promise.html. பார்த்த நாள்: 30 Aug 2012.[தொடர்பிழந்த இணைப்பு]