பண்பாட்டு மரபுவளம்
பண்பாட்டு மரபுவளங்கள் (Cultural Heritage) என்பவை, ஒரு குழு அல்லது சமூகம் அதன் முந்தைய தலைமுறைகளிடம் இருந்து மரபுரிமையாகப் பெற்று, அவற்றால் பயன்பெற்று, பேணி, விருத்தி செய்து அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கும் வளங்கள் ஆகும். இவை கட்டிடம், கருவிகள், சிற்பம் போன்ற இயல் வளங்களாகவோ (Physical Artifacts), நாட்டுப்புறப் பாடல், பழமொழிகள், தொழிற்கலைகள் போன்ற புலப்படா வளங்கள் மற்றும் பண்புகளாகவோ(Intangible Resources or Attributes), பண்பாட்டு முக்கியத்துவம் பெற்ற இயற்கை வளங்களாகவோ (Natural Heritage) அமையலாம்.[1] இந்தப் பண்பாட்டு மரபுவளங்களைப் பாதுகாப்பது பண்பாட்டு நிறுவனங்களின் இலக்கு ஆகும்.

யாழ் நூலகம் 1981 இல் எரிக்கப்படும் முன்னர் இருந்த தோற்றம். எரிக்கப்பட்ட போது 97 000 மேற்பட்ட படைப்புகள், மீட்டெடுக்க முடியாத பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த சுவடிகளோடு அழிந்தது.