பாரா-கிரெசிடின்
பாரா-கிரெசிடின் (para-Cresidine) என்பது CH3OC6H3(CH3)NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. அமீன் மற்றும் மெத்தாக்சி வேதி வினைக்குழுக்கள் இரண்டின் அம்சங்களையும் பாரா-கிரெசிடின் சேர்மம் கொண்டிருக்கிறது. சாயங்கள் மற்றும் நிறமிகள் தயாரிப்பின்போது ஓர் இடைநிலை வேதிப்பொருளாக இது உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-மெத்தாக்சி-5-மெத்திலனிலின்
| |
இனங்காட்டிகள் | |
120-71-8 | |
ChemSpider | 13869579 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C19216 |
பப்கெம் | 8445 |
வே.ந.வி.ப எண் | BZ6720000 |
| |
பண்புகள் | |
C8H11NO | |
வாய்ப்பாட்டு எடை | 137.179 |
தோற்றம் | வெண்மையான படிகங்கள் |
உருகுநிலை | 51.5 °C (124.7 °F; 324.6 K) |
கொதிநிலை | 235 °C (455 °F; 508 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு4-குளோரோதொலுயீனை வேதி வினைகளுக்கு உட்படுத்தி சில படிநிலைகளில் இதை தயாரிக்க முடியும். முதலில் 4-குளோரோதொலுயீன் நைட்ரோயேற்றம் செய்யப்படுகிறது. வினையில் உருவாகும் 3-நைட்ரோ-4-குளோரோதொலுயீன் மெத்தாக்சைடு மூலப்பொருட்களுடன் வினையில் ஈடுபட்டு 4-மெத்தாக்சி-2-நைட்ரோதொலுயீன் உருவாகிறது. பின்னர் இந்த நைட்ரோ சேர்மம் ஒடுக்கப்பட்டு பாரா-கிரெசிடின் என்ற அனிலின் கிடைக்கிறது [1].
வினை
தொகுபாரா-கிரெசிடினுடன் ஒலீயம் எனப்படும் புகையும் கந்தக அமிலத்தைச் சேர்த்து சல்போனேற்றம் செய்தால் 4-அமினோ-5-மெத்தாக்சி-2-மெத்தில்பென்சீன்சல்போனிக் அமிலம் உருவாகிறது. இந்த சல்போனிக் அமிலம் உணவுக்கு சிவப்பு நிறமூட்டும் அலூரா சிவப்பு என்ற அசோ சாயத்தை தயாரிக்க உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாகும் [1].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 P. F. Vogt, J. J. Gerulis, "Amines, Aromatic" in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a02_037
புற இணைப்புகள்
தொகு- International Chemical Safety Card, Center for Disease Control