பாரா-மெந்தேன்
பாரா-மெந்தேன் (p-Menthane) என்பது (CH3)2CHC6H10CH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்ட்டால் விவரிக்கப்படும் ஒரு நீரகக்கரிமம் ஆகும். பாரா-சிமென், டெர்பினோலின்கள், பில்லான்டரின்கள், இலிமோனின்கள் போன்ற பல்வேறு வகை டெர்பினாய்டுகளை ஐதரசனேற்றம் அல்லது ஐதரசனாற்பகுப்பு ஆகிய வினைகளுக்கு உட்படுத்தி பாரா-மெந்தேன் தயாரிக்கப்படுகிறது. நிறமற்ற திரவமான இது நறுமணமுள்ள பெருஞ்சீரகம் போன்ற வாசனையுடன் உள்ளது. இயற்கையாகவே தோன்றும் பாரா-மெந்தேன் குறிப்பாக யூகலிப்டசு பழங்களின் கசிவுகளில் காணப்படுகிறது. மேலும், இச்சேர்மம் பொதுவாக ஒருபக்க மற்றும் மறுபக்க மாற்றியன்களின் கலவையாகக் காணப்படுகிறது. இவை இரண்டும் மிகவும் ஒத்த பண்புகளைக் கொண்டுள்ளன. ஐதரோபெராக்சைடு தயாரிப்பில் பாரா-மெந்தேன் ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது. இந்த ஐதரோபெராக்சைடுகள் பலபடியாக்கல் வினைகளை முன்னெடுக்கின்றன. [1]
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
1-ஐசோபுரோபைல்-4-மெத்தில்வளையயெக்சேன்
| |||
இனங்காட்டிகள் | |||
99-82-1 | |||
ChemSpider | 7179 | ||
EC number | 202-790-4 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 7459 | ||
| |||
UNII | CGW5GN8TXU | ||
பண்புகள் | |||
C10H20 | |||
வாய்ப்பாட்டு எடை | 140.27 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 0.8086 கி/செ.மீ3 | ||
கொதிநிலை | 168 °C (334 °F; 441 K) | ||
கரிமக் கரைப்பான்கள்-இல் கரைதிறன் | கரையும் | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மேற்கோள்கள்
தொகு- ↑ "Terpenes". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2005). Wiley-VCH. DOI:10.1002/14356007.a26_205.