பாரெட்டீனா

பாரெட்டீனா என்பது, கட்டலோனியா, வலென்சியச் சமூகம், பலியாரிக் தீவுகள், புரொவீன்சு, கோர்சிக்கா, சிசிலி, சார்டினியா, நேப்பிள்சின் ஒரு பகுதி, பால்க்கனின் ஒரு பகுதி, போர்த்துக்கல் போன்ற நடுநிலக்கடல் பகுதிகளில் வாழும் கிறித்தவப் பண்பாட்டைச் சேர்ந்த ஆண்களால் அணியப்படும் பாரம்பரியத் தொப்பி ஆகும். கட்டலோனியாவிலும், இபிசாவிலும், நாட்டுப் புறங்களில் வாழும் ஆண்களே 19 ஆம் நூற்றாண்டு வரை இதனை அணிந்தனர். இது ஒரு பையின் வடிவம் கொண்டது. கம்பளியினால் செய்யப்படும் இத் தொப்பிகள் வழமையாக சிவப்பு நிறம் கொண்டவையாகவும், சில வேளைகளில் ஊதா நிறமானவையாகவும் இருக்கின்றன.

பரட்டீனாக்களை அணிந்திருக்கும் ஆண்கள்


தற்காலத்தில், பாரெட்டீனா அன்றாட வாழ்வில் பொதுவாக அணியப்படுவதில்லை. ஆனால், பாரம்பரிய நடனங்களிலும், கட்டலன் மக்களின் அடையாளத்துக்காகவும் இது பயன்பட்டு வருகின்றது. 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், சல்வடோர் டாலி இதனை மீண்டும் பிரபலப் படுத்தினார். சில கிராமியக் கதைகளில் வரும் கதைமாந்தரும், பாரட்டீனாவை அணிவது உண்டு.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரெட்டீனா&oldid=1362500" இலிருந்து மீள்விக்கப்பட்டது