பாரை (மீன் குடும்பம்)

(பாரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாரை
தூளம் பாரை
(Carangoides malabaricus)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
பாரை
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

கினாத்தனோடன் இசுப்பெசியோசசு
நோக்கிரட்டீசு டக்டோர்
செலெனீ வோமெர்

பாரை (Trevally) என்பது பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். கடல் மீன்களான இவை அத்திலாந்திக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றில் வாழ்கின்றன. இக் குடும்பத்தைச் சேர்ந்த பல இனங்கள் வேகமாக நீந்தவல்லவை. இவை பவளப் பாறைத் திட்டுகளிலோ அல்லது திறந்த கடல் பகுதிகளிலோ வேறு உயிரினங்களைப் பிடித்து உணவாகக் கொள்கின்றன. இவற்றுட் சில, கடல் தளத்தைத் தோண்டி அங்குள்ள முதுகெலும்பிலிகளைப் பிடித்து உண்கின்றன.

இக் குடும்பத்தைச் சேர்ந்த மிகப் பெரிய மீனினமான காராங்சு இக்னோபிலிசு (Caranx ignobilis) 1.7 மீட்டர்கள் நீளம் வரை வளர்கின்றன. இக் குடும்பத்தின் பெரும்பாலான இனங்கள் 25 - 100 சதம மீட்டர்கள் வரையே வளர்கின்றன.

வகைப்பாடு

தொகு

இக் குடும்பத்தில் 30 பேரினங்களில் அடங்கிய 151 இனங்கள் உள்ளன. இம் முப்பது பேரினங்களின் பட்டியல் வருமாறு:

அலெக்டிசு (Alectis)
அலெப்பீசு (Alepes)
அட்ரோப்பசு (Atropus)
அத்துலீ (Atule)
கம்போகிரமா (Campogramma)
கராங்கோய்டீசு (Carangoides)
கராங்க்சு (Caranx)
குளோரோசுக்கொம்பிரசு (Chloroscombrus)
டெக்காடெரசு (Decapterus)
எலாகட்டிசு (Elagatis)
கினாத்தனோடன் (Gnathanodon)
எமிக்கிராங்சு (Hemicaranx)
லிச்சியா (Lichia)
மெகலாசுப்பிசு (Megalaspis)
நோக்கிரேட்டீசு (Naucrates)
ஆலிகோப்லைட்டீசு (Oligoplites)
பந்தோலபசு (Pantolabus)
பரசுத்திரோமட்டேயசு (Parastromateus)
பரோனா (Parona)
சியுடோகாரங்சு (Pseudocaranx)
இசுக்கோம்பரோய்டீசு (Scomberoides)
செலார் (Selar)
செலாரோய்டீசு (Selaroides)
செலீனீ (Selene)
செரியோலா (Seriola)
செரியோலினா (Seriolina)
டிரக்கினோட்டசு (Trachinotus)
டிரக்குரசு (Trachurus)
உலுவா (Ulua)
உராசுப்பிசு (Uraspis)

சில பாரை இன மீன்களின் பட்டியல்:

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரை_(மீன்_குடும்பம்)&oldid=2663225" இலிருந்து மீள்விக்கப்பட்டது