வரிப்பாரை
வரிப்பாரை, செம்பாரை, பொடிப்பாரை (Golden trevally) என்பது பாரை குடும்பத்தைச் சேர்ந்த பெரிய கடல் மீன் வகையாகும். மேலும் இது மோனோஸ்பெசிஃபிக் பேரினமான கினாடனோடோனின் ஒரே உறுப்பினர் ஆகும். வரிப்பாரை மீன்களானது இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கடல் முழுவதும் பரவலாக காணப்படுகிறது. மேற்கில் தென்னாப்பிரிக்காவிலிருந்து கிழக்கில் நடு அமெரிக்கா வரை, வடக்கில் யப்பான் மற்றும் தெற்கில் ஆத்திரேலியா வரை பரவியுள்ளது. இந்த இனங்கள் முக்கியமாக கடலோர நீரை ஒட்டிய பவளப் பாறைகள் மற்றும் மணல் தளப் பரப்பில் வாழ்கின்றன. வரிப்பாரைக்கு சதைப்பற்றுள்ள, இரப்பர் போன்ற உதடுகள் உண்டு. மேலும் இது இளம்வயதில் பளிச்சிடும் பொன்மஞ்சள் நிறத்தால் மற்ற பாரை மீன்களிடமிருந்து எளிதில் வேறுபடுகிறது. இதன் பிரகாசமான மஞ்சள் நிற உடலில் கருப்பு நிறப் பட்டைகளைக் கொண்டுள்ளது. இது வளரவளர இதன் நிறம் மாறி பொன்-வெள்ளி நிறமாக மாறும். வரிப்பாரைகளுக்கு இளம் வயதில் வாயின் கீழ்த்தாடையில் பற்கள் இருக்கும். வளர்ந்தபின் இந்த பற்கள் இருக்காது. இவை 120 செ.மீ நீளம் மற்றும் 15 கிலோகிராம் எடை வரை வளரும் என அறியப்படுகிறது. சிறிய வரிப்பாரை மீன்கள் பெரும்பாலும் சுறாக்கள் மற்றும் சொறி மீன் உள்ளிட பெரிய கடல் உயிரினங்களுக்கு நெருக்கமாக கூட்டத்தோடு கூட்டமாக பின்தொடர்கின்றன. இதனால் இதர பெரிய மீன்களிடமிருந்து வரும் ஆபத்தில் இருந்து இவை தப்புகின்றன. இவை பின் தொடரும் பெரிய மீன்கள் வேட்டையாடி அவற்றில் இருந்து சிதறும் இரையை இவை கொள்கின்றன. மேலும் இந்த இனங்களின் தடித்த உதடுகளானது மணல் அல்லது பாறைகளில் இருந்து இரையை உறிஞ்சுவதற்கு நன்கு பயன்படுத்துகின்றது. இவை பல்வேறு வகையான மீன்கள், ஓட்டுடைய கணுக்காலிகள், மொல்லுடலிகளை உட்கொள்கின்றன. இவை 2000 மற்றும் 2010 க்கு இடையில் 1187 டன் முதல் 3475 டன் வரை உலகளவில் பிடிக்கப்பட்டன. வரிப்பாரை மீனானது பலமத்திய கிழக்கு நாடுகளின் மீன்பிடிப்புகளில் கணிசமான இடத்தை வகிக்கிறது. மேலும் இந்த மீன் ஒரு பிரபலமான மீன்பிடி விளையாட்டு மீனாகும். இது தூண்டில், ஈட்டி போன்ற சதனங்களைப் பயன்படுத்தி பிடிக்கப்படுகிறது. பல ஆசிய நாடுகள் தற்போது நீர் வேளாண்மையில் இந்த மீன்களை வளர்க்கின்றன.
வரிப்பாரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Gnathanodon |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/GnathanodonG. speciosus
|
இருசொற் பெயரீடு | |
Gnathanodon speciosus (Forsskål, 1775) | |
தோராயமாக வரிப்பாரை காணப்படும் பகுதிகள் | |
வேறு பெயர்கள் | |
Scomber speciosus Forsskål, 1775 |
குறிப்புகள்
தொகு- ↑ Williams, I.; Smith-Vaniz, W.F. (2017). "Gnathanodon speciosus". IUCN Red List of Threatened Species 2016: e.T20432145A115379718. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T20432145A46664099.en. https://www.iucnredlist.org/species/20432145/115379718.