2019 பாலாகோட் வான் தாக்குதல்

(பாலகோட் வான் தாக்குதல், 2019 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

2019 பாலகோட் வான் தாக்குதல் (2019 Balakot airstrike) பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஸ்-இ-முகமது இயக்கத் தீவிரவாதிகளால், புல்வாமா தாக்குதலில், 14 பிப்ரவரி 2019 அன்று 40 மத்திய சேமக் காவல் படையினர் உயிர் நீத்தனர். எனவே பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு, இந்தியா மீது அடிக்கடி தாக்குதல் நடத்தும் தீவிரவாத இயக்க முகாம்களை அழிக்கும் நோக்கத்துடன், 26 பிப்ரவரி 2019 அன்று அதிகாலை 3.30 மணி அளவில் இந்திய விமானப் படையின் 12 மிராஜ் 2000 போர் விமானங்கள், காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டு கோட்டைத் தாண்டி, கைபர் பக்துன்வா மாகாணத்தின் பாலகோட் மற்றும் முசாஃபராபாத் நகரங்களில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகள் வீசித் தாக்கி அழித்தனர்.[4]

2019 பாலகோட் வான்தாக்குதல்
இந்திய-பாகிஸ்தான் பிணக்குகள்
காஷ்மீர் பிரச்சினை பகுதி

ஜம்மு காஷ்மீர் வரைபடம்
நாள் 26 பெப்ரவரி 2019 (2019-02-26)
இடம் கட்டுப்பாட்டு கோடு[1][2]
34°27′48″N 73°19′08″E / 34.46333°N 73.31889°E / 34.46333; 73.31889
பிரிவினர்
 இந்தியா லஷ்கர்-ஏ-தொய்பா

ஜெய்ஸ்-இ-முகமது

 பாக்கித்தான்
  • பாகிஸ்தான் வான் படை
தளபதிகள், தலைவர்கள்
அறியப்படவில்லை
படைப் பிரிவுகள்
அறியப்படவில்லை
பலம்
12 மிராஜ் 2000 போர் விமானங்கள்
இழப்புகள்
இறப்பு 200-300 (இந்தியாவின் கூற்று)[3]
ஒன்றுமில்லை (பாகிஸ்தானின் கூற்று)

இத்தாக்குதலில் பாலகோட் நகரத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தின் தீவிரவாதிகள் 200 முதல் 300 பேர் வரை பலியாகியுள்ளதாக ஊடகங்கள் கூறுகிறது. [5][6][7] [8]

பாகிஸ்தானின் அறிக்கைகளின் படி, இந்தியாவின் போர் விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டது எனக் கூறுகிறது. இந்தியப் போர் விமானாங்களின் தாக்குதல்களால் தங்களுக்கு இழப்பு ஏதும் இல்லை என்றும் கூறுகிறது.[9][10]

புல்வாமா தாக்குதல்

தொகு

இந்தியாவின், சம்மு காசுமீர், புல்வாமா மாவட்ட அவந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், மத்திய சேமக் காவல் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது 2019 பிப்ரவரி 14 ஆம் நாள் நடந்த தற்கொலைத் தாக்குதலில்[6] 40 பாதுகாப்புப் படையினரும், தற்கொலை தீவிரவாதி ஒருவரும் உயிரிழந்தனர்.[11] இத்தாக்குதலுக்கு ஜெய்சு-இ-முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது.

இந்தியாவின் பதிலடி

தொகு

இத்தாக்குதலுக்கு பதிலடியாக 26 பெப்ரவரி 2019 அன்று இந்திய இராணுவம் பயங்கரவாத அமைப்பான ஜெய்சு-இ-முகமதுவின் முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியது.இந்திய விமானப்படைக் குழுவின் பன்னிரண்டு மிராஜ் 2000 விமானங்கள் கட்டுப்பாட்டுக் கோட்டினைக் கடந்து பாலகாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதில் 200-300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்களில் தகவல் வெளிவந்துள்ளது.[12]

மேற்கோள்கள்

தொகு
  1. https://m.businesstoday.in/story/india-destroys-jem-terror-camps-where-exactly-is-balakot/1/322367.html
  2. https://gulfnews.com/world/asia/india/india-pakistan-tension-where-is-the-real-balakot-the-indian-air-force-target-1.1551168559497
  3. "IAF Destroys Jaish-E-Mohammed Control Rooms, Launch Pads In Three Locations; Inflicts 200-300 Casualties: Reports". Swarajya. 26 February 2019. 
  4. இந்திய விமானப்படை 21 நிமிடங்களில் நடத்தி முடித்த சாகசம்- 10 முக்கிய தகவல்கள்
  5. "IAF jets strike and destroy Jaish camp across LoC, 200 killed: Sources" (in en). 26 February 2019. https://www.hindustantimes.com/india-news/pakistan-army-says-indian-jets-intruded-airspace/story-AuuwxJVTByKuxoJlr0cAQP.html. பார்த்த நாள்: 26 February 2019. 
  6. 6.0 6.1 "India Hits Main Jaish Camp In Balakot, "Non-Military" Strike: Government". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2019-02-26.
  7. "Indian jets bomb targets within Pakistan". www.news.com.au. பார்க்கப்பட்ட நாள் 2019-02-26.
  8. பாலாகோட் தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள், தற்கொலைப் படையினர் கொல்லப்பட்டனர்
  9. "Indian aircraft violate LoC, scramble back after PAF's timely response: ISPR" (in en). Dawn. 26 February 2019. https://www.dawn.com/news/1466038/indian-aircraft-violate-loc-scramble-back-after-pafs-timely-response-ispr. பார்த்த நாள்: 26 February 2019. 
  10. "India says carried out air strike on 'terror camps' inside Pakistan" (in en). Reuters. 26 February 2019. https://www.reuters.com/article/us-india-kashmir-pakistan/pakistan-says-indian-aircraft-released-a-payload-after-crossing-frontier-no-casualties-idUSKCN1QF07B. பார்த்த நாள்: 26 February 2019. 
  11. "Pulwama attack: India will 'completely isolate' Pakistan". BBC (in ஆங்கிலம்). 16 February 2019. பார்க்கப்பட்ட நாள் 16 February 2019.
  12. https://twitter.com/ELINTNews/status/1100238099752341504?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1100238099752341504&ref_url=https%3A%2F%2Fwww.news.com.au%2Fworld%2Findia-just-bombed-a-target-within-pakistan-and-both-nations-are-nuclear-powers%2Fnews-story%2F75c2b876e4088cc0be9c1ade83847010