பாலாபாக் நீரிணை

சவாவில் தென் சீனக் கடலையும் சுலு கடலையும் இணைக்கும் நீரிணை

பாலாபாக் நீரிணை (ஆங்கிலம்: Balabac Strait; மலாய் மொழி: Selat Balabak; தகலாக் மொழி: Kipot ng Balabak) என்பது தென் சீனக் கடலையும்; சுலு கடலையும் இணைக்கும் நீரிணைகளில் ஒன்றாகும்.[1]

பாலாபாக் நீரிணை
Balabac Strait
பாலாபாக் நீரிணையில் சூரியன் மறையும் காட்சி
பாலாபாக் நீரிணை is located in பிலிப்பீன்சு
பாலாபாக் நீரிணை
பாலாபாக் நீரிணை
பிலிப்பைன்ஸ்; மலேசியா; சபாவில் பாலாபாக் நீரிணை அமைவிடம்
அமைவிடம்பலவான், பிலிப்பைன்ஸ்
சபா, மலேசியா
ஆள்கூறுகள்7°40′N 117°00′E / 7.667°N 117.000°E / 7.667; 117.000
வகைநீரிணை
அதிகபட்ச அகலம்50 km (31 mi)
சராசரி ஆழம்100 மீ.

இந்தப் பாலாபாக் நீரிணை, பிலிப்பைன்ஸ் நாட்டின் பலவான் மாநிலத்தில் உள்ள பாலாபாக் தீவையும் (Balabac Island); மலேசியா, சபா மாநிலத்தின் ஒரு பகுதியான பாங்கி தீவுகளையும் (Banggi Islands) பிரிக்கிறது.[2]

பாலாபாக் நீரிணை, ஏறக்குறைய 50 கிலோமீட்டர் (31 மைல்) அகலம் கொண்டது. அதிகப் பட்ச ஆழம் ஏறக்குறைய 100 மீட்டர் (330 அடி).[3] எனவே இந்த நீரிணை கடந்த பனி யுகத்திற்கு (Last Glacial Period) முன் கடல் மட்டத்திற்கு கீழே இருந்து இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

அந்த வகையில் போர்னியோ மற்றும் பலவான் நிலப் பகுதிகளுக்கு இடையே தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பரிமாற்றம் இருக்கலாம்.[4][5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. Hanizah Hj. Idris (2006). Perdagangan pelabuhan di Borneo [Trade port in Borneo]. Penerbit Universiti Malaya. p. 3.
  2. "Balabac Strait: Philippines". Geographical Names. Geographic.org. பார்க்கப்பட்ட நாள் 28 October 2013.
  3. Pinxian Wang; Qianyu Li (27 May 2009). The South China Sea: Paleoceanography and Sedimentology. Springer Science & Business Media. p. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-9745-4.
  4. Rohling, E. G.; Fenton, M.; Jorissen, F. G.; Bertrand, P.; Ganssen, G.; Caulet, J. P. (1998). "Magnitudes of sea-level lowstands of the past 500,000 years". Nature (journal) 394 (6689): 162–165. doi:10.1038/28134. Bibcode: 1998Natur.394..162R. https://www.researchgate.net/publication/242880001. 
  5. Waelbroeck, C.; Labeyrie, L.; Michel, E.; Duplessy, J. C.; McManus, J. F.; Lambeck, K.; Balbon, E.; Labracherie, M. (2002). "Sea-level and deep water temperature changes derived from benthic foraminifera isotopic records". Quaternary Science Reviews 21 (1): 295–305. doi:10.1016/S0277-3791(01)00101-9. Bibcode: 2002QSRv...21..295W. https://www.researchgate.net/publication/222662752. 
  6. Bintanja, R.; Van de Wal, R.S.W.; Oerlemans, J. (2006). "Modelled atmospheric temperatures and global sea levels over the past million years". Nature (journal) 437 (7055): 125–128. doi:10.1038/nature03975. பப்மெட்:16136140. https://www.researchgate.net/publication/46669469. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலாபாக்_நீரிணை&oldid=3418325" இலிருந்து மீள்விக்கப்பட்டது