பாலினக் குறியீடு

பாலினக் குறியீடு என்பது, ஒரு உயிரினத்தின் பாலினத்தை அல்லது அதோடு தொடர்புடைய ஒன்றைக் குறிப்பிடுவதற்குப் பயன்படும் குறியீடு ஆகும். ஆண் ♂, பெண் ♀ என்னும் இரண்டு பாலினங்களைக் குறிக்கும் குறியீடுகள் சோதிடக் குறியீடுகளில் இருந்து பெறப்பட்டவை. ஆணுக்கான குறியீடு செவ்வாய்க் கோளையும், பெண்ணுக்கான குறியீடு வெள்ளிக் கோளையும் குறிக்கும் குறியீடுகள் ஆகும். இந்தக் குறியீடுகள் மறுமலர்ச்சிக் காலத்திலிருந்தே மேற்கு நாடுகளில் பயன்பட்டு வருகின்றன. இரசவாதத்திலும், தனிமங்களை, குறிப்பாக இரும்பு, செப்பு ஆகியவற்றைக் குறிப்பதற்கும் இக்குறியீடுகள் பயன்பட்டன.

இக் குறியீடுகளை 1751 ஆம் ஆண்டில் முதன்முதலாகத் தாவரங்களின் செயல்படு பாலினத்தைக் குறிப்பதற்கு கரோலசு லின்னேயசு பயன்படுத்தினார்.

♂ செவ்வாய்க்கான குறியீட்டில் (U+2642 ) இருந்து. ஆண் உயிரினத்துக்கான குறியீடு.
வின்டோசுக்கான ASCII குறி ALT+11 ஆகும்.
♀ வெள்ளிக்கான குறியீட்டில் (U+2640 ) இருந்து. பெண் உயிரினத்துக்கான குறியீடு.
வின்டோசுக்கான ASCII குறி ALT+12 ஆகும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலினக்_குறியீடு&oldid=2744786" இருந்து மீள்விக்கப்பட்டது