பாலின கல்வி ஆய்விதழ்

பாலின கல்வி ஆய்விதழ் (Journal of Gender Studies) என்பது இங்கிலாந்து முன்னணி ஆய்விதழாக உள்ளது. சக மதிப்பாய்வு செய்யப்படும் இந்த ஆய்விதழ் பலதுறை சார்ந்த பாலினம் பயில்வுகளின் ஆய்வு முடிவுகளை வெளியிடுகின்றது. இந்த ஆய்விதழ் ரொளலெட்ஜ் நிறுவனத்தால் 1991 முதல் வெளியிடப்படுகிறது. பாலினம் தொடர்பான கட்டுரைகளைப் பெண்ணியக் கண்ணோட்டத்தில் பரந்த துறைகளை உள்ளடக்கியதாக வெளியிடுகிறது. பாலினத்தின் கருத்துக்கள் மற்றும் கோட்பாடுகளுடன் ஈடுபடும் பல்வேறு கல்வித் துறைகளில் ஒருமித்த கருத்துக்களை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.[1]

பாலின கல்வி ஆய்விதழ்
Journal of Gender Studies
 
சுருக்கமான பெயர்(கள்) J. Gend. Stud.
துறை பல்துறைமை, பாலியல் கல்வி
மொழி ஆங்கிலம்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் ரொளலட்ஜ் (ஐக்கிய இராச்சியம்)
வரலாறு 1991 முதல்
வெளியீட்டு இடைவெளி: காலாண்டு
தாக்க காரணி 2.539 (2020)
குறியிடல்
ISSN 0958-9236 (அச்சு)
1465-3869 (இணையம்)
LCCN 2001238211
CODEN JGESEH
OCLC 321078833
இணைப்புகள்

ஆய்விதழ் மேற்கோள் அறிக்கையின்படி, இதன் 2020ஆம் ஆண்டுக்கான தாக்கக் காரணி 2.539 ஆகும்.[2] இது "மகளிர் ஆய்வுகள்" என்ற பிரிவில் 44 ஆய்விதழ்களில் 12வது இடத்தைப் பிடித்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.tandf.co.uk/journals/carfax/09589236.html
  2. "Journal of Gender Studies journal metrics". www.tandfonline.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-01.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலின_கல்வி_ஆய்விதழ்&oldid=3290805" இலிருந்து மீள்விக்கப்பட்டது