பாலின சமத்துவமின்மை

பாலின சமத்துவமின்மை (gender inequality) என்பது ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்படாத சமூக செயல்முறையாகும். சமூகத்தில் நிலவும் உயிரியல், உளவியல் அல்லது கலாச்சார விதிமுறைகள் தொடர்பான வேறுபாடுகளிலிருந்து இது ஏற்படலாம். இந்த வேறுபாடுகளில் சில அனுபவ ரீதியாகவும் மற்றவை சமூக ரீதியாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. கல்வி, ஆயுட்காலம், ஆளுமை, ஆர்வங்கள், குடும்ப வாழ்க்கை, தொழில் மற்றும் அரசியல் சார்பு உட்பட பல துறைகளில்பாலின வேறுபாடு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

பாலின வேறுபாடுகள்

தொகு

உயிரியல்

தொகு

உயிரியல் மற்றும் உடற்கூறியல் காரணிகளின் அடிப்படையில் பாலினங்களிடையே இயற்கையாகவே வேறுபாடுகள் உள்ளன, பெரும்பாலும் வேறுபட்ட இனப்பெருக்க அடிப்படையில் வேறுபாடு காணப்படுகிறது. உயிரியல் வேறுபாடுகளில் நிறப்புரி மற்றும் இயக்குநீர் வேறுபாடுகளும் அடங்கும். [1] உடல் வலிமைகளின் அடிப்படையிலும் (சராசரியாக) இயற்கையான பாலின வேறுபாடு உள்ளது. இருப்பினும் எந்தவொரு ஆணும் எந்த பெண்ணையும் விட வலிமையானவர் என்பது இதன் பொருள் அல்ல. [2] [3] பெண்களை விட ஆண்கள், சராசரியாக உயரமானவர்களாக உள்ளனர். இதில் நன்மையும் உள்ளது தீமையும் உள்ளது.[4] சராசரியாக, பெண்கள் ஆண்களை விட நீண்ட காலம் வாழ்கின்றனர், [5] இது எந்த அளவிற்கு உயிரியல் வேறுபாட்டினால் நிகழ்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆண்களுக்கு, பெண்களை விட,அளவில் நுரையீரல் பெரியதாகவும் அதிக அளவில் இரத்த அணுக்கள் மற்றும் உறைதல் காரணிகள் உள்ளன, அதே சமயம் பெண்களுக்கு வெள்ளை இரத்த அணுக்கள் அதிகமாக இருந்து நோய் எதிர்ப்பு சக்திகளை வேகமாக உற்பத்தி செய்கிறது. [6]

உளவியல்

தொகு

பேறுகாலத்திற்கு முந்தைய நாளமில்லாச் சுரப்பிகளின் வெளிப்பாடு பாரம்பரிய ஆண் அல்லது பெண்ணின் நடத்தையை வெளிப்படுத்தும் அளவை பாதிக்கும் முக்கியக் காரணியாக அமைகிறது. [7] [8] பொது புத்திசாலித்தனத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே புறக்கணிக்கத்தக்க வேறுபாடுகள் உள்ளன. [9] பெண்களை விட ஆண்கள் கணிசமாக அதிக ஆபத்துக்களை எதிர்கொள்ள விரும்புகிறார்கள். [10] ஆண்களும் பெண்களை விட ஆக்ரோஷமாக இருக்க வாய்ப்புள்ளது, இது மரபு, ஆண்ட்ரோஜன் வெளிப்பாட்டால் பாதிக்கப்படுகிறது. [11] [12] ஆண்களை விட பெண்கள் சராசரியாக அதிக பச்சாதாபம் கொண்டவர்களாக உள்ளனர். ஆனால் இது அனைத்து பெண்களும் ஆனித்து ஆண்களையும் விட பச்சாதாபம் கொண்டவர்களாக இருப்பதில்லை. [13]

தாக்கம் மற்றும் எதிர்விளைவுகள்

தொகு

பாலின சமத்துவமின்மை மற்றும் பாகுபாடு ஆகியவை ஒட்டுமொத்த சமுதாயத்தில் வறுமையையும் பாதிப்பையும் ஏற்படுத்துவதாக வாதிடப்படுகிறது. [14] வெளிப்புற வாழ்வாதார வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள அல்லது அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்க தனிநபர்களின் திறன்களில் குடும்பம் தொடர்பான அறிவு மற்றும் வளங்கள் முக்கிய தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. [15] உயர் கல்வி பெறுதல் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகியன குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் உற்பத்தித்திறனை கணிசமாக மேம்படுத்தவும் சமூகம் முழுவதும் சமநிலையை மேம்படுத்துவதிலும் முக்கிய காரணியாக அமைகின்றது.பாலின சமத்துவ குறியீடுகள் வறுமையின் இந்த அம்சத்தை நிரூபிக்க கருவிகளை வழங்க முற்படுகின்றன. [15]

வறுமை பல காரணிகளைக் கொண்டுள்ளது, அவற்றில் முக்கியமான ஒன்று பாலின ஊதிய இடைவெளி ஆகும்.  பெண்கள் அதிகமாக வறுமையில் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு ஊதிய இடைவெளி முக்கிய காரணங்களில் ஒன்றாகும். [16]

பாலின சமத்துவமின்மையைக் குறைப்பதற்கும் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் சமூக பாதுகாப்பில் பின்வருவனவற்றை உருவாக்க வேண்டும் என்று சர்வதேச பன்னாட்டு நிறுவன ஆராய்ச்சியாளார்கள் வாதிடுகின்றனர்:

சமூகப் பாதுகாப்பு அமைப்பானது பெண்களுக்கு வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அளிக்கிறது

பராமரிப்பு செலவுகளுடன் பெற்றோரை ஆதரித்தல் (எ.கா தென்னாப்பிரிக்க குழந்தை/ஊனமுற்றோர் உதவித்தொகை)

பெண்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்குதல் (எ.கா பங்களாதேஷின் பெண்கள் கல்வி உதவித்தொகை திட்டம்)

சமீபத்திய ஆண்டுகளில் உலகளாவிய அளவில் அதிகரித்து வரும் பாலின அடிப்படையிலான வன்முறை பற்றிய விழிப்புணர்வு அளித்தல். [17]

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வடிவமைப்பதில் மற்றும் மதிப்பீடு செய்வதில் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களையும் (பெண்கள் மற்றும் ஆண்கள்) சேர்த்தல்

திட்ட ஊழியர்களுக்கான பாலின விழிப்புணர்வு மற்றும் பகுப்பாய்வு பயிற்சி

சான்றுகள்

தொகு
  1. Wood, Julia. Gendered Lives. 6th. Belmont, CA: Wadsworth/Thomson Learning, 2005.
  2. "Strength and cross-sectional area of human skeletal muscle". The Journal of Physiology 338 (1): 37–49. 1983. doi:10.1113/jphysiol.1983.sp014658. பப்மெட்:6875963. 
  3. Frontera, WR; Hughes, VA; Lutz, KJ; Evans, WJ (1991). "A cross-sectional study of muscle strength and mass in 45- to 78-yr-old men and women". J Appl Physiol 71 (2): 644–50. doi:10.1152/jappl.1991.71.2.644. பப்மெட்:1938738. https://archive.org/details/sim_journal-of-applied-physiology_1991-08_71_2/page/644. 
  4. Samaras, Thomas (2007). Human body size and the laws of scaling. New York: Nova Science. pp. 33–61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60021-408-0.
  5. "Life expectancy at birth, Country Comparison to the World". CIA World Factbook. US Central Intelligence Agency. n.d. Archived from the original on 28 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 12 Jan 2011.
  6. Alfred Glucksman (1981). Sexual Dimorphism in Human and Mammalian Biology and Pathology. Academic Press. pp. 66–75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-286960-0. இணையக் கணினி நூலக மைய எண் 7831448.
  7. Simerly, Richard B. (1 February 2005). "Wired on hormones: endocrine regulation of hypothalamic development". Current Opinion in Neurobiology 15 (1): 81–85. doi:10.1016/j.conb.2005.01.013. பன்னாட்டுத் தர தொடர் எண்:0959-4388. பப்மெட்:15721748. 
  8. Reinisch, June Machover; Ziemba-Davis, Mary; Sanders, Stephanie A. (1 January 1991). "Hormonal contributions to sexually dimorphic behavioral development in humans". Psychoneuroendocrinology 16 (1–3): 213–278. doi:10.1016/0306-4530(91)90080-D. பப்மெட்:1961841. 
  9. Colom, Roberto; Juan-Espinosa, Manuel; Abad, Francisco; García, Luís F (February 2000). "Negligible Sex Differences in General Intelligence" (in en). Intelligence 28 (1): 57–68. doi:10.1016/S0160-2896(99)00035-5. https://www.researchgate.net/publication/222534750. 
  10. Byrnes, James P.; Miller, David C.; Schafer, William D. (1999). "Gender differences in risk taking: A meta-analysis" (in en). Psychological Bulletin 125 (3): 367–383. doi:10.1037/0033-2909.125.3.367. https://www.researchgate.net/publication/232541633. 
  11. Carlson, N. 'Hormonal Control of Aggressive Behavior' Chapter 11 in [Physiology of Behavior],2013, Pearson Education Inc.
  12. Card, Noel A.; Stucky, Brian D.; Sawalani, Gita M.; Little, Todd D. (2008-10-01). "Direct and indirect aggression during childhood and adolescence: a meta-analytic review of gender differences, intercorrelations, and relations to maladjustment". Child Development 79 (5): 1185–1229. doi:10.1111/j.1467-8624.2008.01184.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1467-8624. பப்மெட்:18826521. 
  13. Christov-Moore, Leonardo; Simpson, Elizabeth A.; Coudé, Gino; Grigaityte, Kristina; Iacoboni, Marco; Ferrari, Pier Francesco (1 October 2014). "Empathy: gender effects in brain and behavior". Neuroscience and Biobehavioral Reviews 46 (4): 604–627. doi:10.1016/j.neubiorev.2014.09.001. பன்னாட்டுத் தர தொடர் எண்:1873-7528. பப்மெட்:25236781. 
  14. Nicola Jones, Rebecca Holmes, Jessica Espey 2008. Gender and the MDGs: A gender lens is vital for pro-poor results. London: Overseas Development Institute பரணிடப்பட்டது மார்ச்சு 10, 2011 at the வந்தவழி இயந்திரம்
  15. 15.0 15.1 Nicola Jones, Rebecca Holmes, Jessica Espey 2008. Gender and the MDGs: A gender lens is vital for pro-poor results. London: Overseas Development Institute பரணிடப்பட்டது மார்ச்சு 10, 2011 at the வந்தவழி இயந்திரம்
  16. Bureau, US Census. "Income and Poverty in the United States: 2015". www.census.gov (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-02-07.
  17. "The Number of Women Murdered by a Partner Is Rising | Psychology Today". www.psychologytoday.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலின_சமத்துவமின்மை&oldid=3581313" இலிருந்து மீள்விக்கப்பட்டது