பால்டிக் நாடுகள்

பால்டிக் நாடுகள் (The Baltic states[a] அல்லது the Baltic countries) என்பது எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா முதலியவற்றைக் குறிக்கும் புவிசார் அரசியல் சொல் ஆகும். இம்மூன்று நாடுகளும், வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம், ஐரோ வலயம், பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு ஆகியவற்றில் உறுப்பினர்களாக உள்ளன. இந்த மூன்று இறைமையுள்ள நாடுகளும், பால்டிக் கடலின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளமையால், இவை பால்டிக் நாடுகள் எனக் குறிப்பிடப்படுகின்றன. வரலாற்றுப் பதிவுகளிலும் இந்நாடுகளைப் பலவிதமான பெயர்களில் பால்டிக் கடலோடு தொடர்பு படுத்தி பால்டிக் குடியரசுகள், பால்டிக் நிலங்கள், பால்டிக்குகள் என குறிப்பிடுகின்றனர்.

பால்டிக் நாடுகள்
நாடுகள் எசுத்தோனியா (நீலம்)
 லாத்வியா (கருஞ்சிவப்பு)
 லித்துவேனியா (பொன்மஞ்சள்)
நேர வலயம்

இந்த மூன்று பால்டிக் நாடுகளும், உலக வங்கியால் அதிக வருமானமுள்ள நாடுகளாகப் பட்டியல் இட்டுள்ளன. மேலும் இந்நாடுகளின் மனித மேம்பாட்டுச் சுட்டெண் மிக அதிகம் ஆகும்.[1] இந்த மூன்று நாடுகளும் தங்களுக்குள்ளே நிருவாக ஒத்துழைப்பும், சட்டத்துறை ஒத்துழைப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்பு, ஆற்றல், போக்குவரத்து போன்றவற்றில் கூட்டுறவாக மேலாண்மை செய்து கொள்கின்றன.[2]

குறிப்புகள்

தொகு


மேற்கோள்கள்

தொகு
  1. "Colombia and Lithuania join the OECD". France 24. 30 May 2018.
  2. Republic of Estonia. "Baltic Cooperation". Ministry of Foreign Affairs. Archived from the original on 6 May 2017. பார்க்கப்பட்ட நாள் 8 ஏப்பிரல் 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்டிக்_நாடுகள்&oldid=3932588" இலிருந்து மீள்விக்கப்பட்டது