பால் மிட்டாய்
பால் மிட்டாய் (Bal mithai; குமானி: बाल मिठाई, Bāl Mithai) என்பது பழுப்பு நிற சாகலேட் போன்ற இன்னட்டு சேர்த்த இனிப்பு ஆகும். இந்த இனிப்பு மிட்டாய், வறுத்த கோயாவினைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சர்க்கரை பூசப்பட்ட வறுத்த கசகசா விதைகளால் வெண் நிறப் பந்துகள் போன்று தயாரிக்கப்படுகிறது. இது இந்தியா குமாவுன் பகுதியில் பிரபலமான இனிப்பாகும்.
தொடங்கிய இடம் | இந்தியா |
---|---|
பகுதி | அல்மோரா, குமாவுன், (இந்தியா) |
முக்கிய சேர்பொருட்கள் | கோயா, கரும்பு சர்க்கரை, கேராமல் சர்க்கரை பாகு |
வரலாறு
தொகுபால் மிட்டாய் குமாவுனில் தோன்றியது. இது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அல்மோரா லால் சந்தைப் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்களின் கண்டுபிடிப்பாகும்.[1] சூரிய கடவுளுக்கு முதன்மையாகச் செலுத்தப்பட்ட காணிக்கையாகப் பால் மிட்டாய் ஆரம்பக்காலத்தில் இருந்தது என்று அறிஞர்கள் நம்புகிறார்கள்.[1]
தயாரிப்பு
தொகுபால் மிட்டாய் பேச்சுவழக்கில் 'சாக்லேட்' என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதன் நிறம் சாக்லேட்டுன் ஒத்துப்போகின்றது. பால் மிட்டாய் என்பது கோயா (கரும்பு சர்க்கரையுடன் ஆவியாக்கப்பட்ட பால் நுரை) அடர் பழுப்பு நிறமாக மாறும் வரை காய்ச்சுவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதன் பின்னர் அறை வெப்பநிலையில் குளிர்விக்கப்பட்டு, சூடு ஆறிய பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு சர்க்கரைப் பாகில் தோய்த்தெடுத்து வறுத்த கசகசா விதைகளில் உருட்டி எடுத்து சிறிய பந்து போன்று செய்யப்படுகின்றன.[2]
பிரபலம்
தொகுபால் மிட்டாய் நீண்ட காலமாக அல்மோரா மாவட்டத்திலும் அண்டை மாவட்டமான குமாவுனின் ஒரு சிறப்பு அம்சமாக இருந்து வருகிறது. இதனுடன் சிங்கோரி, ஓக் இலைகளில் சுற்றப்பட்ட சுவையான கோயாவின் மற்றொரு தயாரிப்பாகும்.
புவிசார் குறியீடுகள் பாதுகாப்பு
தொகுஉள்ளூர் இனிப்பு தயாரிப்பாளர்களுக்கு அறிவுசார் சொத்துரிமை மற்றும் புவியியல் சார்ந்த குறியீடுகள் பாதுகாப்பு 1999ஆம் ஆண்டின் புவியியல் குறிகாட்டிகள் சட்டத்தின் கீழ் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சமீபத்திய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குமாவோனின் அடையாளமாக இருக்கும் பால் மிட்டாய் மற்றும் சிங்கோரி போன்ற உள்ளூர் சிறப்பு இனிப்புகளுக்கான பாதுகாப்பிற்கு வழிவகுக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Pant, Rajshekhar (4 January 2016). "The Sweet Tooth Of Kumaon". The Citizen. https://www.thecitizen.in/index.php/en/NewsDetail/index/9/6381/The-Sweet-Tooth-Of-Kumaon. பார்த்த நாள்: 1 January 2024.
- ↑ Cuisines - Recipes பரணிடப்பட்டது 2008-04-29 at the வந்தவழி இயந்திரம் Official website of Bageshwar district.