பாவனா சிக்காலியா

முன்னாள் மத்திய இணை அமைச்சர்

பாவ்னா சிக்காலியா (Bhavna Chikhalia;‎ 14 பிப்ரவரி 1955 – 28 சூன் 2013) 2003 முதல் 2004 வரை இந்திய அரசாங்கத்தின் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சராக இருந்தார். இவர் மக்களவை உறுப்பினராகவும் குசராத்தின் முதல் பெண்மணியாகவும் இருந்தார். இவர்குசாராத்தின் ஜூனாகத் தொகுதியிலிருந்து தொடர்ச்சியாக நான்கு முறை மக்களவைக்குச் சென்றார் (1991 முதல் 2004 வரை). இவர் 1993 முதல் 1996 வரை பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற பிரிவின் நிர்வாக செயலாளராகவும், கொறடாவாகவும், 1998 இல் கட்சி துணைத் தலைவராகவும்இருந்தார். இவர் 1999-2002 இல் இரயில்வே பேரவையின் தலைவராக இருந்தார்.[1]

பாவ்னாபென் தேவ்ராஜ்பாய் சிக்காலியா
முன்னாள் மத்திய இணை அமைச்சர்
பதவியில்
2003 - 2004
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1991 - 2004
தொகுதிஜூனாகத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1955-02-14)14 பெப்ரவரி 1955
தேவல்கி, ஜூனாகத் மாவட்டம், சௌராஷ்டிரா, இந்தியா
இறப்பு28 சூன் 2013(2013-06-28) (அகவை 58)
அகமதாபாது, குசராத்து, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்தேவ்ராஜ் சிக்காலியா
பிள்ளைகள்1
வாழிடம்(s)ஜூனாகத், குசராத்து
முன்னாள் கல்லூரிகுஜராத் பல்கலைக்கழகம்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

குசராத்த்தின், ஜுனாகத் அருகே உள்ள தேவல்கி என்ற சிறிய நகரத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் 1955 இல் பாவ்னா சிக்கலியா பிறந்தார். இவரது தந்தை ஜம்னதாஸ் படேல் கட்டுமான தொழிலில் இருந்தார். இவரது தாயார் சவிதாபென் படேல் ஒரு பக்தியுள்ள இல்லத்தரசி. இவருக்கு மூன்று உடன்பிறப்புகள் உள்ளனர். பாவ்னா குசராத்தில் பொது அறுவை சிகிச்சை நிபுணரும் சிறுநீரக மருத்துவருமான தேவராஜ் சிக்கலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

இவர் ஒரு வழக்கறிஞராக தனது தொழிலைத் தொடங்கினார், அன்றிலிருந்து ஒரு சமூக சேவையாளராக இருந்து வருகிறார். 1991 ஆம் ஆண்டில் பத்தாவது மக்களவைக்கு முதல் முறையாக குசராத்தின் ஜுனாகத் தொகுதியிலிருந்து இவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1993 ல் இவர் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற பிரிவின் நிர்வாக செயலாளரானார். 1996 ஆம் ஆண்டு பதினோராவது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1996-97 இல் ரயில்வே அமைச்சகத்தின் அரசாங்க உத்தரவாதங்கள், தொடர்பு மற்றும் ஆலோசனைக் குழுவின் செயற்குழு உறுப்பினரானார். 1998 இல் இவர் பன்னிரெண்டாவது மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1998-2000 இல் தேசிய பாஜக மகளிர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் 1999-2002 இல் இரயில்வே பேரவையின் தலைவராகவும் இருந்தார்.

17 ஏப்ரல் 1999 அன்று, பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசாங்கம் மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அரசாங்கத்தின் கூட்டணியில் இருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விலகியதால் ஒரு வாக்கில் ஆட்சியை இழந்தது. எதிர்க்கட்சித் தலைவரான சோனியா காந்தி மிகப்பெரிய எதிர்க்கட்சியாக இருந்தாலும் ( இந்திய தேசிய காங்கிரசு ) மக்களவையில் பெரும்பான்மையைப் பெற போதுமான கட்சிகளின் கூட்டணியை உருவாக்க முடியவில்லை. இவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணை வந்த சிறிது நேரத்தில், ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய தேர்தலை அழைத்தார். அடல் பிஹாரி வாஜ்பாய் 1999 ஆம் ஆண்டு இந்திய பொதுத்தேர்தல் அந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் வரை தற்காலிக பிரதமராக இருந்தார்.

1999 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில், 13 வது மக்களவையின் 1999 இல் தொடர்ச்சியாக நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தொடர்ச்சியாக நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக குசராத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். 2000ஆம் ஆண்டில் அகில இந்திய பாரதிய ஜனதாக் கட்சியின் துணைத் தலைவராக இருந்தார். இவர் 2000 ஆம் ஆண்டில் இந்திய தேசிய கூட்டுறவு வீட்டு வசதி கூட்டமைப்பின் துணைத் தலைவராக இருந்தார். இவர் குசராத் மாநில வீட்டுவசதி நிதி நிறுவனத்தின் தலைவராக ஐந்து ஆண்டுகள் இருந்தார். இவர் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சராக நியமிக்கப்பட்டார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் சுஷ்மா சுவராஜுடன் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை அமைச்சராகவும் இருந்தார். சனவரி 2003 முதல் மே 2004 வரை, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் தேர்தலில் தோல்வியடைந்தபோது இவர் இந்தப் பதவிகளை வகித்தார்.

இறப்பு

தொகு

இவர் 2013 இல் மாரடைப்பால் இறந்தார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Parliament of India LOK SABHA HOUSE OF THE PEOPLE". பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.
  2. Former BJP union minister Bhavna Chikhalia dead

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவனா_சிக்காலியா&oldid=3776046" இலிருந்து மீள்விக்கப்பட்டது