பாவன்காடு
பாவன்காடு (Pavangad) என்பது இந்தியாவில் மகாராட்டிராவின் கோலாப்பூர் மாவட்டம் பன்காலா கோட்டைக்குக் கிழக்கே அரை மைல் தொலைவில் உள்ள கோட்டையாகும். பன்காலா கோட்டை ஒரு பள்ளத்தாக்கால் பிரிக்கப்பட்டுள்ளது.[1] கோட்டையின் முக்கிய பாதுகாப்பு பதினைந்து முதல் இருபத்தைந்து அடி உயரமுள்ள வடுக்கள் கொண்ட பாறையாகும். பெரும்பாலான இடங்களில் செயற்கையான ஆழமாக்கல் மூலம் பாறையின் செங்குத்தான தன்மை அதிகரித்துள்ளது. மேலும் இது கோலாப்பூர் கருப்பு கல்லால் கட்டப்பட்ட பதினான்கு அடி உயரமுள்ள ஒரு பாதுகாப்புச் சுவரால் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
1827ஆம் ஆண்டில், முதலாம் சாகோஜியின் கீழ், பாவன்காடு மற்றும் இதன் அண்டை கோட்டையான பன்காலா பிரித்தானிய ஆட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. 1844ஆம் ஆண்டில், நான்காம் சிவாஜி சிறுபான்மை ஆட்சியின் போது, பன்காலா மற்றும் பவன்கட் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது. இவர்கள் சாத்தாரா குடியிருப்பாளரான கர்னல் ஓவன்சு சுற்றுப்பயணத்தில் இருந்தபோது கைப்பற்றி பன்காலாவில் சிறையில் அடைத்தனர். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் படைத்தலைவன் டெலாமோட்டேவின் கீழ் ஒரு பிரித்தானியப் படை அனுப்பப்பட்டது. 1844 திசம்பர் 1 அன்று பன்காலா கோட்டை சுவர்களை உடைத்துக் கைப்பற்றப்பட்டது. இதன்பிறகு 1844ஆம் ஆண்டில், பாவன்காட்டின் இரண்டு முக்கிய நுழைவாயில்கள் இடிக்கப்பட்டு கோட்டையும் இடிக்கப்பட்டது. கோட்டைப்பகுதி வெறிச்சோடி இருந்தாலும் நல்ல நீர் விநியோகத்தைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Friends of Forts". Archived from the original on April 5, 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-03-16.