பாவினி நிறுவனம்
பாரதிய நபிகியா வித்யுத் நிகம் லிமிடெட் . (Bharatiya Nabhikiya Vidyut Nigam Ltd) அல்லது பாவினி (BHAVINI) 2004ஆம் ஆண்டில் சென்னையில் நிறுவப்பட்ட ஓர் இந்திய அரசுத்துறை நிறுவனமாகும். இந்திய அணுமின் கழகத்தை அடுத்து இந்திய அரசால் நாட்டின் மூன்று கட்ட அணுவாற்றல் திட்டத்தின் அங்கமான அனைத்து இரண்டாம் கட்ட வேக ஈனுலைகளின் கட்டமைப்பையும் இயக்கப்படுத்தலையும் தொடர்ந்த இயக்கத்தையும் கண்காணிக்க இந்த நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது.[3]
வகை | அரசுத்துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 2004 |
தலைமையகம் | கல்பாக்கம், தமிழ்நாடு, இந்தியா எழும்பூர், சென்னை[1] |
முதன்மை நபர்கள் | தலைவரும் மேலாண் இயக்குநரும் – திரு முனைவர் பிரபாத் குமார் |
தொழில்துறை | ஆற்றல் துறை |
உற்பத்திகள் | அணுக்கரு ஆற்றல் , மின்சார உற்பத்தி மற்றும் மின்சார வழங்கல் |
இயக்க வருமானம் | ▲₹21.70 கோடி (US$2.7 மில்லியன்) (2010-2011) [2] |
நிகர வருமானம் | ▲₹14.62 கோடி (US$1.8 மில்லியன்) (2010-2011) |
மொத்தச் சொத்துகள் | ₹3,077 கோடி (US$390 மில்லியன்) (2010-2011) |
மொத்த பங்குத்தொகை | ₹3,047 கோடி (US$380 மில்லியன்) (2010-2011) |
இணையத்தளம் | www |
இந்திய அரசின் அணு ஆற்றல் துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம் சென்னை அணுமின் நிலையத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் முதலுறு வேக ஈனுலையை (Prototype Fast Breeder Reactor ,PFBR) வணிக இயக்கத்திற்கு உட்பட்டபின் அதனை நிர்வகிக்கும் பொறுப்பு பாவினிக்குக் கொடுக்கப்படும்.
சான்றுகோள்கள்
தொகு- ↑ "Contact Us". Archived from the original on 18 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 15 April 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-05-14. பார்க்கப்பட்ட நாள் 2012-12-05.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-12-27. பார்க்கப்பட்ட நாள் 2012-12-05.
வெளி இணைப்புகள்
தொகு- - பாவினி வலைத்தளம் பரணிடப்பட்டது 2012-11-05 at the வந்தவழி இயந்திரம்