பிகச்சு ஒரு பொகெமொன் இனம் ஆகும். இது மின் ஆற்றல் கொண்ட மஞ்சள் நிற கொறிணி போன்ற உயிரினம் .

இயக்கமூட்டப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள், வர்த்தக அட்டை விளையாட்டுக்கள் மற்றும் காமிக் புத்தகங்கள் ஆகியவற்றில் தி பொகெமொன் கம்பெனி என்ற ஒரு யப்பானிய நிறுவனத்தின் உரிமத்தில் தோற்றம் பெரும் ஒரு கற்பனை படைப்பாகும். பிகச்சுவின் வடிவமைப்பு, அட்சுகொ நிஷிடா உருவாக்கி, கென் சுகிமோரியால் இறுதி செய்யப்பட்டது. பிக்காசு முதன்முதலில் யப்பானில் போகிமொன் சிவப்பு மற்றும் பச்சையில் தோன்றியது, பின்னர், முதல் சர்வதேச வெளியீடான போகிமொன் சிவப்பு மற்றும் நீலம் நிகழ்பட ஆட்டத்தில் தோன்றியது. பிற இன பொகெமான்ங்களைப் போலவே, பிக்காசுவைய்யும் மற்ற பொகெமான்ன்களை எதிர்த்துப் போராடும் விளையாட்டிற்காக, மனிதர்கள் பெரும்பாலும் கைப்பற்றி சீர்ப்படுத்துவர். பிரபல பொகெமொன் அனிமேவில் மைய்யமான பாத்திரமாக விளங்குவதால் இது பிரபலமாக திகழ்கிறது. சமீப வருடங்களில், இது யப்பானிய பரவலர் பண்பாட்டில், ஒரு முக்கிய உருவமாக திகழ்கிறது.

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிகச்சு&oldid=3696747" இலிருந்து மீள்விக்கப்பட்டது