பிங்குவிய்குலா கைப்சிகோலா
பிங்குவிய்குலா கைப்சிகோலா(Pinguicula gypsicola) என்பது மெக்சிக்கோவின் மாநிலமான சான் லூயிஸ் போடோசியை பூர்வீகமாகக் கொண்ட பிங்குய்குலா இனத்தைச் சேர்ந்த ஒரு பூச்சியுண்ணும் தாவரமாகும், இது ஆர்க்கியோசாந்தஸ் என்னும் தாவரக்குடும்பத்தை சேர்ந்ததாகும்.இத்தாவரம் பெரும்பாலும் ஜிப்சம் மண்ணில் நிமிர்ந்த, குறுகிய இலைகளின் தண்டற்ற பசையை சுரக்கும் சுரப்பிகளோடு வளரும்.[1]
பிங்குவிய்குலா கைப்சிகோலா | |
---|---|
In situ with Selaginella | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. gypsicola
|
இருசொற் பெயரீடு | |
Pinguicula gypsicola Brandegee (1911) | |
Species distribution |
அமைப்பு
தொகுஇந்த தாவரத்தின் மாமிசமுண்ணும் இலைகள் பிரகாசமான பச்சை முதல் சிவப்பு வரை மற்றும் 6.5 செ.மீ நீளம் வரை வளரக்கூடியது. மேலும் இதன் மலர்கள் 2 செ.மீ உள்ள ஊதா நிறத்திலும் இதன் மஞ்சரிகள் 9 செ.மீ வரையும் தனிதனியாக காணப்படும். கோடை மழையின் தொடக்ககாலமான ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் இவை பூக்கின்றன.[2]
வரலாறு
தொகுபிங்குகுலா ஜிப்சிகோலா முதன்முதலில் 1911 இல் கலிபோர்னியாவைச் சேர்ந்த தாவரவியலாளரான டவுன்ஷெண்ட் ஸ்டித் பிராண்டீ (1843-1925) என்பவரால் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "பிங்கிகுலா ஜிப்சிகோலா".
- ↑ "ஜிப்சிகோலா பராமரிப்பு". பார்க்கப்பட்ட நாள் 28 January 2024.