பிசுவேசுவர் நந்தி
பிசுவேசுவர் நந்தி (Bishweshwar Nandi) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சீருடற்பயிற்சி விளையாட்டின் பயிற்சியாளராவார். [1][2][3] இவரும் ஒரு சிறந்த சீருடற்பயிற்சி விளையாட்டு வீரராக இருந்தார்.[2][4] அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தலீப் சிங் இவருக்குப் பயிற்சியளித்தார். [1] நந்தி சீருடற்பயிற்சி விளையாட்டில் ஐந்து முறை தேசிய வெற்றியாளராக இருந்தார். 12 நிகழ்வுகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார் மற்றும் இந்திய சீருடற்பயிற்சி அணிக்கு ஆறு முறை தலைவராக நின்று வழிநடத்தினார். [4] ஒரு பயிற்சியாளராக இவர் புரிந்த சாதனைகளுக்காக துரோணாச்சார்யா விருது 2016 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. [5][6]. தீபா கர்மாகர் இவரிடம் பயிற்சி பெற்ற சீருடற்பயிற்சி வீரர்களில் ஒருவராவார். பிசுவேசுவர் நந்தியின் மனைவி சோமா நந்தியும் ஒரு சீருடற்பயிற்சி விளையாட்டு பயிற்சியாளராவார். [1][4][5]
பிசுவேசுவர் நந்தி Bishweshwar Nandi | |
---|---|
பிறப்பு | திரிபுரா, இந்தியா |
குடியுரிமை | இந்தியா |
பணி | சீருடற்பயிற்சி விளையாட்டுப் பயிற்சியாளர் |
வாழ்க்கைத் துணை | சோம நந்தி (சீருடற்பயிற்சி விளையாட்டுப் பயிற்சியாளர்) |
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Sarangi, Y. B. "Bishweshwar Nandi: 'Tokyo 2020 a big challenge'". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-06.
- ↑ 2.0 2.1 Paul, Soumyadeep (2016-08-20). "The Maverick Coach Bishweshwar Nandi". The SportsRush (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-06.
- ↑ The need is to make kids start gymnastics at a young age: Bishweshwar Nandi, written by Nitin Sharma, February 17, 2018, The Indian Express.
- ↑ 4.0 4.1 4.2 "She gave her foot to her detractors and now she is a Champion". www.theweekendleader.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-06.
- ↑ 5.0 5.1 "Double joy for Dipa Karmakar as coach Bishweshwar Nandi gets Dronacharya award". The Indian Express (in ஆங்கிலம்). 2016-10-12. பார்க்கப்பட்ட நாள் 2020-08-06.
- ↑ Published:Mon, India com News Desk |; August 29; 2016 1:33pm (2016-08-29). "National Sports Day: PV Sindhu, Sakshi Malik, Dipa Karmakar and Jitu Rai conferred with Rajiv Gandhi Khel Ratna Award". India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-06.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)