தலீப் சிங்

இந்திய சீருடற்பயிற்சி பயிற்சியாளர்

தலீப் சிங் (Dalip Singh) இந்தியாவின் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சீருடற்பயிற்சி விளையாட்டுப் பயிற்சியாளராவார். துலீப் சிங் என்றும் அழைக்கப்படும் இவர் 1932 ஆம் ஆன்டு பிறந்தார்.[1] [2] இவரது முக்கியப் பயிற்சி மையம் அகர்த்தலா நகரத்திலுள்ள விவேகானந்தா பையாமகர் பயிற்சிக்கூடமாகும். [3] 1964 ஆம் ஆண்டில் அகர்த்தலாவில் பணியாற்றத் தொடங்கிய சிங்கின் மேற்பார்வையின் கீழ்தான் இந்த மையத்தில் திரிபுராவில் சீருடற்பயிற்சி விளையாட்டு தொடங்கியது.[4] தலீப் சிங்கின் குறிப்பிடத்தக்க மாணவர்களில் மந்து தேப்நாத், பாரத் கிசோர் தெபர்மன், கல்பனா தேப்நாத், பிசுவேசுவர் நந்தி உள்ளிட்ட மற்றும் பலர் அடங்குவர்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

தலிப் சிங் அரியானாவின் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் இந்திய இராணுவ விளையாட்டு பயிற்றுநராக இருந்தார். அறுபதுகளின் நடுப்பகுதியில், சீருடற்பயிற்சி திறமைக்காக சாரணர் அமைப்புக்காக இவர் அகர்தலாவுக்கு அனுப்பப்பட்டார். இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் பாட்டியாலாவின் தேசிய விளையாட்டு நிறுவனத்தில் (இப்போது நேதாச்சி சுபாசு தேசிய விளையாட்டு நிறுவனம்) உருசிய சீருடற்பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றார். அகர்தலாவுக்கு வருகை தந்த பின்னர் 1969 ஆம் ஆண்டில் மணிப்பூரி மருத்துவர் சுசிலா தேவியை மணந்து திரிபுராவில் வாழத்தொடங்கினார். மாநிலத்தை சீருடற்பயிற்சி விளையாட்டில் சிறந்த மாநிலமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட முடிவு செய்தார். அக்டோபர் 16, 1987 அன்று தன்னுடைய 55 ஆவது வயதில் இறந்தார். [1]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Flourish In Suspension | Outlook India Magazine". outlookindia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
  2. "Dipa revives gymnastics legacy in Tripura – Mysuru Today" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Battling odds to make name in sport". Deccan Herald (in ஆங்கிலம்). 2016-09-10. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
  4. "Leap to gold". The Indian Express (in ஆங்கிலம்). 2014-08-19. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலீப்_சிங்&oldid=3595858" இலிருந்து மீள்விக்கப்பட்டது