இந்தியாவில் சீருடல்பயிற்சி

இந்தியாவில் சீருடற்பயிற்சி (Gymnastics in India) என்பது 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இந்தியாவினைச் சார்ந்த அஷிஸ்குமார் முதல் பதக்கத்தை சீருடற்பயிற்சியில் பெற்றுத்தந்த போது வெளி உலகுக்கு தெரிந்தது.[1]இப்போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார். இந்நிகழ்வின் மூலம் தான் இந்தியா சீருடற்பயிற்சியில் தனது காலடியை உலக அரங்கில் பதித்தது. ஆசிஸ்குமாரின் தலைமைப்பயிற்றுநர் ஒரு நாளிதழ்களுக்கு பேட்டியளிக்கும் பொழுது ஆகத்து 2009-ல் இந்தியாவில் சீருடல் பயிற்சி செய்வதற்கு எந்தவிதமான உபகரணங்களும் இல்லை. ஆசிஸ்குமார் 2010ஆம் ஆண்டுவரை கடினமான தரையில்தான் பயிற்சி செய்தார். பிறகு 20 வருடம் மிகவும் பழமையான உபகரணங்களைப் பெற்றோம். மேலும் இந்திய அணியை அக்டோபரில் நடைபெற்ற உலக வாகையாளர் போட்டிக்கு அனுப்பவில்லை. ஆகவே 2012-ல் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறவில்லை. 2014-ல் பொதுநலவாய போட்டியில் ஆசிஸ்குமாருடன் சேர்த்து பெண் சீருடற்போட்டியாளர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். 2014 பொதுநலவாய போட்டியில் தீபா கர்மாகர், வெண்கலப்பதக்கம் பெற்றார். இதுவே இந்தியா பெண்கள் பிரிவில் பெற்ற முதல் பதக்கமாகும். தீபா கர்மாகரின் இரண்டாவது முயற்சியின் பொழுது செய்யப்பட்ட புரூடோனாவா தாவல் அதிக புள்ளிகளைப் பெற்று தந்தது.[2][3]

இந்தியாவில் சீருடல்பயிற்சி
சீருடற்பயிற்சி தில்லியில்i
நிருவாகக் குழுஇந்திய சீருடற்பயிற்சி கூட்டமைப்பு

முக்கியமான போட்டிகளில் இந்திய சீருடற்பயிற்சியாளர்கள் வென்ற பதக்கங்கள் தொகு

போட்டி தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
உலக கோப்பை 1 0 1 2
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 0 0 1 1
பொதுநலவாய விளையாட்டுகள் 0 1 2 3
ஆசிய வாகையாளர் போட்டி 0 0 3 3
மொத்தம் 1 1 7 9

கோடைக்கால ஒலிம்பிக்கில் குறிப்பிடத்தக்க செயல்திறன் தொகு

ஆண்டு நிகழ்வு போட்டியாளர் முடிவு
2016
மகளிர்-சீருடற்போட்டி தீபா கர்மாகர் 4வது இடம்

குறிப்பிடத்தக்கவர்கள் தொகு

குறிப்பிடத்தக்க பயிற்றுநர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு