பிசு(வளைய ஆக்டாடையீன்) நிக்கல்

பிசு(வளைய ஆக்டாடையீன்) நிக்கல் (0) (Bis(cyclooctadiene)nickel(0)) என்பது Ni(C8H12)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம உலோக சேர்மமாகும். காற்றினாலும் பாதிக்கப்படும் இச்சேர்மம் மஞ்சள் நிறத் திண்மமாகக் காணப்படுகிறது. வேதித் தொகுப்பு வினைகளில் பயன்படும் Ni(0) வை வழங்கக்கூடிய பொதுவான ஆதார மூலமாக பிசு(வளைய ஆக்டாடையீன்) நிக்கல் கருதப்படுகிறது[1].

பிசு(வளைய ஆக்டாடையீன்)நிக்கல்(0)
பெயர்கள்
வேறு பெயர்கள்
நிக்கல் பிசுகாட்டு, Ni(COD)2
இனங்காட்டிகள்
1295-35-8 Y
ChemSpider 17215769 Y
InChI
  • InChI=1S/2C8H8.Ni/c2*1-2-4-6-8-7-5-3-1;/h2*1-2,7-8H2; Y
    Key: AYHVBQBQROAZHP-UHFFFAOYSA-N Y
  • InChI=1/2C8H8.Ni/c2*1-2-4-6-8-7-5-3-1;/h2*1-2,7-8H2;
    Key: AYHVBQBQROAZHP-UHFFFAOYAH
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6433264
வே.ந.வி.ப எண் QR6135000
SMILES
  • C1C[C][C]CC[C][C]1.C1C[C][C]CC[C][C]1.[Ni]
பண்புகள்
C16H24Ni
வாய்ப்பாட்டு எடை 275.06 கிராம்/மோல்
தோற்றம் மஞ்சள் நிறத் திண்மம்
உருகுநிலை 60 °C (140 °F; 333 K) (சிதைவடையும்)
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R10 R40
S-சொற்றொடர்கள் S36/37
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

Ni(cod)2, எனச் சுருக்கக் குறியீடாக குறிக்கப்படும் இச்சேர்மம் டயாகாந்த ஒருங்கிணைவு அணைவுடன் நான்முக நிக்கல்(0) வாக தோன்றுகிறது. இந்த ஒருங்கினைப்புடன் 1,5-வளைய ஆக்டாடையீன் ஈந்தணைவிகள் ஆல்க்கீன் தொகுதிகளுடன் பிணைந்துள்ளன. நிரிலி நிக்கல்(II) அசிட்டைலசிட்டோனேட்டை டையொலிபீன் முன்னிலையிலொடுக்கம் செய்து இந்த அணைவுச் சேர்மத்தை தயாரிக்கிறார்கள்.

1/3 [Ni3(acac)6] + 2 cod + 2 AlEt3 → Ni(cod)2 + 2 acacAlEt2 + C2H6 + C2H4.

பென்சீன் மற்றும் THF இல் பிசு(வளைய ஆக்டாடையீன்) நிக்கல் (0) மிதமாகக் கரைகிறது. பிசு(வளைய ஆக்டாடையீன்) ஈந்தணைவிகள் பாசுப்பீன், பாசுபைட்டு மற்றும் ஐசோசயனைடுகளால் எளிமையாக இடப்பெயர்ச்சி செய்யப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Günther Wilke (1988). "Contributions to Organo-Nickel Chemistry". Angewandte Chemie International Edition 27 (1): 185–206. doi:10.1002/anie.198801851.