பிஜி புதர் கதிர்க்குருவி
பிஜி புதர் கதிர்க்குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சிசுடிகோலிடே[2]
|
பேரினம்: | கோரோர்னிசு
|
இனம்: | கோ. உருபிகாபிலா
|
இருசொற் பெயரீடு | |
கோரோர்னிசு உருபிகாபிலா (இராம்சே, 1832) | |
வேறு பெயர்கள் | |
செட்டியா உருபிகாபிலா, விட்டியா உருபிகாபிலா |
பிஜி புதர் கதிர்க்குருவி (Fiji bush warbler)(கோரோர்னிசு உருபிகாபிலா) என்பது செட்டிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினமாகும்.
பரவல்
தொகுஇது பிஜி தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இந்தச் சிற்றினத்தின் கீழ் நான்கு துணையினங்கள் பிஜியின் அனைத்து முக்கிய தீவுகளிலும் காணப்படுகின்றன. இந்தச் சிற்றினத்திற்குக் கடந்த காலத்தில் விட்டியா பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டது. ஆனால் முட்டையின் நிறம், ஓசை மற்றும் உருவ அடிப்படையில் உள்ள ஒற்றுமைகள் காரணமாக கோரோர்னிசு பேரினத்தில் வைக்கப்பட்டது.[3][4]
விளக்கம்
தொகுபிரகாசமான ஆரஞ்சு-செந்தலையுடன் கூடிய சிறிய, சேவல் போன்ற வால் கொண்ட கதிர்க்குருவியாகும். இதன் அடிப்பகுதி சாம்பல் நிறத்தில் மேற்பகுதி ஆலிவ்-பழுப்பு நிறத்திலும் சிவப்பு நிறம் கலந்த வாலுடன் கூடியது. அடர்ந்த அடிமரங்கள் மற்றும் மூங்கில் மலைப்பகுதி காடுகளில் காணப்படும். இது மிகவும் சத்தமாக ஒலி எழுப்பக் கூடியது. இதனுடைய அழைப்பு “டிசிக் டிச்கி” என்பதாகும்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Horornis ruficapilla". IUCN Red List of Threatened Species 2016: e.T22714403A94415706. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22714403A94415706.en. https://www.iucnredlist.org/species/22714403/94415706. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Alström, P; Ericson, PG; Olsson, U; Sundberg, P; Per G.P. Ericson, Urban Olsson & Per Sundberg (Feb 2006). "Phylogeny and classiWcation of the avian superfamily Sylvioidea". Molecular Phylogenetics and Evolution 38 (2): 381–397. doi:10.1016/j.ympev.2005.05.015. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:16054402.
- ↑ el Hoyo, J., Collar, N.J., Christie, D.A., Elliott, A., Fishpool, L.D.C., Boesman, P. and Kirwan, G.M. 2016. HBW and BirdLife International Illustrated Checklist of the Birds of the World. Volume 2: Passerines. Lynx Edicions and BirdLife International, Barcelona, Spain and Cambridge, UK.
- ↑ Sibley, C. G.; Monroe, B. L. 1990. Distribution and taxonomy of birds of the world. Yale University Press, New Haven, USA
- ↑ "Fiji Bush Warbler - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-21.