பித்தப்பைக் கான்

(பித்தப்பைக்கான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பித்தப்பைக்கான் என்பது பித்தப்பையை பொதுக் கல்லீரற் கானுடன் இணைக்கும் சிறிய நாள[1] அமைப்பாகும். இவை இரண்டும் இணைந்து பொதுப் பித்தக்கான் உருவாகுகின்றது. பித்தப்பைக்கான் பித்தப்பை நாடியின் அருகாமையில் அமைந்துள்ளது. இதனுள் பகுதியில் சுருள்வடிவ அடைப்பிதழ் அமைந்துள்ளது. இது அடைப்பிதழாயினும் இதனது குறைவான செயற்படுதிறனால் பித்தப்பையில் இருந்து வெளியேறிய பித்தம் பின்னோக்கிப் போவது தடுக்கப்படுவது இல்லை, மாறாக பித்தநீர் சுயாதீனமாக பித்தப்பைக்கும் பித்தக்கானுக்கும் இடையே சென்றுவருகின்றது.[2]

பித்தப்பைக்கான்
1: வலது கல்லீரற் சோணை
2: இடது கல்லீரற் சோணை
3: நாற்புடையக் கல்லீரற் சோணை
4: கல்லீரல் வட்டக் கட்டுநாண்
5: அரிவாளுருக் கட்டுநாண்
6: கல்லீரல் வாற்சோணை
7: கீழ்ப் பெருநாளம்
8: பொதுப் பித்தக்கான்
9: கல்லீரல் நாடி
10: வாயினாளம்
11: பித்தப்பைக்கான்
12: பொதுக் கல்லீரற் கான்
13: பித்தப்பை
விளக்கங்கள்
தமனிcystic artery
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்ductus cysticus
MeSHD003549
TA98A05.8.02.011
TA23101
FMA14539
உடற்கூற்றியல்
1. பித்தக்கான்கள்: 2. உட்கல்லீரல் பித்தக்கான், 3. இடது, வலது கல்லீரல் கான்கள், 4. பொதுக் கல்லீரற் கான், 5. பித்தப்பைக் கான், 6. பொதுப் பித்தக்கான், 7. வாட்டரின் குடுவையம், 8. பெரும் முற்சிறுகுடல் முகிழ்ப்பு
9. பித்தப்பை, 10–11. வலது மற்றும் இடது கல்லீரல் சோணை. 12. மண்ணீரல்.
13. உணவுக்குழாய். 14. இரைப்பை. சிறுகுடல்: 15. முன்சிறுகுடல், 16. இடைச்சிறுகுடல்
17. கணையம்: 18: துணைக் கணையக் கான், 19: கணையக் கான்.
20–21: வலது, இடது சிறுநீரகம்.

பித்தக்கற்கள் பித்தப்பையிலிருந்து வெளியேறி பித்தப்பைக்கானை அல்லது பொதுப் பித்தக்கானை அடைக்கலாம், இதனால் பித்தநீர் ஓட்டம் தடைப்பட்டு தேங்குகின்றது. இதனால் பித்தப்பையுள் அழுத்தம் அதிகரித்து வீங்குகின்றது. இந்நிலையில் குறிப்பிட்ட நபருக்கு தாங்க முடியாத வலி உணரப்படும். இது பித்தத் திருகுவலி (biliary colic) எனப்படும்.

படத்தொகுப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பித்தப்பைக்_கான்&oldid=3376438" இலிருந்து மீள்விக்கப்பட்டது