பிந்துலு மருத்துவமனை

மலேசியாவில் உள்ள ஒரு மருத்துவமனை

பிந்துலு மருத்துவமனை (Bintulu Hospital) மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் அமைந்துள்ள நான்காவது பெரிய மருத்துவமனையாகும்.

பிந்துலு மருத்துவமனை
Bintulu Hospital
அமைவிடம் இயலான் புக்கிட் நியாபௌ, பிந்துலு, சரவாக், மலேசியா
ஆள்கூறுகள் 3°13′46.32″N 113°6′3.7″E / 3.2295333°N 113.101028°E / 3.2295333; 113.101028
நிதி மூலதனம் பொது
வகை பொது, கற்பித்தல்
அவசரப் பிரிவு ஆம்
படுக்கைகள் 292 (2017 நிலவரம்)
நிறுவல் 21 மே 2000[1]
வலைத்தளம் [hbtu.moh.gov.my பிந்துலு மருத்துவமனை
Bintulu Hospital]
பட்டியல்கள்

பின்னணி தொகு

பிந்துலு மருத்துவமனை 2000 ஆம் ஆண்டில் மே மாதம் 21 ஆம் தேதியன்று உருவாக்கப்பட்டது. வளர்ந்து வரும் மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பிந்துலு நகருக்குள் நோயாளிகளின் வருகையைக் குறைப்பதற்காகவும் தொடங்கப்பட்டது.[2]

வசதிகள் தொகு

பிந்துலு மருத்துவமனையானது மருத்துவமனை தகவல் அமைப்பு என்ற முழுமையான கணினிமயமாக்கப்பட்ட ஓர் அமைப்பைக் கொண்டுள்ளது. மருத்துவமனை தகவல் அமைப்பு என்பது மருத்துவமனையின் நிர்வாக, நிதி மற்றும் மருத்துவ அம்சங்களை நிர்வகிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான ஒருங்கிணைந்த தகவல் அமைப்பாகும். இந்த முறையை முழுமையாக செயல்படுத்தும் முயற்சிக்காக மலேசியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பொது மருத்துவமனைகளில் பிந்துலு மருத்துவமனையும் ஒன்றாகும்.[2]

பிந்துலு மருத்துவமனையானது, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், எலும்பியல், கண் மருத்துவம், அறுவை சிகிச்சை மற்றும் குழந்தை மருத்துவ சேவைகள் உள்ளிட்ட பொது சிகிச்சைகள் முதல் நிபுணர்கள் வரை பரந்த அளவிலான மருத்துவ சிகிச்சைகளை வழங்குகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Hospital Bintulu, Sarawak » Public Hospitals". Malaysian Medical Resources.
  2. 2.0 2.1 2.2 "Latar belakang hospital" (in malay). Hospital Bintulu.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிந்துலு_மருத்துவமனை&oldid=3899022" இலிருந்து மீள்விக்கப்பட்டது