பினாகினி அதிவிரைவுத் தொடருந்து

"'12611 மற்றும் 12612 இந்த எண்களின் கீழ் இந்திய ரயில்வே துறையினரால் இயக்கப்படும் அதிவிரைவு தொடருந்துகளில் ஒன்று பினாகினி அதிவிரைவு தொடருந்து ஆகும். இந்த தொடருந்து ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் விஜயவாடா சந்திப்பு நிலையத்திலிருந்து தமிழ்நாடு மாநிலத்தின் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் நிலையம் வரை இயக்கப்படுகிறது.[1] தெற்கு கடற்கரை ரயில்வே துறையினரால் விஜயவாடா சந்திப்பு நிலையத்தில் இருந்து இந்த தொடருந்து இயக்கப்படுகிறது.[2]

பினாகினி அதிவிரைவு தொடருந்து
கண்ணோட்டம்
வகைSuperfast Express train
நிகழ்வு இயலிடம்ஆந்திர பிரதேசம்
தமிழ்நாடு
முதல் சேவை1 சூலை 1992; 28 ஆண்டுகள் முன்னர் (1992-07-01)
நடத்துனர்(கள்)தெற்கு கடற்கரை ரயில்வே
வழி
தொடக்கம்விஜயவாடா சந்திப்பு
இடைநிறுத்தங்கள்12
முடிவுசென்னை சென்ட்ரல்
ஓடும் தூரம்431 km (268 mi)
சராசரி பயண நேரம்7 மணி நேரம்
சேவைகளின் காலஅளவுதினந்தோறும்
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)அமரும் வசதி கொண்ட பெட்டிகள் இரண்டாம் வகுப்பு அமரும் வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் பொது பெட்டிகள்
இருக்கை வசதிவசதி உண்டு
படுக்கை வசதிவசதி இல்லை
உணவு வசதிகள்வசதி உண்டு
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்60 km/h (37 mph) average with halts
வழிகாட்டுக் குறிப்புப் படம்

Pinakini Express Route map.jpg

பெயர்க்காரணம்தொகு

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு வரை ஓடும் ஆறான பினாகினி ஆற்றினை பெருமைப்படுத்தும் விதமாக ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இடையே இயக்கப்படும் இந்த அதிவிரைவு தொடருந்திற்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

பயணப் பெட்டிகளின் வடிவமைப்புதொகு

பினாகினி அதிவிரைவு தொடருந்து, குளிர்சாதன வசதி கொண்ட மற்றும் அமரும் வசதி கொண்ட பெட்டிகள் 3 முன்பதிவு வசதி உள்ள அமரும் வசதி கொண்ட பெட்டிகள் 8 முன்பதிவு இல்லாத பொது பெட்டிகள் மற்றும் சமையலறை பெட்டி ஒன்று என மொத்தம் இருபத்து நான்கு பெட்டிகளைக் கொண்டு இயங்கி வருகிறது. அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தை தாங்கும் அளவு இந்த தொடருந்தில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் தொடருந்துகளில் ஒன்றான இது 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது வெள்ளி விழாவை விழாவை கொண்டாடியது. இவ்விரு மாநிலங்களிலும் பணி புரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலராலும் விரும்பப்படும் இந்த தொடருந்தில் தான் இந்தியாவிலேயே முதன்முறையாக பசுமை கழிப்பறை அமைக்கப்பட்டது. [3]

பயணிகளின் எண்ணிக்கை, திருவிழா காலம் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ரயில்வே துறையினரால் பெட்டிகளின் எண்ணிக்கை பெட்டிகளின் எண்ணிக்கை மாற்றப்படலாம்.

வழித்தடமும் நிறுத்தங்களும்தொகு

இந்த பினாகினி அதிவிரைவு தொடருந்து, விஜயவாடா நிலையத்தில் இருந்து புறப்பட்டு தெனாலி, ஓங்கோல், சிங்கராய கொண்டா, காவாலி, நெல்லூர் கூடுர் மற்றும் சூலூர் பேட்டை நிலையங்களின் வழியாக இயக்கப்பட்டு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடைகிறது. மறு மார்க்கமாகவும் இதே வழித்தடத்தில் இயக்கப்பட்டு விஜயவாடா நிலையத்தை அடைகிறது.

பயண அட்டவணைதொகு

வண்டி எண் நிலையக் குறியீடு புறப்படும் நிலையம் புறப்படும் நேரம் புறப்படும் நாள் சேரும் நிலையம் சேரும் நேரம் சேரும் நாள்
12711 BZA விஜயவாடா சந்திப்பு தொடருந்து நிலையம் 06.00 AM தினந்தோறும் சென்னை சென்ட்ரல் தொடருந்து நிலையம் 01.00 PM தினந்தோறும்
12712 MAS சென்னை சென்ட்ரல் தொடருந்து நிலையம் 02.05 PM தினந்தோறும் விஜயவாடா சந்திப்பு தொடருந்து நிலையம்]] 09.10 PM தினந்தோறும்

வண்டி எண் 12711தொகு

பினாகினி அதிவிரைவு தொடருந்து வண்டியானது விஜயவாடா சந்திப்பு தொடருந்து நிலையத்தில் இருந்து தினந்தோறும் காலை 06.00 மணிக்கு புறப்பட்டு தெனாலி, ஓங்கோல், சிங்கராய கொண்டா, காவாலி, நெல்லூர் கூடுர் மற்றும் சூலூர் பேட்டை வழியாக இயக்கப்பட்டு 12 நிறுத்தங்களையும் 75 நிலையங்களையும் கடக்க சராசரியாக மணிக்கு 61 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 7 மணி நேரம் பயணித்து சென்னை சென்ட்ரல் தொடருந்து நிலையத்தை அதேநாளில் மதியம் 01.00 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 431 கிலோ மீட்டர் ஆகும். இந்த தொடருந்து தனது பயணத்தில் சில நிலையங்களுக்கு இடையிலான வழித்தடத்தில் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி இந்திய ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[4]

வண்டி எண் 12712தொகு

மறுமார்க்கமாக 12712 என்ற எண்ணைக் கொண்ட இந்த தொடருந்து வண்டியானது சென்னை சென்ட்ரல் தொடருந்து நிலையத்திலிருந்து தினமும் மதியம் 02.05 மணிக்கு இயக்கப்பட்டு 12 நிறுத்தங்களையும் 75 நிலையங்களையும் கடக்க சராசரியாக மணிக்கு 61 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 7 மணி நேரம் பயணித்து சென்னை சென்ட்ரல் தொடருந்து நிலையத்தை அதேநாளில் மதியம் 01.00 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 431 கிலோ மீட்டர் ஆகும். இந்த தொடருந்து தனது பயணத்தில் சில நிலையங்களுக்கு இடையிலான வழித்தடத்தில் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்னிந்திய ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[5]

இந்த தொடருந்தின் வேகம் சராசரியாக மணிக்கு 55 கிலோ மீட்டர்களுக்கு மேல் இருப்பதால் இந்திய ரயில்வே சட்டத்தின்படி அதிவிரைவுக்கான கூடுதல் கட்டணம் பயண கட்டணத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்தொகு

  1. "Train Name Index" (PDF). பார்த்த நாள் 31 May 2017.
  2. "Chennai – Vijayawada Pinakini Express train to be delayed – Times of India".
  3. "Green toilets introduced in Pinakini Express". The Hindu.
  4. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."".
  5. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."".