பின் சம்பா (நெல் பருவம்)
கொடை காலமான பின் சம்பாப் பருவம் (Late Samba Season) வேளாண் வழக்கு பின் சம்பாப் பட்டம் என்பது; தென்னிந்திய மாநிலங்களான தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு, அல்லது நடவு தொடங்கும் காலத்தையும், மற்றும் சாகுபடி கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும். அக்டோபர் - நவம்பர் (தமிழ்: ஐப்பசி - கார்த்திகை]) மாதங்களில் துவங்கும் இப்பருவம், மார்ச்சு - ஏப்ரல் (தமிழ்: பங்குனி - சித்திரை) மாதங்களில் முடிவடைகிறது.[1]
130 – 135 நாட்களைக் கொண்ட இந்த பின் சம்பா பருவம், மத்தியகாலம், மற்றும் நீண்டகால நெல் வகைகளை சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.
பருவ அட்டவணை
தொகுவிதைக்கும் மாதம் | கால அளவு (நாட்கள்) | தகுந்த இரகங்கள் | பயிரிடும் இடங்கள் |
---|---|---|---|
அக்டோபர் - நவம்பர் | 130 – 135 | மத்தியகாலம், மற்றும் நீண்டகாலம் | திருவள்ளூர், மதுரை, தேனி கோயம்புத்தூர், ஈரோடு, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்.[2] |