பிபின் சந்திர திரிபாதி

இந்திய அரசியல்வாதி

பிபின் சந்திர திரிபாதி ( Bipin Chandra Tripathi); 23 பிப்ரவரி 1945 - 30 ஆகஸ்ட் 2004) இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட ‘உத்தராகாண்ட் கிராந்தி தளம்’ என்ற அரசியல் கட்சியின் நிறுவனர் உறுப்பினர் ஆவார்.[1]

பிபின் சந்திர திரிபாதி
உத்தராகண்ட சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2002–2004
தொகுதிதுவாரகாத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 பிப்ரவரி 1945
துவாரகாத், ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போதைய உத்தராகண்டம், இந்தியா)
இறப்பு30 ஆகத்து 2004(2004-08-30) (அகவை 59)
துவாரகாத், உத்தராகண்டம், இந்தியா
அரசியல் கட்சிஉத்தராகாண்ட் கிராந்தி தளம்
முன்னாள் கல்லூரிகுமாவுன் பல்கலைக்கழகம்
வேலை
  • சமூக ஆர்வலர்
  • சுற்றுச்சூழல் ஆர்வலர்
  • ஊடகவியலாளர்
  • அரசியல்வாதி
அறியப்படுவதுஉத்தராகாண்ட இயக்கம்
சிப்கோ இயக்கம்

பிபின் திரிபாதி ஒரு முக்கிய சோசலிச ஆர்வலரும், சுற்றுச்சூழல் ஆர்வலரும் மற்றும் பத்திரிகையாளரும் ஆவார். அல்மோராவில் உள்ள துவாரகாத்தில் பட்டப்படிப்புக் கல்லூரியை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையுடன் இவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். துவாரகாத்தில் இருந்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வெளியாகும் துரோணாஞ்சல் பிரஹாரி என்ற பத்திரிக்கையின் உரிமையாளர் ஆசிரியராக இருந்தார்.

பிபின் திரிபாதி 23 பிப்ரவரி 1945 அன்று அல்மோரா மாவட்டத்தின் துவாரகாத்தின் டெய்ரி கிராமத்தில் மதுரா தத் திரிபாதி மற்றும் கலாவதி தேவி ஆகியோருக்குப் பிறந்தார். நைனித்தால் மாவட்டத்தின் முக்தேஷ்வரில் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியைப் பெற்றார்.

சமூக மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாடு

தொகு

1967இல் குமாவுன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு சமாஜ்வாடி இயக்கத்தில் சேர்ந்து தனது பங்களிப்பை வழங்கினார். சோசலிச தலைவர் ராம் மனோகர் லோகியாவின் எண்ணங்களால் இவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். நைனித்தால் மாவட்டத்தின் நிலமற்ற தெராய் கிராமவாசிகளுக்காக 1965 முதல் 1969 வரை போராடினார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல பொதுப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். காகித ஆலைகள், லால்குவான் போன்ற மாபியாக்கள் மற்றும் வணிகர்களால் காடுகள் கொள்ளையடிக்கப்படுவதற்கு எதிராக தனது செய்தித்தாள் மூலம் போராடினார். இதன் விளைவாக இவருக்கு எதிராக பத்திரிகை சபையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உத்தராகண்டம் வன இயக்கத்தின் முன்னணியில் இருந்தவர்களில் இவரும் ஒருவர். 1974 ஆம் ஆண்டில், மற்ற ஆர்வலர்களுடன் சேர்ந்து, நைனித்தாலில் வன ஏலத்தை எதிர்த்த இவர், மற்ற 18 ஆர்வலர்களுடன் கைது செய்யப்பட்டார். இந்த போராட்டம் இப்பகுதி முழுவதும் ஆர்ப்பாட்டத்தைத் தூண்டியது. 1974 ஆம் ஆண்டில், இவரது தலைமையின் கீழ், சிப்கோ இயக்கத்தின் மிகப்பெரிய போராட்டம், சச்சாரிதார் காடுகளை காப்பாற்றுவதற்காக, சகாரன்பூர் காகித ஆலைக்கு எதிராக இருந்தது. இப்போராட்டத்தில் இவர்கள் காடுகளை வெற்றிகரமாக காப்பாற்றினர். 1975ஆம் ஆண்டு நெருக்கடி நிலையின் போது இவர் 22 மாதங்களுக்கும் மேலாக சிறையிலிருந்தார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

திரிபாதி டாக்டர் டி. டி. பந்த், இந்திரமணி படோனி மற்றும் காசி சிங் ஐரி ஹரி தத் பகுகுனா ஆகியோருடன் சேர்ந்து ‘உத்தராகாண்ட் கிராந்தி தளம்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இந்தக் கட்சி 26 ஜூலை 1979 அன்று நைனித்தாலில் நிறுவப்பட்டது. உத்தராகாண்டம் மலைவாழ் மக்களின் போராட்டங்களுக்கு உறுதுணையாகதியுடன் இருந்தார். உத்தராகாண்ட் மாநிலத்தை நிறுவியதற்காகப் போராடிய உறுதியான தலைவர்களில் ஒருவரான இவர், இந்த இலக்கை அடைய வெற்றிகரமாக பணியாற்றினார். புதிதாக உருவாக்கப்பட்ட உத்தராகண்டம் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டில் உத்தராகாண்ட சட்டப் பேரவையில் உறுப்பினராக ஆனார்.

இறப்பு

தொகு

பிபின் திரிபாதி தனது 59வது வயதில் 2004 ஆகஸ்ட் 30 அன்று இறந்தார். தான் இறக்கும் தருவாயில், இவர் ‘உத்தராகாண்ட் கிராந்தி தளத்தின்’ மாநில பிரிவின் தலைவராகவும் இருந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Khushi at Bedupako (2012-08-29). "श्री बिपिन चन्द्र त्रिपाठी". Bedupako.com. Archived from the original on 8 November 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-05-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிபின்_சந்திர_திரிபாதி&oldid=4085247" இலிருந்து மீள்விக்கப்பட்டது