பிரசன்னதேப் மகளிர் கல்லூரி

பிரசன்னதேப் மகளிர் கல்லூரி அல்லது பி. டி. மகளிர் கல்லூரி என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் 1950 [1] ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இளங்கலைக்கான மகளிர் கல்லூரியாகும், இது ஜல்பைகுரி மாவட்டத்தில் மட்டுமல்லாமல் வட வங்காள மாவட்டங்களிலுள்ள பழமையான மகளிர் கல்லூரிகளில் ஒன்றாகும். கலை மற்றும் அறிவியலில் இளங்கலை படிப்புகளை வழங்குகிம் இக்கல்லூரி வடக்கு வங்காள பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது [2].

பிரசன்னதேப் மகளிர் கல்லூரி
வகைஇளங்கலை கல்லூரி
உருவாக்கம்1950; 74 ஆண்டுகளுக்கு முன்னர் (1950)
தலைவர்ஸ்ரீ தபன் குமார் மித்ரா
முதல்வர்முனைவர் சமாப்தி சாஹா
அமைவிடம், ,
735101
,
26°31′05″N 88°43′51″E / 26.518°N 88.7308°E / 26.518; 88.7308
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புவடக்கு வங்காள பல்கலைக்கழகம்
இணையதளம்கல்லூரி இணையதளம்
பிரசன்னதேப் மகளிர் கல்லூரி is located in மேற்கு வங்காளம்
பிரசன்னதேப் மகளிர் கல்லூரி
Location in மேற்கு வங்காளம்
பிரசன்னதேப் மகளிர் கல்லூரி is located in இந்தியா
பிரசன்னதேப் மகளிர் கல்லூரி
பிரசன்னதேப் மகளிர் கல்லூரி (இந்தியா)

வரலாறு

தொகு

காலஞ்சென்ற ராஜா பிரசன்னதேப் ராய்கட் மற்றும் அவரது மனைவி ராணி அஷ்ருமதி தேவியின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டதாலேயே, அவரை நினைவுகூரும் விதமாக இக்கல்லூரிக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது 73 ஆசிரியர் பணியாளர்கள் மற்றும் 35 ஆசிரியர் அல்லாத பணியாளர்களால் பயிற்றுவிக்கப்படும் இக்கல்லூரி வட வங்காள மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3400 மாணவர்களின் கல்வித்தேவையை பூர்த்தி செய்துவருகிறது.

துறைகள்

தொகு

அறிவியல் பிரிவு

தொகு
  • கணிதம்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • விலங்கியல்
  • தாவரவியல்

கலைப்பிரிவு

தொகு
  • பெங்காலி
  • ஆங்கிலம்
  • சமஸ்கிருதம்
  • வரலாறு
  • நிலவியல்
  • அரசியல் அறிவியல்
  • தத்துவம்
  • கல்வி
  • பொருளாதாரம்
  • கணினி அறிவியல்

அங்கீகாரம்

தொகு

பி டி மகளிர் கல்லூரியானது பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [1] மேலும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (NAAC) பி++ தரத்துடன் (மதிப்பெண் 2.88) இரண்டாவது சுழற்சியில் அங்கீகாரம் அடைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு