பிரசியோடைமியம்(V) ஆக்சைடு நைத்திரைடு
பிரசியோடைமியம்(V) ஆக்சைடு நைத்திரைடு (Praseodymium(V) oxide nitride) என்பது PrNO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டினால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இச்சேர்மத்தில் பிரசியோடைமியம் +5 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. பிரசியோடைமியம் உலோகமும் நைட்ரிக் ஆக்சைடும் திண்ம நியான் முன்னிலையில் 4 கெல்வின் வெப்பநிலையில் வினைபுரிந்து பிரசியோடைமியம்(V) ஆக்சைடு நைத்திரைடு உருவாகிறது. பிரசியோடைமியம் நைட்ரசன் அணுக்களுடன் முப்பிணைப்பும், ஆக்சிசன் அணுக்களுடன் இரட்டைப் பிணைப்பும் கொண்ட நேர்கோட்டு படிகக் கட்டமைப்பை பிரசியோடைமியம்(V) ஆக்சைடு நைத்திரைடு ஏற்கிறது.[1]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
PrNO | |
வாய்ப்பாட்டு எடை | 170.91 கி/மோல் |
உருகுநிலை | −261 °C (−437.8 °F; 12.1 K) (சிதையும்) |
கட்டமைப்பு | |
மூலக்கூறு வடிவம் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வினைகள்
தொகுகூடுதலான நைட்ரிக் ஆக்சைடுடன் பிரசியோடைமியம்(V) ஆக்சைடு நைத்திரைடு வினைபுரிந்து NPrO(NO) மற்றும் NPrO(NO)2 போன்ற அணைவுச் சேர்மங்களை உருவாக்கி இச்சேர்மம் ஓர் இலூயிசு அமிலமாக வெளிப்படுகிறது. மேலும் பிரசியோடைமியம்(IV) ஆக்சைடாகவும் நைட்ரசனாகவும் சிதைவடைகிறது:[1]
- PrNO → PrO2 + N2
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Hu, Shu-Xian; Jian, Jiwen; Su, Jing; Wu, Xuan; Li, Jun; Zhou, Mingfei (2017). "Pentavalent lanthanide nitride-oxides: NPrO and NPrO− complexes with N≡Pr triple bonds" (in en). Chemical Science 8 (5): 4035–4043. doi:10.1039/C7SC00710H. பன்னாட்டுத் தர தொடர் எண்:2041-6520. பப்மெட்:28580119.