பிரசியோடைமியம் டெட்ராபோரைடு
பிரசியோடைமியம் டெட்ராபோரைடு (Praseodymium tetraboride) என்பது PrB4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியமும் போரானும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பிரசியோடைமியம் டெட்ராபோரைடு
| |
இனங்காட்டிகள் | |
12077-78-2 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
PrB4 | |
வாய்ப்பாட்டு எடை | 184.15 கி/மோல் |
அடர்த்தி | 5.6 கி/செ.மீ3 |
உருகுநிலை | 2,350 °C (4,260 °F; 2,620 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு2350 பாகை செல்சியசு வெப்பநிலையில் பிரசியோடைமியம் மற்றும் போரான் தனிமங்கள் நேரடியாக வினையில் ஈடுபட்டு பிரசியோடைமியம் டெட்ராபோரைடு உருவாகிறது.
- Pr + 4 B → PrB4
பண்புகள்
தொகுபிரசியோடைமியம் டெட்ராபோரைடு நாற்கோணப் படிகத் திட்டத்தில் படிகங்களாக உருவாகிறது. P4/mbm என்ற இடக்குழுவில் a = 0.7242 நானோமீட்டர், c = 0.4119 நானோமீட்டர், Z = 4, என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் தோரியம் டெட்ராபோரைடு படிக அமைப்பையும் கொண்டுள்ளது.[1][2]
திண்மநிலை மற்றும் திரவநிலை ஒன்றாகச் சேர்ந்து இரண்டாவது திண்மநிலையை உருவாக்கும் வினையான பெரிடெக்டிக் வினையில் 2350 பாகை செல்சியசு வெப்பநிலையில் சமாரியம் டெட்ராபோரைடு உருவாகிறது.[1]
19.5 கெல்வின் மற்றும் 15.9 கெல்வின் வெப்பநிலைகளில் இச்சேர்மத்தில் முறையே எதிர் பெரோ மற்றும் பெரோ காந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Диаграммы состояния двойных металлических систем. Vol. 1. М.: Машиностроение. Под ред. Н. П. Лякишева. 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-217-02688-X.
- ↑ Schlesinger, M.E. (1998-02-02). "The Lesser-Known B-Ln (Boron-Lanthanide) Systems: B-Dy (Boron-Dysprosium), B-Ho (Boron-Holmium), B-Lu (Boron-Lutetium), B-Pr (Boron-Praseodymium), B-Tm (Boron-Thulium), and B-Yb (Boron-Ytterbium)" (in en). Journal of Phase Equilibria 19 (1): 49–55. doi:10.1361/105497198770342742. http://link.springer.com/10.1361/105497198770342742.
- ↑ Wigger, G. A.; Felder, E.; Monnier, R.; Ott, H. R.; Pham, L.; Fisk, Z. (2005-07-08). "Low-temperature phase transitions in the induced-moment system Pr B 4" (in en). Physical Review B 72 (1): 014419. doi:10.1103/PhysRevB.72.014419. பன்னாட்டுத் தர தொடர் எண்:1098-0121. https://link.aps.org/doi/10.1103/PhysRevB.72.014419.