பிரசெல்சு வானூர்தி நிலையம்

பிரசெல்சு வானூர்தி நிலையம் (Brussels Airport, (ஐஏடிஏ: BRUஐசிஏஓ: EBBR), இது பிரசெல்சு-நேசனல் / பிரக்செல்சு-நேசனல் , பிரசெல்-சாவெந்தெம் எனவும் அழைக்கப்படுகின்றது) பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சு நகரின் வடகிழக்கே 6 NM (11 km; 6.9 mi) தொலைவில்[3] அமைந்துள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். 2015இல் 23 மில்லியனுக்கும் மேலான பயணிகள் வந்தும் புறப்பட்டும் சென்றுள்ளனர். இது ஐரோப்பாவின் நெருக்கடிமிக்க வானூர்தி நிலையங்களில் 21ஆவது இடத்தில் உள்ளது. இது மாகெலென் புறநகர்ப் பகுதியில் பகுதி டையஜெம் பகுதியிலும் பகுதி சாவெந்தெம் பகுதியிலும் அமைந்துள்ளது.[4] மேலும் ஓர்பகுதி பிளெமிஷ் வட்டாரத்தின் இசுடீனோக்கெர்சீல் பகுதியில் உள்ளது. இங்கு கிட்டத்தட்ட 260 நிறுவனங்கள் அமைந்துள்ளன; இவற்றில் நேரடியாக 20,000 மக்கள் பணி புரிகின்றனர். பிரசெல்சு எயர்லைன்சு, ஜெட்ஏர்பிளை, தாமசுகுக் எயர்லைன்சு போன்ற வான்வழிக் கோக்குவரத்து நிறுவனங்களின் அச்சு மையமாக விளங்குகின்றது.

பிரசெல்சு வானூர்தி நிலையம்

Luchthaven Brussel-Nationaal (டச்சு)
Aéroport de Bruxelles-National (பிரெஞ்சு)
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது & படைத்துறை
இயக்குனர்பிரசெல்சு வானூர்திநிலைய நிறுவனம்
சேவை புரிவதுபிரசெல்சு, பெல்ஜியம்
அமைவிடம்சாவெந்தெம், மாசெலென் மற்றும் இசுடீனோக்கெர்சீல்
மையம்
  • அபெலாக் ஏவியேசன்
  • பிரசெல்சு எயர்லைன்சு
  • ஜெட்ஏர்பிளை
  • சவுதியா கார்கோ
  • சிங்கப்பூர் எயர்லைன்சு கார்கோ
  • தாமசு குக் எயர்லைன்சு
உயரம் AMSL184 ft / 56 m
ஆள்கூறுகள்50°54′05″N 004°29′04″E / 50.90139°N 4.48444°E / 50.90139; 4.48444
இணையத்தளம்www.brusselsairport.be
நிலப்படங்கள்
வானூர்திநிலைய விளக்கப்படம்
வானூர்திநிலைய விளக்கப்படம்
BRU is located in பெல்ஜியம்
BRU
BRU
பெல்ஜியத்தில் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
01/19[1] 2,987 9,800 அசுபால்ட்டு
07R/25L 3,211 10,535 அசுபால்ட்டு
07L/25R 3,638 11,936 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2015)
பயணிகள்23,460,018
சரக்கு (டன்கள்)489,303
வானூர்தி போக்குவரத்து239,349
மூலங்கள்: பிரசெல்சு வானூர்தி நிலையம்,[2] வான்வழிப் போக்குவரத்து தகவல் வெளியீடு[3]

இந்நிலையத்தை இயக்கும் நிறுவனத்தின் பெயர் "பிரசெல்சு வானூர்திநிலைய நிறுவனம் என்.வி./எஸ்.ஏ." ஆகும்.அக்டோபர் 19, 2006க்கு முன்பாக இது பிரசெல்சு பன்னாட்டு வானூர்தி நிலைய நிறுவனம் என அழைக்கப்பட்டு வந்தது. 2011 முதல் இந்நிலையத்தின் உரிமையை ரொறன்ரோவின் ஒன்ராறியோ ஆசிரியர்கள் ஓய்வூதியத் திட்டம் (39%), மாக்குயரீ ஐரோப்பிய கட்டமைப்பு நிதியம் I மற்றும் மாக்குயரீ ஐரோப்பிய கட்டமைப்பு நிதியம் III (36%), பெல்ஜிய அரசு (25%) பெற்றுள்ளன.[5]

முனையங்கள் தொகு

இந்த வானூர்தி நிலையத்தில் இரண்டு முனையங்கள் உள்ளன. ஒன்று செங்கன் பரப்பிலுள்ள பறப்புகளுக்கும் மற்றொன்று செங்கன் பரப்பிற்கு வெளியிலான பறப்புக்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

நிகழ்வுகளும் விபத்துகளும் தொகு

மேற்சான்றுகள் தொகு

  1. "Brussels Airport Website: Runway 02/20 gets a new name: 01/19". Archived from the original on 6 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 2 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Brussels Airport Website: Brussels Airport ends 2015 with new passenger record and 7% growth". Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2016-03-23.
  3. 3.0 3.1 "EBBR – Brussels / Brussels-National" (PDF). AIP Belgium and G.D. of Luxembourg (Available at Eurocontrol website, free registration required). Steenokkerzeel: Belgocontrol AIM. 26 July 2012. part AD 2.EBBR. பார்க்கப்பட்ட நாள் 4 August 2012.
  4. "bedrijf.jpg பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்." Retrieved on 25 April 2010.
  5. "Moody's assigns (P)Baa1 rating to Brussels Airport Holding SA/NV's senior secured debt; stable outlook". Moodys.com. பார்க்கப்பட்ட நாள் 2 June 2015.
  6. Matthew Weaver (22 March 2016). "Brussels Airport explosions – live updates". The Guardian. http://www.theguardian.com/world/live/2016/mar/22/brussels-airport-explosions-live-updates. பார்த்த நாள்: 22 March 2016. 
  7. "17 dead, dozens wounded in 2 blasts at Brussels airport – reports". RT International.

வெளி இணைப்புகள் தொகு