2016 பிரசெல்சு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள்

2016 பிரசெல்சு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் என்பது பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சில் மார்ச் 22, 2016 அன்று நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதல்களைக் குறிக்கும். இத்தாக்குதல்களில் 34 பேர் கொல்லப்பட்டனர்[3]. 261 பேர் காயமடைந்தனர். பிரசெல்சில் உள்ள சாவெந்தெம் வானூர்தி நிலையத்தில் 2 குண்டுகளும் (7.00 ஒ.ச.நே (GMT)) நகரின் மத்தியிலுள்ள மால்பீக் பகுதியிலுள்ள சுரங்க ரயில் பாதையில் ஒரு குண்டும் (9.11 ஒ.ச.நே ) வெடித்தன.

2016 பிரசெல்சு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள்
குண்டு வெடித்த இடங்களைக் குறிக்கும் நிலப்படம்
(1) 08:00 : பிரசெல்சு வானூர்தி நிலையத்தின் முனையம் பி
(2) 09:11 : பிரசெல்சு மால்பீக் விரைவுப்போக்குவரத்து தொடர்வண்டி நிலையம்
இடம்சாவெந்தெமிலுள்ள பிரசெல்சு வானூர்தி நிலையம் மற்றும் மால்பீக் விரைவுப்போக்குவரத்து தொடர்வண்டி நிலையம், பிரசெல்சு, பெல்ஜியம்
ஆள்கூறுகள்வானூர்தி நிலையத்தில் முதல் வெடிப்பு:

50°53′52″N 4°29′00″E / 50.8977754°N 4.4833392°E / 50.8977754; 4.4833392 (Brussels Airport first explosion)[1]
வானூர்தி நிலையத்தில் இரண்டாம் வெடிப்பு:
50°53′53″N 4°28′59″E / 50.8980663°N 4.4831139°E / 50.8980663; 4.4831139 (Brussels Airport second explosion)[1]
மெட்ரோ நிலையத்தில் குண்டு வெடிப்பு:

50°50′38″N 4°22′37″E / 50.8438166°N 4.3769521°E / 50.8438166; 4.3769521 (Maelbeek metro station explosion)[1]
நாள்22 மார்ச் 2016
அண். 08:00–09:11 (UTC+1)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
குடிமக்கள், போக்குவரத்து அச்சுகள்
தாக்குதல்
வகை
தற்கொலைத் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டு, திரள் கொலை
ஆயுதம்டிஏடிபி வெடிகுண்டுகள்; ஏகே-47 தாக்குதல் நீள் துப்பாக்கி
இறப்பு(கள்)33+ (31+ பாதிப்படைந்தோர், 2 தாக்கியோர்)
காயமடைந்தோர்261
தாக்கியோர்இசுலாமிய அரசு[2]
தாக்கியோரின் எண்ணிக்கை3+

இசுலாமிய நாடு என்னும் தீவிரவாத அமைப்பு இக்குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றது.

பின்னணி

தொகு

பெல்ஜியம் தற்போது ஈராக்கில் இசுலாமிய அரசுக்கு எதிராக நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கேற்று வருகின்றது.[4] தன்நாட்டு மக்கள்தொகையில் வேறெந்த ஐரோப்பிய நாட்டைக் காட்டிலும் கூடுதலான வெளிநாட்டுப் போராளிகளைக் கொண்டுள்ள நாடாக பெல்ஜியம் விளங்குகின்றது; சனவரி 2015 நிலவரப்படி சிரியாவிலும் ஈராக்கிலும் போராட 500 பேர் சென்றுள்ளனர்.[5][6] இந்த படைவீரர்கள் பெரும்பாலும் வந்தேறிகளின் வம்சாவழியினர் ஆவர். இதனால் பெல்ஜியத்தை "ஜிகாதிகளின் வளர்ப்புக்குடில்",[5] "ஜிகாதிக்கு ஆளெடுக்கும் அச்சு"[7] எனவும் அழைக்கின்றனர்.

குண்டு வைத்தவர்கள்

தொகு

இத் தாக்குதலில் இருவர் தற்கொலை போராளிகளாக செயல்பட்டுள்ளனர் என்றும் பெல்ஜிய குடிமக்களான அவர்கள் பெயர் பரகிம், காலித்-இல்-பக்ரௌயி என்றும் தெரியவந்துள்ளது. பரகிம் என்பவன் வானூர்தி நிலையத்திலும், காலித் என்பவன் ரயில் நிலையத்திலும் குண்டுவைத்தவர்கள் என அரசு வழக்கறிஞர் கூறினார். காலித்தும் பரகிமும் சகோதரர்கள். இத்தாக்குதலில் தொடர்புடைய மற்ற இருவரின் அடையாளம் இதுவரை தெரியவில்லையென்றும் அதில் ஒருவன் குண்டுவெடிப்பில் இறந்துவிட்டதாகவும் மற்றவன் தப்பிவிட்டதாகவும் அரசு தெரிவிக்கிறது. காலித், பரகிம் வீட்டை சோதனையிட்டதில் 15 கிலோ வெடிமருந்துகள் சிக்கின. தப்பிச்சென்றவனின் பெயர் நசிம் லாசரௌயி என்று பெல்ஜிய செய்திஇதழ் லா டெமிரே கூறுகிறது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Brussels explosions: What we know about airport and metro attacks". BBC News. 22 March 2016. http://www.bbc.com/news/world-europe-35869985. 
  2. Dearden, Lizzie (22 March 2016). "Isis supporters claim group responsible for Brussels attacks: 'We have come to you with slaughter'". The Independent. http://www.independent.co.uk/news/world/europe/isis-supporters-claim-responsibility-for-brussels-attacks-bombings-belgium-airport-maalbeek-metro-we-a6945886.html. பார்த்த நாள்: 22 March 2016. 
  3. "Brussels attacks: Zaventem and Maelbeek bombs kill 31". பிபிசி. http://www.bbc.com/news/world-europe-35869254. 
  4. Morris, Nigel (27 September 2014). "Iraq: Danes send attack planes". Belfast Telegraph. பார்க்கப்பட்ட நாள் 22 March 2016.
  5. 5.0 5.1 Nina Elbagir; Bharati Nailk; Laila Ben Allal (22 March 2016). "Belgium: Europe's front line in the war on terror". CNN. பார்க்கப்பட்ட நாள் 22 March 2016.
  6. Neumann, Peter. "Foreign fighter total in Syria/Iraq now exceeds 20,000; surpasses Afghanistan conflict in the 1980s". ICSR. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
  7. "How Belgium Became a Jihadist-Recruiting Hub". The Wall Street Journal. பார்க்கப்பட்ட நாள் 22 March 2016.
  8. "Brussels attacks: Two brothers behind Belgium bombings". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

தொகு