பிரஜா கிசோர் திரிபாதி
பிரஜா கிசோர் திரிபாதி (Braja Kishore Tripathy) (பிறப்பு 25 செப்டம்பர் 1947) இந்தியாவின் 14 வது மக்களவை உறுப்பினராக இருந்தார். [1] பிஜு ஜனதா தளத்தின் உறுப்பினராக ஒரிசாவின் பூரி மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 13வது மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் கேபினட் அமைச்சராக இருந்தார். இவர் 2009-ஆம் ஆண்டில் பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகிய பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். பூரி மக்களவைத் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.
பிரஜா கிசோர் திரிபாதி | |
---|---|
பிரஜா கிசோர் திரிபா | |
நாடாளுமன்ற உறுப்பினர்: 10-ஆவது, 12-ஆவது, 13-ஆவது மற்றும் பதினான்காவது மக்களவை | |
பதவியில் 1991 - 2004 | |
தொகுதி | பூரி மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 செப்டம்பர் 1947 புரி, ஒடிசா |
தேசியம் | இந்தியாn |
அரசியல் கட்சி | சமதா கிராந்தி தளம் |
பிள்ளைகள் | 2 மகன்கள் மற்றும் 1 மகள் |
வாழிடம்(s) | புரி, ஒடிசா |
As of 22 September, 2006 மூலம்: [1] |
13 மே 2013 அன்று, இவர் ஒடிசாவில் ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார், அதற்கு சமதா கிராந்தி தளம் என்று பெயரிட்டார். ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியின தலைவர் ஜார்ஜ் டிர்கி, சட்டமன்ற உறுப்பினர் பிரமித்ராபூர் சமதா கிராந்தி தளத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த சோசலிஸ்ட் தலைவரும், புகழ்பெற்ற பத்திரிகையாளருமான ரபி ராத் கட்சியின் துணைத் தலைவராக உள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Members : Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 2019-06-23.