பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா விபத்துக் காப்பீட்டுத் திட்டம்

பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா விபத்துக் காப்பீட்டுத் திட்டம் என்பது இந்திய அரசால் உறுதி அளிக்கப்படும் விபத்துக் காப்பீடு இந்தியா திட்டம் ஆகும். இத்திட்டம் முதன்முதலாக இந்திய அரசின் 2015-ஆண்டு பட்ஜெட் உரையின் போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியால் பிப்ரவரி 2015-இல் அறிவிக்கப்பட்டது [1] பின்னர் பிரதமர் நரேந்திர மோதி அவர்களால் 8 மே 2015 அன்று கொல்கத்தாவில் முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது[2][2].

பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா விபத்துக் காப்பீட்டுத் திட்டம்
நாடுஇந்தியா
பிரதமர்நரேந்திர மோதி
துவங்கியது8 மே 2015; 8 ஆண்டுகள் முன்னர் (2015-05-08)

திட்டத்தின் அம்சங்கள் தொகு

பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா விபத்த்துக் காப்பீட்டுத் திட்டம் ஆனது 18 முதல் 70 வயது நிரம்பிய, வங்கிக் கணக்கு வைத்துள்ள, இந்தியாவில் வசிக்கும் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் இந்தியக் குடிமக்களுக்கு கிடைக்கப் பெறும் திட்டமாகும். வருடத்திற்கு சந்தா ரூ.12-வரிகள் இல்லாமல். சந்தா கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சந்தாத் தொகை ஒவ்வொரு ஆண்டும் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக எடுத்துக்கொள்ளப்படும். விபத்துக் காப்பீட்டுத் திட்டமானது சூன் 1-ஆம் தேதியிலிருந்து மே 31-ஆம் தேதிவரை காப்பீடு அளிக்கக்கூடிய திட்டமாக பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படும்.[3]

விபத்தினால் உயிரிழப்பு அல்லது முழு உடற்பாக செயலிழப்பு ஏற்படின் ரூ. 2 லட்சமும் பகுதி உடற்பாக செயலிழப்பு ஏற்படின் ரூ. 1 லட்சமும் காப்பீடாக வழங்கப்படும். முழு உடற்பாக செயலிழப்பு என்பது இரண்டு கண்களும் அல்லது கைகளும் அல்லது கால்களும் செயல்பட முடியாமல் போதல் என வரையறுக்கப்பட்டுள்ளது. பகுதி நிரந்தர உடற்பாக செயலிழப்பு என்பது ஒரு கண், கை அல்லது கால் பயன்படுத்தப்பட முடியாமல் போதல் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.[4][5] தற்கொலை, குடிப்பழக்கத்தினால் ஏற்படும் இறப்பு அல்லது போதை மருந்துகளால் ஏற்படும் இறப்புகளுக்கு காப்பீடு வழங்கப்படாது.

வங்கிக் கணக்கு வைத்துள்ள எவரும் இணைய வழி வங்கிச் சேவையின் மூலம் வருடத்தின் எந்தக் காலத்திலும் இத்திட்டத்தில் சேரலாம்.[6]

குறை விமர்சனம் தொகு

இத்திட்டத்தினால் ஏற்படும் நட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் சந்தாத் தொகையை உயர்த்துமாறு பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.[7]

பலன்கள் தொகு

31 மார்ச் 2019 வரை, 15.47 கோடி மக்கள் இத்திட்டதில் இணைந்துள்ளனர். 32,176 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு ரூ. 643.52 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகையாக வினியோகம் செய்யப்பட்டுள்ளது.[8]

ஏப்ரல் 2017 இல், அரியானா மாநில அரசுHaryana Government அம்மாநிலத்தில் வசிக்கும் 18–70 வயதுடையோர் அனைவரும் இக்காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவர் என்றும் சேர்ந்தவர்களுக்கு செலுத்தும் சந்தாத் தொகையை மாநில அரசு அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கும் என்றும் அறிவித்தது.[9]

மேலும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு

  1. Reporter, B. S. (2015-05-09). "Jan Suraksha: Social security for masses, pricing woes for insurers". Business Standard India. https://www.business-standard.com/article/current-affairs/jan-suraksha-social-security-for-masses-pricing-woes-for-insurers-115050900786_1.html. 
  2. 2.0 2.1 Vishwanathan, Vivina (8 மே 2015). "Banks advertise Pradhan Mantri Bima Yojana ahead of the roll out". Livemint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2020.
  3. "Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY)-accidental insurance". revexpo.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. "Jan Suraksha: Social security for masses, pricing woes for insurers", பிசினஸ் ஸ்டாண்டர்ட், 8 மே 2015
  5. "Banks advertise Pradhan Mantri Bima Yojana ahead of the roll out", Live Mint, 8 மே 2015
  6. "'Pradhan Mantri Suraksha Bima Yojana: Accidental death, disability cover@Rs 12 p.a'". Economic Times. 22 September 2016. http://economictimes.indiatimes.com/wealth/insure/pradhan-mantri-suraksha-bima-yojana-accidental-death-disability-coverrs-12-p-a/articleshow/54458290.cms. பார்த்த நாள்: 22 September 2016. 
  7. "State-run insurers seek to increase PMSBY premium". The Financial Express (India). பார்க்கப்பட்ட நாள் 22 ஏப்பிரல் 2017.
  8. "Telling Numbers: Enrolment and claims in flagship life, accident insurance schemes". Jan Suraksha. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்பிரல் 2017.
  9. "Haryana extends accidental insurance cover to all residents". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 22 ஏப்பிரல் 2017.