பிரதாப்கர் சமஸ்தானம்

பிரதாப்கர் சமஸ்தானம் (Pratapgarh State), இராஜபுதனம் முகமையில் இருந்த சுதேச சமஸ்தானங்களில் இதுவும் ஒன்றாகும்.[1] ரத்தோர் வம்ச இராஜபுத்திரர்கள் நிறுவிய பிரதாப்கர் இராச்சியத்தை 1425-இல் கந்தல் இராச்சியம் என அழைக்கப்பட்டது. பின்னர் 1514-இல் மன்னர் இராஜ்குமார் சூரஜ்மல் ஆட்சியின் போது இதன் தலைநகரம் பிரதாப்கர் நகரத்திற்கு மாற்றிய போது, இந்த இராச்சியத்தை பிரதாப்கர் இராச்சியம் என அழைக்கப்பட்டது.

பிரதாப்காட் சமஸ்தானம்
प्रतापगढ़ रियासत
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1425–1949
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of பிரதாப்கர்
Location of பிரதாப்கர்
இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் இராஜபுதனம் முகமையின் தென்கிழக்கில் பிரதாப்காட் சமஸ்தானத்தின் அமைவிடம்
தலைநகரம் பிரதாப்கர்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1425
 •  சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1949
பரப்பு
 •  1901 2,303 km2 (889 sq mi)
Population
 •  1901 52,025 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
தற்காலத்தில் அங்கம் பிரதாப்காட் மாவட்டம், இராஜஸ்தான், இந்தியா
பிரதாப்கர் சமஸ்தானத்தின் பழைய அரண்மனை

வரலாறு

தொகு

1425-ஆம் ஆண்டு முதல் 1818-ஆம் ஆண்டு வரை தன்னாட்சியுடன் முடியாட்சியாக பிரதாப்கர் இராச்சியம் செயல்பட்டது. பின்னர் [ பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் இந்த பிரதாப்கர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா அரசுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. [2][3][4][5]

15 ஆகஸ்டு 1947 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[6] 1956-ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், பிரதாப்கர் சமஸ்தானம், தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் பிரதாப்காட் மாவட்டமாக உள்ளது.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Pratapgarh Princely State (15 gun salute)". Archived from the original on 2018-08-14. பார்க்கப்பட்ட நாள் 2021-10-04.
  2. [WorldStatesmen - India Princely States K-Z
  3. http://www.thefreedictionary.com/Princely+state
  4. http://www.amazon.com/Indian-Princes-States-Cambridge-History/dp/0521267277
  5. "Pratapgarh Princely State (15 gun salute)". Archived from the original on 2018-08-14. பார்க்கப்பட்ட நாள் 2021-10-04.
  6. Princely States of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதாப்கர்_சமஸ்தானம்&oldid=3563460" இலிருந்து மீள்விக்கப்பட்டது