பிரதாப்காட் போர்

பிரதாப்காட் போர் (Battle of Pratapgad) என்பது 1659 நவம்பர் 10 ஆம் தேதி இந்தியாவின் மகாராட்டிராவின் சாத்தாரா நகருக்கு அருகிலுள்ள பிரதாப்காட் கோட்டையில் மராட்டிய மன்னர் சிவாஜிக்கும் பிஜப்பூர் சுல்தானகத்தின் படைத்தலைவன் அப்சல் கான் ஆகியோருக்கு இடையே நடந்த ஒரு நிலப் போராகும். மராட்டியர்கள் பிஜப்பூர் சுல்தானகத்தின் படைகளை தோற்கடித்தனர். இது ஒரு பெரிய பிராந்திய சக்திக்கு எதிரான அவர்களின் முதல் குறிப்பிடத்தக்க இராணுவ வெற்றியாகும். மேலும் இறுதியில் மராட்டிய பேரரசை நிறுவவும் வழிவகுத்தது.

பிரதாப்கட் போர்

சிவாஜி அப்சல்கானை கொலை செய்தல்
நாள் நவம்பர் 10, 1659 தேதியிட்டது
இடம் பிரதாப்காட், சாத்தாரா, மகாராட்டிரம், இந்தியா

பின்னணி

தொகு

சிவாஜி மாவலின் சில பகுதிகளில் பாராட்டத்தக்க வெற்றியை வகித்தார். அவரது நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பிஜப்பூர் சுல்தானகம் விரும்பியது. முன்பு சிவாஜியின் மூத்த சகோதரர் சம்பாஜியை ஒரு போரில் கொன்ற பீசப்பூரின் புகழ்பெற்ற படைத்தலைவன் அப்சல் கான், சிவாஜிக்கு எதிரான தாக்குதலுக்கு தலைமை தாங்கினார். அவர் 1659 இல் பீசப்பூரிலிருந்து படையெடுப்பைத் தொடங்கினார். சிவாஜி 1659 நவம்பர் 10 அன்று அப்சல் கானை சந்தித்து ஒரு பேச்சுவார்த்தையில் அவரைக் கொன்றார். சிவாஜியின் படைகள் பின்னர் சிதறிய அப்சல் கானின் இராணுவத்தை விரட்டியடித்தன.

போர்

தொகு

சிவாஜி அப்சல் கானிடம் ஒரு தூதரை அனுப்பினார். தான் போரிட விரும்பவில்லை என்றும் அமைதிக்கு தயாராக இருப்பதாகவும் கூறினார். சிவாஜிக்கும் அப்சல் கானுக்கும் இடையில் பிரதாப்காட் அடிவாரத்தில் ஒரு கூடாரத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் தலா பத்து தனிப்பட்ட மெய்க்காப்பாளர்களுடன் மட்டுமே கொண்டு வரவேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. பத்து மெய்க்காப்பாளர்களும் அம்பு எய்தும் தூரத்திலிருந்தார்கள். அப்சல் கான் தனது ஆடையில் ஒரு குறுவாளை மறைத்து எடுத்து வந்தான்.

இரண்டு பேரும் கூடாரத்துக்குள் சந்தித்தபோது, அப்சல்கான் சிவாஜியை கொலை செய்ய முயன்றான். ஆனால் சிவாஜியின் கவச உடை அவரைக் காப்பாற்றியது. சிவாஜி தனது (புலி நகங்கள்) கைகளை பயன்படுத்தி கானை கொன்றார். சிவாஜியின் படைத்தளபதி கன்னோஜி ஜெதே தலைமையிலான மராத்தா துருப்புக்கள், அப்சல் கானின் படைகளை வீழ்த்தினர்; இதன் பின்னர் பிஜப்பூர் சுல்தானகத்தின் படைகளின் ஒரு பகுதி தாக்கப்பட்டது. அப்சல் கானின் தளபதியான முசேகன் காயமடைந்து பின்னர் களத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

பின்விளைவு

தொகு

பிஜப்பூர் சுல்தானகனத்தின் படைகள் தங்கள் பீரங்கிகள், 65 யானைகள், 4000 குதிரைகள், 1200 ஒட்டகங்கள், 300,000 ரூபாய் மதிப்புள்ள நகைகள், 1,000,000 ரூபாய், விலைமதிப்பற்ற ஆடைகள், கூடாரங்கள் போன்றவற்றை மராட்டியர்களிடம் இழந்தன. வய் நகரத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பணத்தையும் தானியத்தையும் இழந்தனர்.

இந்த குறிப்பிடத்தக்க வெற்றி சிவாஜியை மராட்டிய நாட்டுப்புற கதைகளின் நாயகனாகவும், அவரது மக்களிடையே ஒரு புகழ்பெற்ற நபராகவும் ஆக்கியது. இராணுவ ஆதிக்கத்தை நிலைநாட்டியதோடு, ஒரு சக்திவாய்ந்த இராச்சியத்தின் ஒரு பெரிய தாக்குதலை வெற்றிகரமாக வீழ்த்திய சிவாஜி, மராட்டிய பேரரசை நிறுவினார்.

குறிப்புகள்

தொகு
  • Shivbharat (in மராத்தி). Bharat Itihas Sanshodhak Mandal, Pune, India. 1927.
  • Dr. S. D. Samant (1996). Vedh Mahamanavacha (in மராத்தி). Deshmukh & Co., Pune, India.
  • James Grant Duff (1826). History of the Mahrattas, 3 Vols. Longmans, London, UK.
  • Capt. G. V. Modak (c. 1950). Pratapgadche Yuddha (Battle of Pratapgarh) (in மராத்தி). Pune, India.
  • Dr. BalKrishna (1940). Shivaji The Great, 4 Vols. Dr. Balkrishna, Kolhapur, India.
  • Major Joshi Mukund-Battle of Pratapgarh- a new perspective
  • Commandant Kasar D.B. - Rigveda to Raigarh making of Shivaji the great
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதாப்காட்_போர்&oldid=3663825" இலிருந்து மீள்விக்கப்பட்டது