பிரநிதி சிண்டே

பிரநிதி சுசில்குமார் சிண்டே (Praniti Shinde) என்பவர் இந்தியாவின் மகாராட்டிராவைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராகவும் மூன்று முறை மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவர் சோலாப்பூர் நகர மத்திய தொகுதியிலிருந்து மத்தியப் பிரதேச சட்டசபைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் 2021 முதல் மகாராட்டிர பிரதேச காங்கிரசு குழுவின் செயல் தலைவராகவும் உள்ளார். சட்டமன்றத் தேர்தல்களுக்கான கேரளப் பிரதேச காங்கிரசு குழுவின் தேர்வுக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

பிரநிதி சிண்டே
Praniti Sushilkumar Shinde
சட்டமன்ற உறுப்பினர் மகராட்டிர சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2009 - முதல்
தொகுதிசோலாபூர் நகர மத்தி
மகாராட்டிர காங்கிரசு செயல் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2021
தலைவர்- பட்டியல் இனத்தவர் நலக்குழு, மகாராட்டிரா சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 திசம்பர் 1980 (1980-12-09) (அகவை 43)
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
உறவுகள்சுசில்குமார் சிண்டே (தந்தை)
உஜ்வாலா சிண்டே (தாய்)
வாழிடம்(s)ஜெய்ஜுய்19,
அசோக் நகர், விஜபூர் சாலை,
சோலாபூர், மகாராட்டிரா,
413 001
முன்னாள் கல்லூரிதூய சவேரியார் கல்லூரி, மும்பை, அரசு சட்டக் கல்லூரி, மும்பை
தொழில்அரசியல்வாதி, சமூக சேவகர்
As of 11 அக்டோபர், 2022
மூலம்: [1]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

பிரநிதி சிண்டே 9 திசம்பர் 1980-ல் உஜ்வாலா சிண்டே மற்றும் சுசில்குமார் சிண்டே, முன்னாள் உள்துறை அமைச்சகம் (இந்தியா) ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். மும்பை தூய சவேரியார் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பிரநிதி சிண்டே ஒரு சமூக சேவகர், ஜெய்ஜூய் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மக்களுக்கு உதவி வருகிறார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Praniti Shinde in Solapur City Central Election Results 2019: Praniti Shinde of Congress Wins". www.news18.com (in ஆங்கிலம்). 2019-10-24. பார்க்கப்பட்ட நாள் 2021-06-17.
  2. "She's like your younger sister". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-06-17.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரநிதி_சிண்டே&oldid=4008530" இலிருந்து மீள்விக்கப்பட்டது