பிரபுல்லா சாகி
பிரபுல்லா சந்திர சாகி (Prafulla Chandra Chaki) தினேஷ் சந்திர ராய்) ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தருவதை நோக்கமாகக் கொண்டிருந்த யுகாந்தர் இயக்கத்தின் புரட்சியாளர்களின் குழுவுடன் தொடர்புடைய ஒரு இந்திய புரட்சியாளர் ஆவார்.
பிரபுல்லா சந்திர சாகி | |
---|---|
প্রফুল্ল চন্দ্র চাকী | |
தாய்மொழியில் பெயர் | প্রফুল্ল চন্দ্র চাকী |
பிறப்பு | Prafulla Chaki 10 திசம்பர் 1888 போக்ரா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய ராஜசாகி, வங்காளதேசம்) |
இறப்பு | 2 மே 1908 பட்னா, வங்காள மாகாணம், ராஜசாகி (தற்போதைய பீகார், இந்தியா) | (அகவை 19)
பணி | இந்திய விடுதலை இயக்கம் |
அமைப்பு(கள்) | யுகாந்தர் |
அறியப்படுவது | இந்திய விடுதலை இயக்கத்தின் பங்கெடுத்தவர் |
அரசியல் இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
முசாபர்பூர் மாவட்ட நீதிபதி டக்ளஸ் கிங்ஸ்போர்ட் பயணிப்பதாகக் கருதி வண்டியின் மீது குண்டுகளை வீசி கொலை செய்ய இவரும் குதிராம் போஸும் முயன்றனர்.[1] 1908, ஏப். 30 ம் தேதி, அங்கு வந்த நீதிபதி கிங்ஸ்போர்ட் வாகனம் மீது இருவரும் வெடிகுண்டுகளை வீசினர்.[2] ஆனால், அதில் கிங்ஸ்போர்ட் வரவில்லை. அதில் வந்த வேறு பெண்கள் இருவர் கொல்லப்பட்டனர். காவல்துறையினரால் கைது செய்யப்படவிருந்தபோது பிரபுல்லா தற்கொலை செய்து கொண்டார். குதிராம் கைது செய்யப்பட்டு இரண்டு பெண்களைக் கொலை செய்ததற்காக விசாரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.[3][4] காந்தி வன்முறையைக் கண்டித்து, இரண்டு பெண்களின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்தார். “இந்த முறைகள் மூலம் இந்திய மக்கள் தங்கள் சுதந்திரத்தை விரும்ப மாட்டார்கள்” என்று காந்தி கூறினார்.[5][6][7][8] இருப்பினும், பால கங்காதர திலகர் தனது கேசரி செய்தித்தாளில், இரண்டு இளைஞர்களையும் ஆதரித்து, உடனடியாக சுயராஜ்யத்திற்கு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து திலகர் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு உடனடியாகக் கைது செய்யப்பட்டர்.[9]
இளமை வாழ்க்கை
தொகுபிரபுல்லா சந்திர சாகி 1888 டிசம்பர் 10 அன்று இன்றைய வங்காளதேசத்தின் போக்ரா மாவட்டத்திலுள்ள பீகாரில் ஜோதெதர் குடும்பத்தில் பிறந்தார். அப்போது அது வங்காள மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.[10] இவரது தந்தையின் பெயர் இராஜ்நாராயண் சாகி மற்றும் தாயின் பெயர் சொர்ணமயி தேவி என்பதாகும். போக்ராவில் உள்ள நாமுஜா ஜனதா பிரசாத் ஆங்கிலப் பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார். தனது ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு தனது மூத்த சகோதரர் பிரதாப் சந்திர சாகியுடன் இரங்க்பூருக்கு வந்தார். கிழக்கு வங்காள சட்டத்தை மீறிய மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்காக 9 ஆம் வகுப்பில் இரங்க்பூர் ஜில்லா பள்ளியிலிருந்து இவர் வெளியேற்றப்பட்டார். பின்னர் இரங்க்பூர் தேசியப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டு புரட்சிகர தத்துவங்களில் நம்பிக்கை கொண்டவராகவும் பயிற்சியாளராகவும் ஆனார்.[11]
புரட்சிகர நடவடிக்கைகள்
தொகுபரிந்திர குமார் கோசு பிரபுல்லாவை கொல்கத்தாவிற்கு அழைத்து வந்து யுகாந்தர் இயக்கத்தில் சேர்த்து விட்டார். கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய புதிய மாகாணங்களின் முதல் துணைநிலை ஆளுநரான சர் ஜோசப் பாம்ப்ஃபில்டே புல்லரைக் கொல்வதே பிரபுல்லாவின் முதல் பணியாக இருந்தது. எனினும், அந்தத் திட்டம் நிறைவேறவில்லை.
அடுத்து, பீகாரின் முசாபர்பூர் நீதிமான் கிங்ஸ்போர்டை படுகொலை செய்ய பிரபுல்லாவும், குதிராம் போஸும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிங்ஸ்போர்ட், கொல்கத்தாவின் தலைமை முதன்மை நீதிபதியாக இருந்த முந்தைய பதவிக்காலத்தில், வங்காளத்தின் இளம் அரசியல் தொழிலாளர்கள் மீது கடுமையான மற்றும் கொடூரமான தண்டனைகளை வழங்கியதில் பிரபலமானவரக இருந்தார். இச்செயல் அவரது கொலைக்கான திட்டத்திற்கு வழிவகுத்தது, மேலும் சாக்கி மற்றும் போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த பணியை நிறைவேற்ற முசாபர்பூருக்கு அனுப்பப்பட்டனர்.[12] இந்த நடவடிக்கையில் தினேஷ் சந்திர ரே என்ற போலி பெயரை பிரபுலா எடுத்தார்.[13]
முசாபர்பூர் கொலை
தொகுகுதிராம் மற்றும் பிரபுல்லாவும் கிங்ஸ்போர்டை கொல்ல ஒரு திட்டத்தை தயாரித்தனர். 1908 ஏப்ரல் 30ஆம் தேதி மாலை, கிங்ஸ்போர்டின் வண்டி வருவதற்காக ஐரோப்பிய சங்கத்தின் வாயிலுக்கு முன்னால் இருவரும் காத்திருந்தனர். வாயிலிலிருந்து ஒரு வாகனம் வெளியே வந்தபோது, வண்டியில் ஒரு வெடிகுண்டு வீசப்பட்டது. ஆனால் கிங்ஸ்போர்டு வாகனத்தில் பயனிக்காததால் அதில் பயனித்த வேறு பெண்கள் இருவர் குண்டு வீச்சில் கொல்லப்பட்டனர். புரட்சியாளர்கள் தப்பி ஓடினர்.[12]
தேடுதல் மற்றும் தற்கொலை
தொகுகாவல் ஆய்வாளர் நந்தலால் பேனர்ஜியின் தேடுதல் வேட்டையின்போது பிரபுல்லா தனது சொந்த துப்பாக்கியைப் பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.[14]
பின்னர் குதிராம் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளார் நந்தலால் இரண்டு இளம் புரட்சியாளர்களான ஸ்ரீஷ் பால் மற்றும் ராணென் கங்குலி ஆகியோரால் படுகொலை செய்யப்பட்டார்.[15]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ritu Chaturvedi (1 January 2007). Bihar Through the Ages. Sarup & Sons. pp. 340–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7625-798-5. Retrieved 28 April 2012.
- ↑ http://tamil.webdunia.com/miscellaneous/special07/idday/0708/14/1070814012_3.htm
- ↑ "Calcutta High Court Khudiram Bose vs Emperor on 13 July, 1908". Indian Kanoon. பார்க்கப்பட்ட நாள் 5 June 2018.
- ↑ Arun Chandra Guha (1971). First spark of revolution: the early phase of India's struggle for independence, 1900-1920. Orient Longman. p. 131. இணையக் கணினி நூலக மைய எண் 254043308.
Khudiram was suspected and arrested there [at Waini station] ... Khudiram was tried ... was sentenced to death and hanged in the Muzaffarpur jail ... on 19 August 1908.
- ↑ Rama Hari Shankar (1996). Gandhi's encounter with the Indian revolutionaries. Siddharth Publications. p. 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7220-079-4.
- ↑ Lakshiminiwas Jhunjhunwala (2015). Panorama. Ocean Books Pvt. Limited. p. 149. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8430-312-4.
- ↑ Mahatma Gandhi (1962). Collected works. Publications Division, Ministry of Information and Broadcasting, Govt. of India. p. 223.
- ↑ Bhaskar Chandra Das; G. P. Mishra (1978). Gandhi in to-day's India. Ashish. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170240464. இணையக் கணினி நூலக மைய எண் 461855455.
- ↑ "The story of our independence: Six years of jail for Tilak". Hindustan Times. 2015-08-08. https://www.hindustantimes.com/brunch/the-story-of-our-independence-six-years-of-jail-for-tilak/story-vC1VtfmXEj4WfMPC2qiR5J.html.
- ↑ "Chaki, Prafulla". Banglapedia. பார்க்கப்பட்ட நாள் 2020-01-11.
- ↑ "Prafulla Chandra Chaki". istampgallery.com. 5 December 2014. பார்க்கப்பட்ட நாள் 2020-01-11.
- ↑ 12.0 12.1 Ritu Chaturvedi (2007). Bihar Through the Ages. Sarup & Sons. p. 340. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7625-798-5.
- ↑ Hitendra Patel (2008). Khudiram Bose: Revolutionary Extraordinaire. Publications Division, Ministry of Information and Broadcasting. p. 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1539-2.
- ↑ Arun Chandra Guha (1971). First spark of revolution: the early phase of India's struggle for independence, 1900-1920. Orient Longman. p. 131. இணையக் கணினி நூலக மைய எண் 254043308.
A Bengali police officer, Nandalal Banerji was also travelling in the same compartment ... Nandalal suspected Prafulla and tried to arrest him. But Prafulla was quite alert; he put his revolver under his own chin and pulled the trigger ... This happened on the Mokama station platform on 2nd May, 1908.
- ↑ Subodh ch. Sengupta & Anjali Basu, Vol - I (2002). Sansad Bangali Charitavidhan (Bengali). Kolkata: Sahitya Sansad. p. 541. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85626-65-9.
வெளி இணைப்புகள்
தொகு- Mozammel, Md. Muktadir Arif (2012). "Chaki, Prafulla". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
- Muktadhara article