பிரபோத சந்திரோதயம்

பிரபோத சந்திரோதயம் என்னும் காவியம், பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இக்காவியத்தினை, மாதை திருவேங்கட நாதர் என்பவர் இரண்டாயிரம் செய்யுட்களால் எழுதினார். இந்நூல் அத்வைதத் தத்துவத்தை குறியீட்டுப் பொருளாகக் கொண்டது ஆகும். திராவிட மொழிகளுக்கும் வடமொழியான சமசுகிருத மொழிக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டபோது, மொழிபெயர்ப்பு, தழுவல் ஆகிய மொழிமாற்ற நிகழ்வுகள் நடந்தன. அவற்றுள் இந்நூல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பிரபோதம் என்றாலும் ஞானம் என்றாலும் ஒன்றே ஆகும்.

கிருஷ்ணமிச்ரரின் பிரபோத சந்திரோதயம் தொகு

கிருஷ்ண மிச்ரர் என்பவர் சுமார் தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன் இருந்தவர்.அவர் சித்தாந்தச் சண்டைக்காக நாடகம் எழுதவில்லை. தம் ஸ்வாநுபூதியையே உருவகமாக, உள்ளுறையல்லாத வெளிப்படைப் பொருள் (allegorical) ஆக, ஒரு நாடகமாக்கி எழுதினார். அதன்பெயரும் பிரபோத சந்திரோதயம் ஆகும்.

அவரின் நாடகக்கரு தொகு

ஞான மார்க்கத்தினால் பெறுகிற அத்வைத அமைதி நிலையைப் பற்றி எழுதினார். ஆனால் கட்சி, பிரதி கட்சி இல்லாமலே எழுதினார். பலவிதமான தத்துவங்களும் அதில் பாத்திரங்களாக வருகின்றன. விவேகன் (அதாவது, ஞானத்தைத் தேடுகிற முயற்சியுடையவன்) தான் கதாநாயகனான 'ராஜா', அவனுக்கு எதிரி 'மகாமோகன்' (அதாவது மாயை). விவேகனுக்குப் பலவிதமான நல்ல குணங்களும் மந்திரிகளாக, சைன்யங்களாக இருக்கின்றன. விஷ்ணு பக்தி, சிரத்தை, கருணை, தர்மம், வைராக்கியம் எல்லாம் இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள். அஞ்ஞானம், பாபம், அஸத்தியம் முதலிய கெட்ட குண பட்டாளங்கள் மகாமோகனின் பரிவாரமாக வருகின்றன. விவேகன் மகாமோகனை வெற்றி பெற்று, ஞானத்தை அடைந்ததாகக் கதை போகிறது. 'ஞான உதயம்'தான் நாடகத்தின் கருப்பொருளாகும்.

புற இணைப்புகள் தொகு

நூற்குறிப்புகள்
தலைப்பு:பிரபோத சந்திரோதயம் - மெய்ஞான விளக்கம்
நூலாசிரியர்: கீழ்மாத்தூர் திருவேங்கடநாதர், வ வேணுகோபாலன்
பதிப்பகம்: தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதிமஹால் நூல் நிலையம், 1988
பக்கங்கள்:902
பொருள்:வேதாந்தம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபோத_சந்திரோதயம்&oldid=3221131" இலிருந்து மீள்விக்கப்பட்டது