பிராணகிதா வனவிலங்கு சரணாலயம்

பிராணகிதா வனவிலங்கு சரணாலயம் (Pranahita wildlife sanctuary) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் மஞ்செரியல் மாவட்டத்தில் (பழைய ஆதிலாபாத் மாவட்டம்) அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.[2]

பிராணகிதா வனவிலங்கு சரணாலயம்
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
Map showing the location of பிராணகிதா வனவிலங்கு சரணாலயம்
Map showing the location of பிராணகிதா வனவிலங்கு சரணாலயம்
தெலங்காணா நிலப்படம்
அமைவிடம்தெலங்காணா, இந்தியா
அருகாமை நகரம்மஞ்செரியல்
ஆள்கூறுகள்19°01′32″N 79°54′19″E / 19.0256091°N 79.9053466°E / 19.0256091; 79.9053466[1]
பரப்பளவு136.2 km2 (52.6 sq mi)
நிறுவப்பட்டது1980
forests.telangana.gov.in/WildLife/PNWS.htm

இந்த சரணாலயம் பிராணகிதா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது மஞ்செரியல் நகரத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது. இது புல்வாய் மற்றும் 20க்கும் மேற்பட்ட ஊர்வன, 50க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், 40க்கும் மேற்பட்ட பாலூட்டிகளுக்குப் பிரபலமானது.

வரலாறு தொகு

பிராணகிதா 13 மார்ச் 1980-ல் நிறுவப்பட்டது. இதன் பரப்பளவு 136.02 சதுர கிமீ ஆகும். பிராணகிதா தெற்கு வெப்பமண்டல உலர் இலையுதிர் காடுகள், உலர்ந்த புதர் காடு மற்றும் புல்வெளிகள் நிறைந்தது.[3]

பார்வை நேரம் தொகு

நவம்பர் முதல் ஏப்ரல் வரை இந்த இடத்தைப் பார்வையிடச் சிறந்த நேரம் ஆகும்.[3] மஞ்செரியல் மற்றும் சென்னூரில் வன ஓய்வு இல்லம் உள்ளது. காற்றின் வெப்பநிலை 15 முதல் 40 பாகை செல்சியசு வரை மாறுபடும்.[4]

அணுகல் தொகு

சாலை வழியாக:

ஐதராபாத் - கரீம்நகர் - மஞ்சேரியல் - 258 கி.மீ. தொலைவில் ஐதராபாத்திலிருந்து

தொடர்வண்டி மூலம்:

ஐதராபாத் முதல் மஞ்சேரியல் – 236 கி.மீ. தூரப் பயணம்

வானூர்தி மூலம்:

அருகிலுள்ள வானூர்தி நிலையம் - இராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம், ஐதராபாத்

மேற்கோள்கள் தொகு

  1. "Pranahita Sanctuary". protectedplanet.net.
  2. "Pranahita Wildlife Sanctuary". Telangana Forest Department. Archived from the original on 21 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 21 Feb 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 "Telangana Forest Department". National Portal of India Telangana Tourism. Archived from the original on 10 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 March 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Guru, Travel (2013-08-05). "The Pranahita Wildlife Sanctuary Andhrapradesh". Beautiful Indian Tourist Spots (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-06-24. பார்க்கப்பட்ட நாள் 2021-06-22.