பிரான்ஸ் காஃப்கா
பிரான்ஸ் காஃப்கா (Franz Kafka, 3 ஜூலை 1883 – 3 ஜூன் 1924) இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அக்காலத்து ஆஸ்திரியா-ஹங்கேரியில் இருந்ததும் இப்போது செக் குடியரசில் உள்ளதுமான பிராக் நகரில், நடுத்தர வகுப்பைச் சேர்ந்த யூதக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இவரது தனித்துவமான ஆக்கங்களுட் பல முற்றுப்பெறாதவை என்பதுடன், பெரும்பாலானவை அவரது இறப்புக்குப் பின்னரே வெளியிடப்பட்டன. இவரது ஆக்கங்கள் மேல்நாட்டு இலக்கியத்தில் மிகக் கூடிய செல்வாக்குச் செலுத்தியவற்றுள் அடங்குவனவாகும்.
பிரான்ஸ் காஃப்கா | |
---|---|
1906ல் எடுக்கப்பட்ட பிராண்ஸ் காஃப்காவின் ஒளிப்படம். | |
பிறப்பு | பிரான்ஸ் காஃப்கா 3 சூலை 1883 பிராக், ஆஸ்திரியா-ஹங்கேரி |
இறப்பு | 3 சூன் 1924 வியன்னா, ஆஸ்திரியாவுக்கு அண்மையில் உள்ள கீர்லிங் | (அகவை 40)
தொழில் | காப்புறுதி அலுவலர், தொழிற்சாலை மேலாளர், புதின எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர். |
தேசியம் | யூதர்-பொஹேமியர் (ஆஸ்திரியா-ஹங்கேரி) |
வகை | புதினம், சிறுகதை |
இலக்கிய இயக்கம் | நவீனத்துவம், இருப்பியலியம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | த டிரயல், த காசில் |
கையொப்பம் | |
உருமாற்றம் (The Metamorphosis - 1915) போன்ற இவரது கதைகளும், வழக்கு (The Trial - 1925), கோட்டை (The Castle - 1926) போன்ற புதினங்களும் பயங்கரமான அதிகாரம் சார்ந்த உலகில் கவலைகளுக்கு உள்ளாகும் தனிமனிதர்களைப் பற்றியவையாகும்.
வரலாறு
தொகுபிராண்ஸ் காஃப்காவின் தந்தையான ஹேர்மன் காஃப்கா (1852–1931), மிகப்பெரிய, தன்னலம் கொண்ட, அடக்கியாளும் தன்மை உள்ள ஒரு வணிகர் எனக் கூறப்படுகின்றது. காஃப்காவும் இவரை "வலிமை, உடல்நலம், உணவில் விருப்பம், உரத்த குரல், பேச்சு வன்மை, திருப்தி, முயற்சி, மனித இயல்பு பற்றிய அறிவு என்பன கொண்டவர்" என விவரித்துள்ளார். ஹேர்மனின் தந்தை ஜேக்கப் காஃப்கா, சடங்குகளுக்காகப் பிராணிகளை வெட்டுபவர். இவர்கள், தெற்கு பொஹேமியாவில் பிசெக்குக்கு அருகின் அமைந்துள்ள செக் மொழி பேசும் யூதர் ஊரான "ஓசெக்"கில் இருந்து பிராக்கில் குடியேறினர். சிலகாலம் இடத்துக்கிடம் செல்லும் விற்பனைப் பிரதிநிதியாகப் பணி புரிந்த ஹேர்மன் பின்னர் ஆண்களுக்கும், பெண்களுக்குமான ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நிறுவி நடத்திவந்தார். இவரிடம் 15 க்கு மேற்பட்டவர்கள் வேலை செய்தனர். காஃப்காவின் தாய் ஜூலி (1856—1934), போடெபிராடியில் வடிப்புத் தொழில் நடத்திவந்த செல்வந்தரான ஜேக்கப் லேவி என்பவரின் மகள். ஜூலி தனது கணவரை விடக் கூடுதலாகப் படித்தும் இருந்தார்.
காஃப்கா அவரது பெற்றோரின் ஆறு பிள்ளைகளுள் மூத்தவர். இரண்டு தம்பிகளான ஜார்ஜும், ஹென்ரிக்கும் அவர்கள் முறையே 15 மாதம், ஆறு மாதம் வயதுகளை அடைந்தபோது இறந்துவிட்டனர். ஏனைய மூவரும் தங்கைகளான கப்ரியேல் (எல்லி) (1889–1941), வலரி (வல்லி) (1890–1942), ஆட்டிலி (ஆட்லா) (1891–1943) என்போர். வேலை நாட்களில் இவர்களது தந்தையும், தாயும் வீட்டில் இருப்பதில்லை. தாயார் தந்தைக்கு ஒரு நாளில் 12 மணிநேரம் வரை வணிகத்தில் உதவி செய்து வந்தார். இதனால் பிள்ளைகள் பெரும்பாலும் வேலையாட்களிடமே வளர்ந்தனர். தந்தையுடனான காஃப்காவின் உறவு நன்றாக இருக்கவில்லை என்பதை அவர் தனது தந்தைக்கு எழுதிய கடிதங்களில் இருந்து அறிய முடிகிறது. அக்கடிதங்களில், காஃப்கா, தனது தந்தை தன்னைச் சிறுவயது முதலே, பெரிய அளவில் உணர்வு அடிப்படையிலான துன்பங்களுக்கு உள்ளாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
காஃப்காவின் தங்கைகள், நாஸிகளின் காலத்தில், அவர்களது குடும்பத்தினருடன் "சிறுபான்மைக் குடியிருப்பு"களுக்கு (Ghetto) அனுப்பப்பட்டனர். அவர்கள் அங்கே அல்லது வதை முகாம்களில் இறந்தனர்.
பணி
தொகு1907 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி அஸிகியூரேசியோனி ஜெனராலி காப்பீட்டு நிறுவனத்தில் பணியில் சேர்ந்து அதில் அவர் ஒரு வருடம் வேலை செய்தார். அந்த நிறுவனத்தில் 08:00 முதல் 18:00 மணி வரை பணியாற்றும் சூழலால் அந்த காலகட்டத்தில் அவர் மகிழ்ச்சியற்றதாக இருந்ததை அவரது கடிதங்கள் சுட்டிக்காட்டுகிறது.[1] இதன் காரணமாக அவரது எழுத்துப்பணியில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் 1908 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் தனது வேலையை ராஜினாமா செய்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் எழுதுவதற்கு தகுந்த வேலையாக போஹேமியா இராச்சியத்திற்கான தொழிலாளர் விபத்து காப்பீட்டு நிறுவனத்தில் சேர்ந்துகொண்டார். அப்பணியானது தொழிற்துறைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட காயத்தையும் அதற்கான இழப்பீட்டை பரிசீலிப்பதையும், மதிப்பீடு செய்வதையும் உள்ளடக்கியது. விபத்துக்களானது மோசமான பாதுகாப்பு குறைபாடுகளால் விரல்கள, மூட்டுகள் ஆகியவை இழக்கப்படுகின்றன.
நாவல்
தொகு1912 ல் தனது முதல் நாவலை தொடங்கினார். தேர் ஹெய்சர் என்ற அந்த நாவலின் முதல் அத்தியாயத்தை எழுதினார்.காஃப்கா இந்த நாவலை சரிவர முடிக்கவில்லை, முடிவடையாத நிலையில் இருந்த இந்த நாவலை காஃப்காவின் மரணத்திற்குப் பின்னர் புரோட் அதற்கு அமெரிக்கா எனப் பெயரிட்டு வெளியிட்டார். முந்தைய ஆண்டுகளில் இட்டிஸ் அரங்கில் பார்வையாளர்களுடன் நேரத்தை செலவிட்ட பொழுதுகள்தான் இந்த நாவலுக்கான மன ஊக்கமாக இருந்தது.
விமர்சன மறுமொழிகள்
தொகுவிமர்சன கருத்தாய்வுகள்
தொகுW. H. ஆடன் காஃப்காவை இருபதாம் நூற்றாண்டின் டான்டே அலிகியேரி என அழைக்கிறார். [2] டான்டே அலிகியேரி என்பவர் புகழ் பெற்ற இத்தாலிய இலக்கியவாதியாவார். நாவலாசிரியர் விளாதிமிர் நபோகோவ் காஃப்காவை 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராக வரிசைப்படுத்துகிறார். [3] காஃப்காவின் தி மெட்டாமார்போசிஸ் வேறுவிதமாக எழுதும் வழிகளை காட்டுவதாக காபிரியேல் கார்சியா என்பவர் குறிப்பிடுகிறார். [4][5] காஃப்காவின் படைப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அம்சம் அவர் முதன் முதலாக எழுதிய தந்தை-மகனுக்கிடையிலான பிணக்கு பற்றிய குறுங்கதையான "தாஸ் உர்தெய்ல்" ஆகும். [6] இக்கதையில் மகனால் தூண்டப்பட்ட குற்றமானது துன்பம் மற்றும் பிராயச்சித்தம் மூலம் தீர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. [7][6] நனவிலி நிலை , அந்நியமாதல், உடல் மற்றும் உளரீதியான கொடூரம், ஒரு திகிலூட்டும் தேடலில் பாத்திரங்கள், மற்றும் மாய மாற்றங்கள் ஆகியவை காஃப்காவின் கதைகளில் வரும் பிற முக்கிய கருப்பொருள்கள் ஆகும். [8]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுகாஃப்கா திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தார். புரோட் என்பவரின் கூற்றுபபடி இவர் பாலியல் இச்சைகளுக்காக துன்புறுத்தப்பட்டார். மேலும் காஃப்காவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ரெய்னர் ஸ்டாச்சின் கூற்றுப்படி பாலியல் சார்பாக பயம் கொண்டிருந்ததாக கூறுகிறார். [9] [10][11][12] தனது வாலிப காலங்களில் பரத்தையர் மனைகளுக்குச் சென்றிருக்கிறார். மேலும் இவர் புணர்மக் கலையில் ஆர்வம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கிறார். கூடுதலாக தனது வாழ்நாளில் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்ததையும் அறிய முடிகிறது. 1912 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 13 ஆம் நாள் பேச்சுப்பன்னி நிறுவனத்தில் பிரதிநிதியாகப் பணிபுரியும் பிராட்டின் உறவுப் பெண்ணான பெலிஸ் பேயெரை காப்ஃகா சந்தித்தார். காஃகாவின் இல்லத்தில் நடைடிபற்ற இச்சந்திப்பிக்குப் பின் ஒரு வாரம் கழித்து அவர் தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
படைப்புகள்
தொகுகதைகள்
தொகுபெயர் | எழுதிய ஆண்டு | வெளிவந்த ஆண்டு |
---|---|---|
பெஸ்ஜெரிபங்க் எனிஸ் காம்ஃபஸ் | 1904 | 1908 |
தாஸ் அர்தில் | 1912 | 1912 |
டை வெர்வாந்துலங் | 1912 | 1915 |
இந்தர் ஸ்ட்ராப்கோலோனி | 1914 | 1919 |
எயின் அங்கர்குன்ட்லர் | 1924 | 1924 |
ஜோஸ்பின், டை சங்கரின் ஆடர் தாஸ் வோல்க் தர் மவுஸ் | 1924 | 1924 |
புதினகள்
தொகுபெயர் | எழுதிய ஆண்டு |
---|---|
தெர் ஹைசர் | 1912 |
தெர் பிராசஸ் | 1914 |
தாஸ் ஸ்கலாஸ் | 1922 |
நவீன பதிப்புகள்
தொகுமால்கம் பால்சே என்பவர், பிரான்சேவின் தொகுதிகள் அனைத்தையும் 1961ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு நூலகத்தில் ஒப்படைத்தார். பின்னர் ஏலத்தின் மூலமாக, ஜெர்மனியைச் சேர்ந்த மார்பச்-அம்-நெக்கர் என்பவர் வாங்கினார். பால்சேவின் குழுவான கெரார்டு நியுமென், ஜாஸ்ட் ஸ்சில்மெயிட், ஜர்கர் பாரன் ஆகியோர் பிரான்சேவின் தொகுதிகளை மீட்டெடுத்தனர். பின் அவற்றை பிஸ்சர் வெர்லாக் என்பவர் வெளியிட்டார். தாஸ் ஸகலாஸ் என்ற புதினம் 1982ம் ஆண்டும், தெர் பிராசஸ் என்ற புதினம் 1990ம் ஆண்டிலும், தாஸ் வெர்ஸ்சோலினி 1983ம் ஆண்டில் வெளிவந்தன.
மொழிபெயர்ப்பு
தொகுஎட்வின் மற்றும் வில்லா முயிர் ஆகியோர், பிரான்சேவின் தாஸ் ஸ்கலாஸ் எனும் புதினத்தை 1930ம் ஆண்டு ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தனர். இப்புதினத்தை காஸ்டில் என்று செக்கர் மற்றும் வார்பர்க் ஆகியோர் இங்கிலாந்திலும், ஆல்பிரத் என்பவர் அமெரிக்காவிலும் வெளியிட்டனர். பிரான்சேவின் தொகுதிகள் அனைத்தும் 1940ல் இருந்து அடுத்தடுத்த ஆண்டுகளில், அமெரிக்காவில் வெளியிட்டனர். பின்னர் 1998ம் ஆண்டில் பால்சேவின் ஜெர்மானிய தொகுதிகள் அனைத்தும் ஆங்கிலத்திற்கு மொழி மாற்றப்பட்டது.
கலாச்சாரத் தாக்கம்
தொகுபிரான் காஃபேவைப் பற்றி பல்வேறு திரைப்படங்களும், பாடல்களும், நாடகங்களும் இயற்றப்பட்டன. மற்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களைப் போல் அல்லாமல், காஃப்கா அரிதாகவே மற்றவரால் மேற்கோள் காட்டப்படுகிறார். அதற்கு பதிலாக, அவர் தனது பார்வை மற்றும் கண்ணோட்டங்களால் சில எழுத்தாளர்கள் கவரப்படுகிறார். [13] பேராசிரியரும், இலக்கிய விமர்சகர் மற்றும் எழுத்தாளருமான சைமன் சாண்டபாங்க் என்பவர் ஜார்ஜ் லூயிஸ் போர்ஜெஸ், ஆல்பர்ட் கியூமஸ், யூஜென் இயனெஸ்கோ, ஜெ. எம். கோயட்ஸீ, மற்றும் ஜீன் பால் சார்டர் ஆகிய எழுத்தாளர்களின் படைப்புகளில் காஃப்கா ஆதிக்கம் செலுத்துவதாக குறிப்பிடுகிறார். [14] ஜோஸ் சாராமாகோ காஃப்காவின் படைப்புகளால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாக பைனான்சியல் டைம்ஸ் என்ற இலக்கிய விமர்சனப் பத்திரிக்கை குறிப்பிடுகிறது. அதேபோல ஜெ.டி. சாலிங்கர் என்பவர் காஃப்காவின் படைப்புகளை மிகவும் விரும்பியதாக எழுத்தாளரும், பதிப்பாசிரியருமான அல் சில்வெர்மென் குறிப்பிடுகிறார். 1999 ல் 99 எழுத்தாளர்கள், மேதைகள் மற்றும் இலக்கிய விமர்சகர்கள் ஆகியோர்களை உள்ளடக்கிய குழுவானது காஃப்காவின் டேர் புரோசஸ் மற்றும் டாஸ் ச்லோஸின் இரண்டு மற்றும் ஒன்பதாவது படைப்புகள் இருபதாம் நூற்றாண்டின் மிக குறிப்பிடத்தக்க செருமானிய நாவலாக குறிப்பிடுகின்றது.
தலைப்பு | ஆண்டு | ஊடகம் |
---|---|---|
எ பிரண்ட் ஆப் காஃப்கா | 1962 | சிறுகதை |
தி ட்ரையல் | 1962 | திரைப்படம் |
வாட்டர்மெலான் மேன் | 1970 | திரைப்படம் |
காஃப்கா பிராக்மன்ட் | 1985 | இசை |
காஃப்கா திக் | 1986 | நாடகம் |
பிரான்ஸ் காஃப்காவின் அற்புத வாழ்க்கை | 1993 | திரைப்படம் |
மேட் மோஜோ | 1996 | கணினி விளையாட்டு |
இன் த பீனல் காலனி | 2000 | இசை |
காஃப்கா ஆன் தி ஷோர் | 2002 | புதினம் |
காஃப்காஸ் ட்ரையல் | 2005 | இசை |
காஃப்கா'ஸ் சூப் | 2005 | நூல் |
காஃப்கா தி மியுசிகல் | 2011 | வானொலி நிகழ்ச்சி |
சவுண்ட் இன்டர்பிரடேசன் | 2012 | எடுத்துக்காட்டு |
கூகுள் டூடில் | 2013 | இணையம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Glen, Patrick J. (2007). "The Deconstruction and Reification of Law in Franz Kafka's Before the Law and The Trial" (PDF). Southern California Interdisciplinary Law Journal. Los Angeles: University of Southern California. 17 (23). Retrieved 3 August 2012.
- ↑ Bloom 2002, ப. 206.
- ↑ Durantaye 2007, ப. 315–317.
- ↑ Kafka-Franz 2012.
- ↑ Paris Review 2012.
- ↑ 6.0 6.1 Gale Research Inc. 1979, ப. 288–311.
- ↑ Brod 1960, ப. 15–16.
- ↑ Bossy 2001, ப. 100.
- ↑ Stach 2005, ப. 44, 207.
- ↑ Hawes 2008, ப. 186, 191.
- ↑ European Graduate School 2012.
- ↑ Stach 2005, ப. 43.
- ↑ Hawes 2008, ப. 4.
- ↑ Sandbank 1992, ப. 441–443.