பிரான்சிசு பெய்லி

பிரித்தானிய வானியலாளர்

பிரான்சிசு பெய்லி (Francis Baily) (28 ஏப்பிரல் 1774 – 30 ஆகத்து 1844) ஓர் ஆங்கிலேய வானியலாளர் ஆவார். இவர் சூரிய ஒளிமறைப்பின்போது அமைந்த பெய்லியின் மணிகள் நோக்கீட்டுக்காக பெரிதும் பெயர்பெற்றவர். இவர் அரசு வானியல் கழகத்தின் தொடக்க கால வரலாற்றில் குறிப்பிட்த் தகுந்தவர். இவர் அரசு வானியல் கழகத்தை நிறுவியதோடு மட்டுமன்றி, நான்குமுறை அதன் தலைவராகவும் விளங்கினார்.

பிரான்சிசு பெய்லி
Francis Baily (The Royal Astronomical Society).jpg
அரசு வானியல் கழக ஓவியம்
பிறப்புஏப்ரல் 28, 1774(1774-04-28)
நியூபரி, பெர்க்சயர், இங்கிலாந்து
இறப்பு30 ஆகத்து 1844(1844-08-30) (அகவை 70)
இலண்டன், இங்கிலாந்து
குடியுரிமைபிரித்தானியர்
தேசியம்ஆங்கிலேயர்
துறைவானியல்
அறியப்படுவதுபெய்லி மணிகள்
அரசு வானியல் கழகத் தலைவர்
விருதுகள்அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1827 & 1843)

வாழ்க்கைதொகு

பெய்லி நியூபரியில் 1774 இல் இரிச்சர்டு பெய்லி என்பவருக்குப் பிறந்தார்.[1] வட அமெர்க்காவில் 1796 முதல் 1797 வரை பல இடங்களில் சுற்றி அலைந்த பின்னர், 1799 இல் இலண்டன் பங்குச்சந்தை பரிமாற்றகத்தில் சேர்ந்தார்.. வட்டி, ஆண்டு ஈட்டம் குறித்த நெறிமுறையின் (1808) குத்தகைகளுக்கான கொள்முதல் செய்தலும் புதுப்பித்தலும் சார்ந்த அட்டவணைகள் (1802), ஆண்டு ஈட்டங்களும் உறுதிப்பாடுகளும் சார்ந்த நெறிமுறைகள் (1810) ஆகியவற்றின் தொடர்ந்த வெளியீடும் இவரை ஆயுள் வருநிகழ்வுகளின் எழுத்தாளராகப் பெயர்பெறச் செய்தது; இவர் தன் நேர்மையான தொடர் உழைப்பால் நல்ல செல்வம் திரட்டி 1825 இல் இத்தொழிலில் இருந்து வானியல் பணியில் ஈடுபட ஓய்வு பெற்றார்.

வானியல் பணிகள்தொகு

இவர் 1820 ஆம் அண்டளவில் அரசு வானியல் கழகத்தைத் தோற்றுவிப்பதில் முன்னணி வகித்தார்.[2] இவர் வானியல் கழகத்தின் பொற்பதக்கத்தை 1827 இல்[3] அக்கழகத்தின் 2881 விண்மீன்களின் அட்டவணையை உருவாக்கியதற்காகப் பெற்றார் (அரசு வானியல் கழக நினைவுக் குறிப்புகள் ii.). பிறகும் இவர் 1843 இல் இப்பொற்பதக்கத்தை மீண்டும் பெற்றார்.[3] இவர் அதன் தலைவராக நான்கு முறை தேர்வு செய்யப்பட்டார் அதாவது 1825–27, 1833–35, 1837–39 and 1843–45 ஆகிய கால இடைவெளிகளில் தேர்வு செய்யப்பட்டார்.[2][4] இந்தப் பதவியில் எட்டு ஆண்டுகளுக்கு இருந்தவர் ஜார்ஜ் பிடெல் ஏரியைத் தவிர எவரும் இலர்.[4]

இவரது எதிர்ப்புகளால் 1829 இல் நாவாயியல் வான்காட்டி சீர்திருத்தம் செய்ய நேர்ந்தது. இவர் 1832 இல் அமெரிக்க்க் கலை, அறிவியல் கல்விக்கழகத்தின் அயல்நாட்டுத் தகைமை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.[5]இவர் 1837 இல் பிரித்தானிய கழகத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அங்கு இவர் ஜோசப் தெ இலாலண்டே நிகோலசு லூயிசு தெ லா கைல்லே ஆகிய இருவரின் அட்டவணைத் தொகுப்புகளை, ஏறக்குறைய 57,000 விண்மீன்களை உள்ளடக்கிய தொகுப்புகளை பெரிதும் இவரே முடித்துக் கொடுத்தார்; இவர் பிரித்தானிய வானியல் கழகத்தின் 8377 விண்மீன்களின் அட்டவணைத்தொகுப்பை முடிக்கும் பணியை மேற்பார்வையிட்டார் (இது 1845 இல் வெளியிடப்பட்டது); இவர் மேலும், டோபியாசு மேயர், தொலமி, உலுக் பெக், டைக்கோ பிராகி, எட்மண்டு ஏலி, யோகான்னசு எவெலியசு ஆகியோரின் ஆட்டவணைத் தொகுப்புகளையும் திருத்தித் தந்துள்ளார் (அரசு வானியல் கழக நினைவுக் குறிப்புக்ள். iv, xiii.).

1836 மே 15 சூரிய ஒளிமறைப்பின்போது "பெய்லி மணிகள் " குறித்த இவரது நோக்கீடுகளுக்குப் பிறகு அதேபோன்ற பல சூரிய ஒளிமறைப்புத் தேட்டப் பயணங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிகழ்வு நிலா வெள் விளிம்புளிளின் ஒழுங்கற்ற வடிவத்தால் ஏற்படுகிறது. இதைப் பெய்லி மிக் அருமையாக விவ்ரித்திருந்தார். இந்நிகழ்வு மீண்டும் பெய்லியாலேயே 1843 ஜூலை 8 இல்பாவியாவில் நிகழ்ந்த சூரிய ஒளிமறைப்பின்போது முழு ஒளிமறைப்பிலும் விரிவாக நோக்கப்பட்டது.

 
பெய்லி மணிகள்

மற்றொரு ஆய்வில், என்றி பாசுட்டரின் தனி ஊசல் செய்முறைகளை முடித்து அவற்றில் இருந்து புவி நீள்வட்டத் தன்மையின் அளவு 1/289.48 எனக் கொணர்ந்தார் (அரசு வானியல் கழக நினைவுக் குறிப்புகள் vii.). இம்மதிப்பு நொடித் தனி ஊசல் நீளத்துக்குத் திருத்தி, அதுவரை புறக்கணிக்கப்பட்டிருந்த குறைப்புக் காரணியைப் பயன்படுத்தி நீளச் செந்தரங்களை மீள்கட்டுமானம்செய்து 1843 இல் அறிமுகப்படுத்தினார். புவியின் அடர்த்தியைக் கணக்கிட இவர் என்றி கேவண்டிசு முறையைப் பயன்படுத்தி பல உழைப்புறிஞ்சும் செய்முறைகளை (1838–1842) மேற்கொண்டார். புவியின் அடர்த்தியின் மதிப்பு 5.66 என நிறுவினார்.

இவர் இலண்டனில் 1844 ஆகத்து 30 இல் இறந்தார். இவரது உடல் தாட்சம் நகரப் புனித மேரி பேராயக் குடும்பக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரது ஜான் பிளேம்சுட்டீடு (1835) வரலாறு அக்கால அறிவியல் வரலாற்றை அறிவதற்கான முதன்மையான ஆவணம் ஆகும். இவர் பிரித்தானிய வானிய்ல் அட்டவணையை மீள் வெளியிட்டார்.

நிலாவின் பெய்லி குழிப்பள்ளம் இவரது பெயரைத் தாங்கியுள்ளது. 1855 ஆம் ஆண்டு செந்தர முழக்கோலைச் செய்ய பயன்படுத்திய பொன்மக்கலவைப் பொருள் பெய்லி பொன்மக்கலவை என அழைக்கப்படுகிறது. இதில் 16 பகுதிகள் செம்பும் 2.5 பகுதிகள் தகரமும் 1 பகுதி துத்தநாகமும் கலந்துள்ளன. இவர் பிறந்த தாட்சம் நகரின் தொடக்கநிலைப்பள்ளி, பிரான்சிசு பெய்லி கோப் தொடக்கப்பள்ளி என வழங்கப்படுகிறது.

குறிப்புகள்தொகு

  1. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-31022-0. http://www.springerreference.com/docs/html/chapterdbid/58103.html. பார்த்த நாள்: 22 August 2012. 
  2. 2.0 2.1 Dreyer, John L. E.; Turner, Herbert H. (1923). History of the Royal Astronomical Society, 1820-1920. 1. London: Royal Astronomical Society. 
  3. 3.0 3.1 "Gold Medal Winners" (PDF). RAS. 2014. 9 January 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 "LIST OF PRESIDENTS AND DATES OF OFFICE". A brief history of the RAS. Royal Astronomical Society. 10 September 2012 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Book of Members, 1780–2010: Chapter B" (PDF). American Academy of Arts and Sciences. 5 May 2011 அன்று பார்க்கப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

மேலும் படிக்கதொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சிசு_பெய்லி&oldid=3623227" இருந்து மீள்விக்கப்பட்டது