பிரான்சிஸ் ஜார்ஜ் ராப்சன் ஃபிஷர்
பிரான்சிஸ் ஜார்ஜ் ராப்சன் ஃபிஷர் (Francis George Robson Fisher) (ஏப்ரல் 9, 1921 - 26 ஜனவரி 2000) ஒரு பிரித்தானியக் கல்வியாளராகவும் மற்றும் தலைமை ஆசிரியராகவும் அறியப்படுபவர் ஆவார். இவர், பொதுவாக ராப்சன் ஃபிஷர் என்றே அறியப்படுகிறார். இவர் ரிவர்பூல் கல்லுரியில் பயன்ற போது அங்கு அவர் சிறுவர்களின் தலைவர் ஆனார். அங்கு அவர் செவ்வியல் தொடர்பான பொருளில் ஒரு கண்காட்சியில் வெற்றி பெற்றார். வர்செஸ்டர் கல்லுரியில் 1940 -1941 மற்றும் 1946 - 1947ஆம் ஆண்டுகளில் கல்வி கற்றார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் (1942-1945) வட ஆப்பிரிக்கா மற்றும் இத்தாலி ஆகியவற்றுக்கிடையேயான பீரங்கித் தாக்குதலில் பங்கேற்ற காலத்தில் கல்வியில் ஒரு தடை ஏற்பட்டது. இதற்குப் பின் அவர் கல்லூரியில் ஆங்கிலத்திற்கு மாறி தனது முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.[1] பின்னர், அவர் இங்கிலாந்தின் சாமர்செட் மாவட்டத்தில் உள்ள பாத் என்ற நகரின் கிங்வுட் பள்ளியில் பணியாளராகச் சேர்ந்து, ஆங்கிலத் துறைத்தலைவராகவும், வீட்டு மேலாளராகவும் விளங்கினார். 1959 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் டோர்சட்டில் உள்ள ப்ரான்ஸ்டன் பள்ளித் தலைமை ஆசிரியராகவும் விளங்கினார். அப்பள்ளியில் அவர் தொழில் ரீதியாக தோர்ல்ட் கோடீவிற்கு பின்னதாக அந்தப் பதவியில் இருந்தார்.[2][3] 1972 ஆம் ஆண்டில் இப்பள்ளியில் பெண்களின் வருகையை அவர் மேற்பார்வையிட்டார். இப்பள்ளியில் அவரது அறைக்கு ஃபிஷர் அறை என பெயரிடப்பட்டது. மேலும், அவர் 1974ஆம் ஆண்டில் பர்மிங்காமின் கிங் எட்வார்ட் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் ஆனார். 1982ஆம் ஆண்டில் தனது தொழில் வாழ்க்கையின் முடிவில் தலைமை ஆசிரியர்களின் மாநாட்டிற்கான செயலாளர் ஆனார். 1986ஆம் ஆண்டில் தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகு1965 ஆம் ஆண்டில் உடற்கல்வி விரிவுரையாளரும், டென்னிஸ் வீராங்கனையுமான ஷீலா டன்ரைசு என்பவரை மணந்தார். பிஷர் தனது 78 ஆவது வயதில் 2000 ஆம் ஆண்டில் இறந்தார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Obituaries பரணிடப்பட்டது 2018-02-27 at the வந்தவழி இயந்திரம், Oxford University Gazette, 2000.
- ↑ Morgan, M.C., Bryanston 1928–1978, Bryanston School, 1978. Et Nova et Vetera, Chapter 8, pages 144–120.
- ↑ Francis George Robson Fisher: Headmaster 1959 to 1974 — 9.4.21 to 26.1.00, Old Bryanstonian Yearbook, No. 64, pages 57–69, 1999–2000.
- ↑ John Dancy, Obituary, தி டைம்ஸ், 2000.