பிரிகேடியர் விதுஷா

ஈழத் தமிழ்ப் போராளி

பிரிகேடியர் விதுஷா (29. செப்டம்பர். 1969 - 4, ஏப்ரல் 2019, Brigadier Vithusha) என்று அறியப்படும் கந்தையா ஞானபூரணி என்பவர் ஒரு இலங்கைத் தமிழ்ப் போராளியும், ஈழ விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரும் ஆவார். 1985 ஆம் ஆண்டு நடந்த குமுதினி படகு படுகொலையில் தமிழர்களின் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டு மிகவும் பாதிக்கப்பட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார். இவர் ஒரு தமிழ் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது உடன் பிறந்த தம்பி விதுசன் 1999 இல் வவுனியா மாவட்டத்தில் விளக்குவைத்தகுளத்தில் இலங்கை இராணுவத்துடனான சமரில் இறந்தார். இவர் சுதந்திரப் பறவைகள் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக கிலிலி அருகே தனக்கான பயிற்சியைப் பெற்றார். இந்திய அமைதிப்படையினரின் நடவடிக்கைகளின் போது, பொருள் சேமிப்பகத்துக்குப் பொறுப்பாக இருந்தார். இவர் யாழ்ப்பாணக் கோட்டை மீதான தாக்குதலில் இறங்கிப் போராடியவர். மேலும் மகளிர் படையணி சம்பந்தப்பட்ட ஒவ்வொரு இராணுவ நடவடிக்கையிலும் இவர் குறிப்பிடத்தக்கப் பங்காற்றினார். 2009 இல் நடந்த புதுக்குடியிருப்பு போரில் இறந்தார்.[4][5][6][7][8][9][10][11][12]

பிரிகேடியர்
விதுஷா
பிறப்புகப்பூது, வல்வெட்டித்துறை, இலங்கை[1]
தேசியம்இலங்கையர்
அமைப்பு(கள்)தமிழீழ விடுதலைப் புலிகள்
இராணுவ சேவை
சார்புதமிழீழம்
சேவை/கிளைதமிழீழ விடுதலைப் புலிகள்
சேவைக்காலம்1985 –2009
கட்டளைமாலதி படையணியின் தலைவர், விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவுத் தளபதி[2][3]
போர்கள்/யுத்தங்கள்ஈழப் போர்

மேற்கோள்கள்

தொகு
  1. Thamizhini; Nedra Rodrigo (Translator) (2 November 2020). In the Shadow of a Sword: The Memoir of a Woman Leader in the LTTE. SAGE Publications. pp. 140–141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5388-684-4. பார்க்கப்பட்ட நாள் 9 July 2021. {{cite book}}: |author2= has generic name (help)
  2. "Elephant Pass Fall fifth anniversary celebrated". Tamilnet. 23 April 2005. பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.
  3. World Focus. H.S. Chhabra. 2006. p. 16. பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.
  4. "Reserved hero: Brigadier Balraj". Tamilnet. 23 May 2008. பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.
  5. "TAMILS IN INDEPENDENT CEYLON" (PDF). Tamil Nation. பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.
  6. "420 Tigers killed, troops seize key Sri Lankan area". India Today. 5 April 2009. பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.
  7. "Puthukudiyiruppu falls, top LTTE men killed". The New Indian Express. 6 April 2009. பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.
  8. "Norwegian general to meet LTTE chief". Gulf News. 4 March 2002. பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.
  9. "Military Academy's 10th anniversary celebrated". Tamilnet. 8 May 2005. பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.
  10. "Charles Anthony Brigade celebrates 15th anniversary of inauguration". Tamilnet. 11 April 2006. பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.
  11. "LTTE Commanders speak on Pirapaharan's 50th". Tamilnet. 27 November 2004. பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.
  12. "TNA MPs, Pirapaharan discuss peace talks, ISGA". Tamilnet. 20 April 2004. பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிகேடியர்_விதுஷா&oldid=3940491" இலிருந்து மீள்விக்கப்பட்டது