பிரிடினியம் குளோரோகுரோமேட்டு

கரிமவேதியியல் வினையாக்கி

பிரிடினியம் குளோரோகுரோமேட்டு (Pyridinium chlorochromate) [C5H5NH][CrO3Cl] என்ற வாய்ப்பாட்டைக் கொண்டுள்ள மஞ்சள்- ஆரஞ்சு நிறத்திலுள்ள ஓர் உப்பாகும். கரிம வேதியியல் தொகுப்பு வினைகளில், குறிப்பாக ஆல்ககால்களை கார்பனைல்களாக ஆக்சிசனேற்றம் செய்யும் வினைகளில் இச்சேர்மம் ஒரு வினையாக்கியாகப் பயன்படுகிறது. இச்சேர்மத்துடன் தொடர்புடைய பல்வேறு சேர்மங்கள் இதே வேதிப்பண்புகளுடன் அறியப்பட்டுள்ளன. பிரிடினியம் குளோரோகுரோமேட்டு பரவலாகப் பயன்படுத்தப்படாவிட்டாலும், ஆல்ககால்களை ஆல்டிகைடுகள் அல்லது கீட்டோன்களாக ஆக்சிசனேற்றம் செய்யும் வினைகளுக்கான வினையூக்கியாக தெரிவு செய்யப்படுகிறது. இவ்வினைக்கு பிற வினையாக்கிகள் பரவலாக தேர்வு செய்யப்படுவதில்லை[1]

பிரிடினியம் குளோரோகுரோமேட்டு
Pyridinium chlorochromate
Chemical structure of pyridinium chlorochromate
Ball-and-stick model of the pyridinium cation
Ball-and-stick model of the pyridinium cation
Ball-and-stick model of the chlorochromate anion
Ball-and-stick model of the chlorochromate anion
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பிரிடினியம் குளோரோகுரோமேட்டு
வேறு பெயர்கள்
பி.கு.கு
இனங்காட்டிகள்
26299-14-9 N
ChemSpider 10608386 N
InChI
  • InChI=1S/C5H5N.ClH.Cr.3O/c1-2-4-6-5-3-1;;;;;/h1-5H;1H;;;;/q;;+1;;;-1 N
    Key: LEHBURLTIWGHEM-UHFFFAOYSA-N N
  • InChI=1/C5H5N.ClH.Cr.3O/c1-2-4-6-5-3-1;;;;;/h1-5H;1H;;;;/q;;+1;;;-1/rC5H5N.ClCrO3/c1-2-4-6-5-3-1;1-2(3,4)5/h1-5H;/q;-1/p+1
    Key: LEHBURLTIWGHEM-YOEUSAHMAN
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • C1=CC=[NH+]C=C1.[O-][Cr](=O)(=O)Cl
பண்புகள்
C5H6ClCrNO3
வாய்ப்பாட்டு எடை 215.56 கி/மோல்
தோற்றம் மஞ்சள்-ஆரஞ்சு திண்மம்[1]
உருகுநிலை 205 °C (401 °F; 478 K)
பிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் அசிட்டோன், அசிட்டோநைட்ரைல், THF ஆகியனவற்றில் கரையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் புற்றுநோயூக்கி, நீர்மநிலை நஞ்சு
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் external SDS
GHS pictograms
H350, H272, H317, H410
P201, P280, P273, P221, P308+313, P302+352
R-சொற்றொடர்கள் R49, R8, R43, R50/53
S-சொற்றொடர்கள் S53, S45, S60, S61
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

கட்டமைப்பும் தயாரிப்பும் தொகு

பிரிடினியம் நேர்மின் அயனியும் [C5H5NH]+ நான்முக அமைப்பிலான குளோரோகுரோமேட்டு எதிர்மின் அயனியும், பிரிடினியம் குளோரோகுரோமேட்டு சேர்மத்தில் பகுதிப்பொருட்களாக உள்ளன. இதனுடன் தொடர்புடைய 1-பியூட்டைல்பிரிடினியம் குளோரோகுரோமேட்டு போன்ற உப்புகளும் அறியப்பட்டுள்ளன. வணிகமுறையிலும் [3] கிடைக்கும் இச்சேர்மம் தற்செயலாக கண்டறியப்பட்டது. குளிர்ந்த குரோமியம் மூவாக்சைடும், அடர் ஐதரோகுளோரிக் அமிலமும் சேர்ந்த கரைசலில் பிரிடின் சேர்க்கும் வழிமுறையில் இவ்வினையாக்கி தயாரிக்கப்படுகிறது :[4].

C5H5N + HCl + CrO3 → [C5H5NH][CrO3Cl]

மேற்கண்ட தயாரிப்பு முறையில் குரோமைல் குளோரைடு (CrO2Cl2) உருவாவதற்கும் வாய்ப்பு இருப்பதால் இதன் அளவைக் குறைப்பதற்கு மாற்று வழிமுறை கடைபிடிக்கப்படுகிறது. அதாவது குளிர்ந்த பிரிடினும் அடர் ஐதரோகுளோரிக் அமிலமும் சேர்ந்த கரைசலில் திண்மநிலையிலுள்ள குரோமியம் மூவாக்சைடு கலக்கிக் கொண்டே சேர்க்கப்படுகிறது [5].

பயன்கள் தொகு

ஆல்ககால்களின் ஆக்சிசனேற்றம் தொகு

பிரிடினியம் குளோரோகுரோமேட்டு ஓர் ஆக்சிசனேற்றியாகப் பயன்படுகிறது. குறிப்பாக முதனிலை மற்றும் இரண்டாம்நிலை ஆல்ககால்களை முறையே ஆல்டிகைடுகளாகவும் கீட்டோன்களாகவும் மாற்றுவதற்கு இது பெரிதும் பயனாகிறது என்பது ஒரு நிறுவப்பட்ட உண்மையாகும். ஆக்சிசனேற்றத்தின் போது எப்போதாவது கார்பாக்சிலிக் அமிலத்தை உருவாக்கும் தொடர்புடைய யோனெசு வினையாக்கியில் இருந்து இவ்வினையாக்கி வேறுபட்டதாகும். குறிப்பாக பிரிடினியம் குளோரோகுரோமேட்டு ஆக்சிசனேற்றம் என்பது இருகுளோரோமீத்தேனிலுள்ள பிரிடினியம் குளோரோகுரோமேட்டு தொங்கலுடன் ஓர் ஆல்ககாலைச் சேர்க்கும் வினையைக் குறிக்கும் [6][7][8]. பொதுவாக இவ்வினை,

2 [C5H5NH][CrO3Cl] + 3 R2CHOH → 2 [C5H5NH]Cl + Cr2O3 + 3 R2C=O + 3 H2O

உதாரணம்: முத்தெர்பீன் லூப்பியால், லூப்பினோனாக :[9] மாறும் ஆக்சிசனேற்ற வினை.

 

பிற பயன்கள் தொகு

மூவிணைய ஆல்ககால்களுடன் சேர்ந்து குரோமேட்டு எசுத்தர்களை இது உருவாக்குகிறது. [3,3]-சிக்மாநகர்வு வினை மூலமாக பிரிடினியம் குளோரோகுரோமேட்டு சமபகுதியங்களாக மாற்றமடைகிறது. பொதுவான ஆக்சிசனேற்றிகள் பயன்படுத்தப்பட்டால் வழக்கமாக நீரிறக்க வினையே நிகழும். ஏனெனில் மூவினைய ஆல்ககால்களை நேரடியாக ஆக்சிசனேற்றம் செய்ய முடிவதில்லை. பொருத்தமான சில நிறைவுறா ஆல்ககால்களையும் ஆல்டிகைடுகளையும் வளையயெக்சனோன்களாகவும் பிரிடினியம் குளோரோகுரோமேட்டு மாற்றுகிறது. இவ்வழிமுறை நேர்மின்னேற்ற வளையமாக்கல் ஆக்சிசனேற்றம் என்றழைக்கப்படுகிறது. உதாரணம்: (−)-சிட்ரோநெல்லாலில் இருந்து புலிகோன் தயாரித்தல். இவை தவிர ஈரைதரோபியூரான்களை, பியூரனோன்களாக மாற்றும் அல்லைலிக் ஆக்சிசனேற்ற வினைகளிலும் [1] பிரிடினியம் குளோரோகுரோமேட்டு பயன்படுகிறது.

பாதுகாப்பு தொகு

பிரிடினியம் குளோரோகுரோமேட்டு நச்சுத்தன்மை கொண்டது என்பதே இதைப் பயன்படுத்துவதில் உள்ள ஒரே குறைபாடு ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Pyridinium Chlorochromate". e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis. (2007). John Wiley & Sons. DOI:10.1002/9780470842898.rp288.pub2. 
  2. "Safety Data Sheet". Acros Organics. 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-06-10.
  3. Lowe, Derek. "The Old Stuff". In The Pipeline. Science. Archived from the original on 2015-11-21. பார்க்கப்பட்ட நாள் 2015-11-21.
  4. Corey, E. J.; Suggs, J. W. (1975). "Pyridinium Chlorochromate. An Efficient Reagent for Oxidation of Primary and Secondary Alcohols to Carbonyl Compounds". Tetrahedron Lett. 16 (31): 2647–2650. doi:10.1016/S0040-4039(00)75204-X. 
  5. Agarwal, S.; Tiwari, H. P.; Sharma, J. P. (1990). "Pyridinium Chlorochromate: An Improved Method for Its Synthesis and Use of Anhydrous Acetic Acid as Catalyst for Oxidation Reactions". Tetrahedron 46 (12): 4417–4420. doi:10.1016/S0040-4020(01)86776-4. https://archive.org/details/sim_tetrahedron_1990_46_12/page/4417. 
  6. Paquette, L. A.; Earle, M. J.; Smith, G. F. (1996). "(4R)-(+)-tert-Butyldimethylsiloxy-2-cyclopenten-1-one". Organic Syntheses 73: 36. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv9p0132. ; Collective Volume, vol. 9, p. 132
  7. Tu, Y.; Frohn, M.; Wang, Z.-X.; Shi, Y. (2003). "Synthesis of 1,2:4,5-Di-O-isopropylidene-D-erythro-2,3-hexodiulo-2,6-pyranose. A Highly Enantioselective Ketone Catalyst for Epoxidation". Organic Syntheses 80: 1. http://www.orgsyn.org/demo.aspx?prep=v80p0001. 
  8. White, J. D.; Grether, U. M.; Lee, C.-S. (2005). "(R)-(+)-3,4-Dimethylcyclohex-2-en-1-one". Organic Syntheses 82: 108. http://www.orgsyn.org/demo.aspx?prep=v82p0108. ; Collective Volume, vol. 11, p. 100
  9. Lao, A.; Fujimoto, Y.; Tatsuno, T. (1984). "Studies on the Constituents of Artemisia argyi Lévl & Vant". Chem. Pharm. Bull. 32 (2): 723–727. doi:10.1248/cpb.32.723. https://www.jstage.jst.go.jp/article/cpb1958/32/2/32_2_723/_article. பார்த்த நாள்: 2016-06-05. 

மேலும் படிக்க தொகு

புற இணைப்புகள் தொகு